யாழில் அதிர்ச்சி: ஆலயத் திருவிழாவில் லேசர் விளக்குக் காரியத்தால் 160க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புடன் வைத்தியசாலையில் அனுமதி - அவசர எச்சரிக்கை!
யாழில் அதிர்ச்சி: ஆலயத் திருவிழாவில் லேசர் விளக்குக் காரியத்தால் 160க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புடன் வைத்தியசாலையில் அனுமதி - அவசர எச்சரிக்கை!
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் நடைபெற்ற திருவிழாவின் போது, அதிகளவில் வாணவேடிக்கைகளும், அதீத சக்தி கொண்ட லேசர் விளக்குகளும் (Laser Lights) பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த லேசர் விளக்குகளின் நேரடித் தாக்கத்தால் பார்வையாளர்களுக்குக் கண்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 160க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டத் தகவல்களின்படி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு, விசேட சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய வைத்தியசாலைகளில் இருந்தும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
திருவிழாவில் மின் இணைப்புகளை வழங்கிய நபர்களை இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், நேற்று அவ்வாலயத்திற்குச் சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை செய்துகொள்ளுமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.
மாகாணச் செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
#Temple Festival Tragic Incident: Over 160 Hospitalized Due to Severe Eye Damage Caused by High-Power Laser Lights
During a temple festival held in the Pranaipattu area of Pandatharippu, Jaffna, excessive firecrackers and high-power laser lights were utilized as part of the celebrations.
The intense exposure to the high-power lasers caused severe optical damage to attendees. Over 160 affected individuals have rushed to seek urgent medical care.
According to preliminary reports, 46 patients were admitted to the Tellippalai Base Hospital, while 120 patients were admitted to the Jaffna Teaching Hospital. Routine services at the Jaffna Teaching Hospital have been scaled down to prioritize eye treatment, with additional doctors and nurses deployed from neighboring hospitals.
Ilavalai Police have arrested individuals responsible for providing electrical connections for the event. Furthermore, the Jaffna District Government Agent and the Sandilipay Divisional Secretary have urgently advised everyone who attended the festival yesterday to undergo immediate eye check-ups at the Jaffna Teaching Hospital as a precautionary measure.
Regional News
KR TV Network - KR TV Lankan Voice
#යාපනයේ දේවාල උත්සවයකදී බිහිසුණු සිදුවීමක්: බලගතු ලේසර් කිරණ නිසා 160කට අධික පිරිසකගේ ඇස්වලට හානි වී රෝහල්ගත කෙරේ!
යාපනය, පණ්ඩුතරිප්පු - ප්රාන්පත්තු ප්රදේශයේ දේවාලයක පැවති උත්සවයකදී අධික ලෙස විදුලි ජනාකීර්ණ ගිනිකෙළි සමඟින් අධික බලයක් සහිත ලේසර් දීප්ති විදුලි පහන් (Laser Lights) භාවිත කර ඇත.
මෙම ලේසර් කිරණවල දැඩි බලපෑම නිසා උත්සවයට සහභාගී වූ බොහෝ දෙනෙකුගේ ඇස්වලට බරපතල හානි සිදුවී ඇති අතර, පීඩාවට පත් 160කට අධික පිරිසක් රෝහල් වෙත ඇතුළත් කර තිබේ.
මූලික තොරතුරු අනුව තෙල්ලිපලය
මූලික රෝහලේ 46 දෙනෙකුද, යාපනය ශික්ෂණ රෝහලේ 120 දෙනෙකුද ප්රතිකාර ලබමින් සිටිති. තත්ත්වයේ බරපතලකම සලකා බලා යාපනය රෝහලේ සාමාන්ය සේවා සීමා කර, විශේෂ ප්රතිකාර ඒකක ක්රියාත්මක කර ඇති අතර, අනෙකුත් රෝහල්වලින්ද වෛද්යවරුන් සහ හෙදියන් කැඳවා ඇත.
උත්සවය සඳහා විදුලි සම්බන්ධතා ලබා දුන් පුද්ගලයින් ඉලවාලෙයි පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ. තවද, ඊයේ දින අදාළ දේවාලයට ගිය සියලුම දෙනා වහාම යාපනය ශික්ෂණ රෝහල වෙත ගොස් පූර්වාරක්ෂක පියවරක් ලෙස ඇස් පරීක්ෂාවකට ලක්වන ලෙස යාපනය දිස්ත්රික් ලේකම් සහ චාවකච්චේරි/සංදිලිපායි ප්රාදේශීය ලේකම් දැඩිව දන්වා සිටියි.
ප්රාදේශීය ප්රවෘත්ති
KR TV Network - KR TV Lankan Voice

Comments