Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் எச்சில் துப்பி அசுத்தப்படுத்திய 1,029 பேருக்கு அதே இடத்தில் விநோத தண்டனை: அவர்களைக் கொண்டே சுத்தம் செய்விப்பு









 புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் எச்சில் துப்பி அசுத்தப்படுத்திய 1,029 பேருக்கு அதே இடத்தில் விநோத தண்டனை: அவர்களைக் கொண்டே சுத்தம் செய்விப்பு


இலங்கை விமானப்படையின் மனிதவளப் பங்களிப்புடன் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் வெற்றிலை எச்சில் துப்பி மற்றும் சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்திய 1,029 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மூலமாகவே அவ்விடங்களைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி பாதுகாப்புக் கண்காணிப்புக் கேமராப் பதிவுகளின் அடிப்படையில் இந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் விமானப்படை அதிகாரிகளின் உடனடித் தலையீட்டின் மூலம் அவர்கள் பிடிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கூட வெற்றிலை எச்சில்களைப் பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பி வளாகத்தில் வீசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இந்த தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளால் பேருந்து நிலையத்தில் இடம்பெறும் திருட்டுகள், சட்டவிரோதச் செயல்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி

පිටකොටුව බස් නැවතුම්පොළ අපවිත්‍ර කළ පුද්ගලයින් 1,029ක් හඳුනාගෙන ඔවුන් ලවාම එම ස්ථාන පිරිසිදු කරවයි

ගුවන් හමුදා ශ්‍රම දායකත්වයෙන් සම්පූර්ණයෙන් නවීකරණය කරන ලද පිටකොටුව මධ්‍යම බස් නැවතුම්පොළ පරිශ්‍රය තුළ තැනින් තැන බුලත් කෙළ ගසමින් සහ මූත්‍රා කරමින් අපවිත්‍ර කළ පුද්ගලයන් 1,029 දෙනෙකු හඳුනාගෙන ඔවුන් ලවාම එම ස්ථාන පිරිසිදු කරවීමට ශ්‍රී ලංකා ගුවන් හමුදාව පියවර ගෙන ඇත. පැය 24 පුරා ක්‍රියාත්මක ආරක්ෂක කැමරා දර්ශන (CCTV) පරීක්ෂා කර පොලිසිය සහ ගුවන් හමුදා නිලධාරීන්ගේ මැදිහත්වීමෙන් මොවුන් අත්අඩංගුවට ගෙන මෙම පිරිසිදු කිරීම් සඳහා යොදවා තිබේ. ඇතැම් බස් රියදුරන් සහ කොන්දොස්තරවරුන් පවා බුලත් කෙළ ප්ලාස්ටික් බෝතල්වලට දමා විසි කර තිබූ බවද මෙහිදී අනාවරණය වී ඇත. ආරක්ෂක අංශවල අඛණ්ඩ නිරීක්ෂණය සහ ක්ෂණික ක්‍රියාමාර්ග හේතුවෙන් බස් නැවතුම්පොළේ සොරකම්, අනවසර ක්‍රියා සහ පොදු දේපළ හානිවීම් දැඩි ලෙස පාලනය වී ඇති බව ශ්‍රී ලංකා ගමනාගමන මණ්ඩලයේ සභාපති සජීව කනකරත්න මහතා සඳහන් කරයි.

වාර්තාකරු: පර්හානා පදුර්දීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්

1,029 Individuals Made to Clean Pettah Central Bus Stand After Being Caught Spitting Betel Juice and Littering

The Sri Lanka Air Force (SLAF) has identified 1,029 individuals who littered, spat betel juice, or urinated across the newly renovated Pettah Central Bus Stand premises and tasked them with cleaning the respective soiled areas themselves. Monitored through a 24-hour continuous CCTV security surveillance network, the offenders were apprehended through joint interventions by police and Air Force personnel. Investigations also uncovered instances of several bus conductors and drivers discarding betel spit collected in plastic containers across the terminal grounds. Sri Lanka Transport Board (SLTB) Chairman Sajeewa Kanakaratne highlighted that strict vigilance and immediate enforcement by security forces have significantly curbed thefts, unlawful acts, and public property damage at the transit hub.

Reporter: Farhana Badurdeen
KR TV Network - Local News

.

Comments