Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மட்டக்களப்பில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 16 மில்லியன் ரூபா நிதி நிவாரணம் வழங்கப்பட்டது















 மட்டக்களப்பில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 16 மில்லியன் ரூபா நிதி நிவாரணம் வழங்கப்பட்டது


டித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீன் வளர்ப்பு மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்குக் காசோலைகளை வழங்கி வைத்தார்.


இதன்போது புயலினால் பாதிக்கப்பட்ட 31 பயனாளிகளுக்கு 14.25 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், குளங்களில் மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 5 சங்கங்களுக்கு 1.75 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளும் என மொத்தம் 16 மில்லியன் ரூபா நிதி நிவாரணம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.எம்.ஏ. நசார், மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே. நெல்சன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


எல் நினோ தாக்கத்தினால் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைந்து மீன்பிடி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


ඩිට්වා සුළි කුණාටුවෙන් පීඩාවට පත් මඩකලපුව ධීවරයින්ට රුපියල් මිලියන 16ක මූල්‍ය ආධාර


ඩිට්වා (Ditwah) සුළි කුණාටු බලපෑම හේතුවෙන් දැඩි ලෙස පීඩාවට පත් මඩකලපුව දිස්ත්‍රික්කයේ මත්ස්‍ය වගාකරුවන් සඳහා මූල්‍ය ආධාර චෙක්පත් ප්‍රදානය කිරීමේ විශේෂ වැඩසටහනක් පැරණි දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි. මඩකලපුව දිස්ත්‍රික් ලේකම් ජේ.එස්. අරුල්රාජ් මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම අවස්ථාවට දිස්ත්‍රික් සංවර්ධන කමිටු සභාපති කන්දසාමි ප්‍රභූ මහතා එක්ව ප්‍රතිලාභීන් වෙත චෙක්පත් පිරිනමන ලදී.


මෙහිදී සුළි කුණාටුවෙන් හානි සිදුවූ ප්‍රතිලාභීන් 31 දෙනෙකු සඳහා රුපියල් මිලියන 14.25ක වටිනාකමකින් යුත් චෙක්පත් සහ මිරිදිය මත්ස්‍ය පැටවුන් බෝකිරීමේ නිරත සමිති 5ක් සඳහා රුපියල් මිලියන 1.75ක චෙක්පත් වශයෙන් සමස්තයක් ලෙස රුපියල් මිලියන 16ක මුදලක් නිල වශයෙන් බෙදා දෙන ලදී. මෙම අවස්ථාවට ධීවර අමාත්‍යාංශයේ දිස්ත්‍රික් සම්බන්ධීකාරක එස්.එම්.ඒ. නසාර්, ජලජීවී වගා ව්‍යාප්ති නිලධාරී ජේ. නෙල්සන් ඇතුළු නිලධාරීන් රැසක් සහභාගී වූහ.


වත්මන් එල් නිනෝ (El Niño) කාලගුණික බලපෑම හමුවේ වැව්වල ජල මට්ටම පහත වැටීම හේතුවෙන් ධීවර ආදායම් අඩුවී ඇති පසුබිමක, ඔවුන්ගේ ආර්ථිකය ශක්තිමත් කිරීමට රජය අඛණ්ඩව කටයුතු කරන බවත්, ජල හිඟයෙන් පීඩා විඳින ජනතාවට බවුසර් මඟින් පානීය ජලය සැපයීමට පියවර ගෙන ඇති බවත් මෙහිදී අවධාරණය කෙරිණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Rs. 16 Million Financial Relief Distributed to Fishermen Affected by Cyclone Ditwah in Batticaloa


A financial compensation distribution ceremony for fish farmers and aquaculture communities affected by Cyclone Ditwah was held at the Old District Secretariat Conference Hall in Batticaloa. Presided over by Batticaloa District Secretary J.S. Arulraj, the event saw District Development Committee Chairman Kandasamy Prabhu handing over cheques to affected beneficiaries.


Under this relief initiative, financial assistance cheques totaling approximately Rs. 14.25 million were distributed among 31 affected individual beneficiaries, while Rs. 1.75 million was granted to 5 fish fingerling breeding societies, bringing the total financial allocation to Rs. 16 million. Key officials in attendance included Ministry of Fisheries District Coordinator S.M.A. Nasar and District Aquaculture Extension Officer J. Nelson.


Addressing the gathering, officials highlighted that ongoing government interventions aim to rebuild coastal and inland livelihoods amidst challenges posed by the El Niño weather pattern, which has lowered reservoir water levels and impacted fisheries income, alongside arrangements being deployed to provide drinking water bowsers to drought-affected communities.


KR TV Network - Local News

Comments