குவைத்தில் அதிரடி விசா மாற்றம்: போர்ச்சூழல் சிறப்புச் சலுகைகள் செப்டம்பர் 1 முதல் ரத்து - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
குவைத்தில் அதிரடி விசா மாற்றம்: போர்ச்சூழல் சிறப்புச் சலுகைகள் செப்டம்பர் 1 முதல் ரத்து - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
போர்ச்சூழல் காரணமாக வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு விசா விலக்குகள் மற்றும் நீட்டிப்புச் சலுகைகள் அனைத்தையும் 2026 செப்டம்பர் 1 முதல் முழுமையாகத் திரும்பப் பெறுவதாகக் குவைத் உள்துறை அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம், பழைய விசா விதிமுறைகள் மற்றும் சட்டப்படியான காலவரையறைகள் மீண்டும் முழுமையாக அமலுக்கு வருகின்றன.
விடுப்பு அனுமதி (Exit/Re-entry): செப்டம்பர் 1 முதல் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வழக்கமான விதிகளின்படி 6 மாதங்களுக்குள் குவைத்திற்குத் திரும்ப வேண்டும். தாங்கள் குவைத் திரும்ப வேண்டிய கடைசித் தேதியை 'சஹால்' (Sahel) செயலி ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளலாம். (ஆகஸ்ட் 31 அல்லது அதற்கு முன்னர் வெளியேறியவர்களுக்கு ஏற்கனவே உள்ள நீட்டிப்புக் காலம் பொருந்தும்).
விசிட் விசாவில் குவைத்தில் தங்கியிருப்பவர்களுக்கான தானியங்கி நீட்டிப்புச் சலுகைகள் முடிவுக்கு வருகின்றன. விசா காலம் முடிவதற்குள் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்.
செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்
சர்வதேசச் செய்தி / குவைத் செய்திகள்
KR TV Network - KR TV Lankan Voice
#Kuwait Cancels Wartime Special Visa Concessions Effective September 1: Ministry of Interior
The Kuwaiti Ministry of Interior has officially announced the withdrawal of all special visa exemptions and automatic extension facilities granted during wartime conditions, effective September 1, 2026.
Regular immigration laws, standard timelines, and strict regulatory frameworks will be fully reinstated starting next month.
Leave and Residency Status: Expatriates traveling abroad for vacation on or after September 1 must return to Kuwait within the standard legal period (typically within 6 months). The exact return deadline can be verified via the Sahel application. (Current extensions remain valid for those who exited on or before August 31, 2026).
Automatic extension perks for visitors currently in Kuwait will cease. Visitors must strictly depart before their designated visa expiry dates under standard regulations.
Reporter: Farhana Bathurudeen
International News / Kuwait News
KR TV Network - KR TV Lankan Voice
කුවේටයේ නව වීසා නීති: යුදමය වාතාවරණය හේතුවෙන් ලබා දුන් විශේෂ සහන සැප්තැම්බර් 1 සිට අහෝසි කරයි!
යුදමය තත්ත්වය සැලකිල්ලට ගනිමින් විදේශිකයන් වෙත ලබා දී තිබූ විශේෂ වීසා නිදහස් කිරීම් සහ දීර්ඝ කිරීමේ සහන සියල්ල 2026 සැප්තැම්බර් 1 වන දින සිට සම්පූර්ණයෙන්ම ඉල්ලා අස්කර ගන්නා බව කුවේට් අභ්යන්තර අමාත්යාංශය නිවේදනය කර ඇත.
ඒ අනුව සාමාන්ය වීසා නීති සහ නීතිමය කාලසීමාවන් යළි බලාත්මක කෙරේ.
නිවාඩු මත පිටත්ව යන සේවකයින්: සැප්තැම්බර් 1 සිට නිවාඩු සඳහාරටින් පිටත්වන විදේශීය සේවකයින් සාමාන්ය නීති යටතේ මාස 6ක් ඇතුළත යළි කුවේටය වෙත පැමිණිය යුතුය. ඔබ ආපසු පැමිණිය යුතු අවසාන දිනය 'Sahel' යෙදුම (App) හරහා පරීක්ෂා කරගත හැකිය. (අගෝස්තු 31 හෝ ඊට පෙර පිටත්ව ගිය අය සඳහා දැනට පවතින විශේෂ දීර්ඝ කිරීමේ කාලය අදාළ වේ).
කුවේටයේ සංචාරක වීසා මත රැඳී සිටින පුද්ගලයින් සඳහා ලබා දී තිබූ ස්වයංක්රීය වීසා දීර්ඝ කිරීමේ සහන අවසන් වන අතර, නියමිත කාල සීමාවට පෙර ඔවුන් රටින් පිටවිය යුතුය.
වාර්තාකරු: ෆර්හානා බතුරුදීන්
ජාත්යන්තර ප්රවෘත්ති අංශය / කුවේට් පුවත්
KR TV Network - KR TV Lankan Voice

Comments