உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியங்கள் நிறைவு! எதிர்த்தரப்பு விசாரணை ஆகஸ்ட் 17 இல் ஆரம்பம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியங்கள் நிறைவு! எதிர்த்தரப்பு விசாரணை ஆகஸ்ட் 17 இல் ஆரம்பம்!
உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளன.
நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில், சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2023 ஒக்டோபர் 10 முதல் இதுவரை 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, 2,076 வழக்குச் சான்றுகள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
எதிர்த்தரப்பு விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
2017 நவம்பர் 01 முதல் 2019 ஏப்ரல் 21 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பி, ஆயுதப் பயிற்சி பெற்று, சதித்திட்டம் தீட்டி குண்டுத்தாக்குதல்களை நடத்தியமை மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்ததுடன், அவை தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம்
பிரதிவாதிகளுக்கு விளக்கப்பட்டன.
செய்தி: பர்ஹானா பதுறுதீன்
KR TV Network TV Lankan Voice
இலங்கைச் செய்தி
#පාස්කු ප්රහාර නඩුවේ පැමිණිල්ලේ සාක්ෂි විභාගය අවසන්! විත්තියේ සාක්ෂි විභාගය අගෝස්තු 17 ඇරඹේ!
පාස්කු ඉරිදා ත්රස්ත ප්රහාර මාලාවට අදාළ නඩුවේ පැමිණිල්ලේ සාක්ෂි විභාග කිරීම කොළඹ ත්රිපුද්ගල විශේෂ මහාධිකරණ විනිසුරු මඬුල්ල හමුවේ අවසන් විය.
නවරත්න මාරසිංහ (සභාපති), සුජීව නිශ්ශංක සහ රාමනාදන් කන්නන් යන මහාධිකරණ විනිසුරුවරුන්ගෙන් සමන්විත ත්රිපුද්ගල විනිසුරු මඬුල්ල හමුවේ මෙම නඩුව විභාග වේ.
නවුෆර් මවුලවි ඇතුළු විත්තිකරුවන් 24 දෙනෙකුට එරෙහිව චෝදනා 23,270ක් ගොනු කර ඇත.
2023 ඔක්තෝබර් 10 සිට මේ දක්වා සාක්ෂිකරුවන් 547 දෙනෙකුගෙන් සාක්ෂි සටහන් කර ඇති අතර, නඩු භාණ්ඩ 2,076ක් ලකුණු කර ඇත.
විත්තියේ සාක්ෂි විභාගය ඉදිරි අගෝස්තු 17 වන සඳුදා ආරම්භ කිරීමට නියමිතය.
2017 නොවැම්බර් 01 සිට 2019 අප්රේල් 21 දක්වා කාලය තුළ දිවයිනේ ප්රදේශ රැසක ත්රස්තවාදී මතවාද පතුරුවමින්, ආයුධ පුහුණුව ලබා, කුමන්ත්රණය කර ප්රහාර එල්ල කිරීමට අනුබල දීම සම්බන්ධයෙන් විත්තිකරුවන්ගෙන් ප්රකාශ ලබාගැනීමට තරම් ප්රමාණවත් කරුණු ඇති බව අධිකරණය තීරණය කළ අතර, ඒවා දෙමළ භාෂා පරිවර්තකවරයා මාර්ගයෙන් විත්තිකරුවන්ට පැහැදිලි කර දෙන ලදී.
වාර්තාව: ෆර්හානා බදුරුදීන්
KR TV Network
KR TV Lankan Voice
ශ්රී ලංකා පුවත්
#Easter Sunday Attack Case: Prosecution Evidence Concludes, Defense Proceedings to Begin August 17)
Prosecution evidence in the Easter Sunday terror attack case officially concluded before the Colombo Special Trial-at-Bar High Court.
The trial is being heard by a three-judge bench comprising High Court Judges Navaratne Marasinghe (President), Sujeewa Nissanka, and Ramanathan Kannan.
23,270 charges have been filed against 24 defendants, including Naufer Maulavi.
Since October 10, 2023, statements from 547 witnesses have been recorded, and 2,076 items of evidence have been marked.
Defense proceedings are scheduled to commence on Monday, August 17.
The court stated that sufficient evidence exists to call for defense statements regarding charges of spreading extremist ideologies, receiving weapons training, and conspiring to carry out attacks between November 01, 2017, and April 21, 2019. The details were explained to the defendants in Tamil through an official court translator.
Reported : Farhana Badurdeen
KR TV Network
KR TV Lankan Voice
Sri Lanka News!

Comments