Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

விபத்துக்குப் பிறகு வாழ்க்கையே மாறிய சானி கிருஷ்ணா – சிகிச்சைக்காக ரூ.21 லட்சத்துக்கும் மேல் செலவு; Rapido நிறுவனத்திடம் உதவி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு


 விபத்துக்குப் பிறகு வாழ்க்கையே மாறிய சானி கிருஷ்ணா – சிகிச்சைக்காக ரூ.21 லட்சத்துக்கும் மேல் செலவு; Rapido நிறுவனத்திடம் உதவி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு


பெங்களூரு:


2026 ஜூன் 17ஆம் தேதி பெங்களூரில் இடம்பெற்ற கடுமையான வீதி விபத்து, குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த இன்டீரியர் டிசைனரான சானி கிருஷ்ணாவின் வாழ்க்கையையே முற்றிலும் மாற்றியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


வழக்கமாக தனது சொந்த காரில் அலுவலகத்திற்குச் செல்லும் சானி, சம்பவத்தன்று காலை சுமார் 9 மணியளவில் Rapido பைக் டாக்ஸியில் பயணித்துள்ளார். பாக்மனே டெக் பார்க் அருகே இலக்கை அடைய சுமார் 300 மீற்றர் மட்டுமே இருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


முன்னால் சென்றுகொண்டிருந்த டிராக்டரை முந்திச் செல்ல பைக் ஓட்டுநர் முயன்றபோது, பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பின்னால் அமர்ந்திருந்த சானி டிராக்டரின் அடியில் சிக்கியதுடன், டிராக்டரின் பின்புற சக்கரம் அவர் மீது ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் 9 விலா எலும்புகளில் முறிவு, தோள்பட்டை எலும்பில் முறிவு மற்றும் முதுகுத்தண்டில் 3 முறிவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நுரையீரல் மற்றும் மண்ணீரலிலும் காயங்கள் ஏற்பட்டதுடன், முகத்தில் ஏற்பட்ட காயங்களால் முன்பக்க நான்கு பற்களும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


நான்கு நாட்கள் வென்டிலேட்டர் உதவியிலும், ஒன்பது நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெற்ற சானி, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இதுவரை சிகிச்சைக்காக ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சானியின் சேமிப்புடன், அவரது தந்தை, சகோதரர் மற்றும் குடும்பத்தினரின் சேமிப்புகளும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், விபத்து Rapido பைக் டாக்ஸியில் பயணம் செய்தபோது இடம்பெற்றிருந்த போதிலும், நிறுவனத்தின் தரப்பில் இருந்து நேரடி நிதியுதவி கிடைக்கவில்லை என சானி குற்றஞ்சாட்டுகிறார்.


மைக்ரோ இன்ஷூரன்ஸ் செயலி மூலம் காப்பீட்டு கோரிக்கையை முன்வைக்குமாறு மட்டுமே அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


இந்த சம்பவம், ஆப் மூலம் இயங்கும் பைக் டாக்ஸி சேவைகளின் பயணிகள் பாதுகாப்பு, ஓட்டுநர்களின் பயிற்சி மற்றும் விபத்துகளுக்குப் பின்னரான நிறுவனங்களின் பொறுப்புகள் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


ஒருகாலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக வாழ்ந்து சுமார் 14 நாடுகளுக்கு பயணம் செய்த சானி, தற்போது மற்றொருவரின் உதவியின்றி எழுந்து நிற்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்துக்குப் பின்னர் கடுமையான மனஅழுத்தத்தையும் எதிர்கொண்டு வருவதாகவும், கண்களை மூடும்போது விபத்தின் காட்சிகள் நினைவுக்கு வருவதால் மருந்துகளின் உதவியுடன் மட்டுமே தூங்க முடிவதாகவும் அவர் கூறுகிறார்.


கடந்த இரண்டு மாதங்களாக பணிக்கு செல்ல முடியாத சானிக்கு மேலும் நான்கு மாதங்கள் முழுமையான ஓய்வு தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்துக்குப் பின்னர், தனக்கான நீதியையும் தேவையான ஆதரவையும் எதிர்பார்த்து சானி பொதுமக்களிடம் தனது நிலை குறித்து பகிர்ந்து வருகிறார்.


இந்த விவகாரம் தொடர்பில் Rapido நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பதில் அல்லது விளக்கம் கிடைத்தால், அதனையும் செய்தியாக வெளியிட முடியும்.


KR TV LANKAN VOICE

www.krtvlankanvoice.lk


අනතුරකින් පසු සානී ක්‍රිෂ්ණාගේ ජීවිතයම වෙනස් වෙයි – ප්‍රතිකාර සඳහා රුපියල් ලක්ෂ 21කට අධික මුදලක් වැය වෙයි; Rapido ආයතනයෙන් සහාය නොලැබුණු බවට චෝදනා


බැංගලෝර්:


2026 ජුනි 17 වනදා බැංගලෝර්හි සිදුවූ බරපතළ රිය අනතුරක් හේතුවෙන් කුන්නමංගලම් ප්‍රදේශයේ පදිංචි අභ්‍යන්තර සැලසුම් ශිල්පිනියක වන සානී ක්‍රිෂ්ණාගේ ජීවිතය සම්පූර්ණයෙන්ම වෙනස් වී ඇති බව ඇගේ පවුලේ සාමාජිකයෝ පවසති.


සාමාන්‍යයෙන් තම පෞද්ගලික මෝටර් රථයෙන් කාර්යාලයට යන සානී, එදින උදෑසන 9.00ට පමණ Rapido බයිසිකල් ටැක්සි සේවාවකින් ගමන් කර තිබේ.


Bagmane Tech Park වෙත ළඟාවීමට මීටර් 300ක් පමණක් ඉතිරිව තිබියදී මෙම අනතුර සිදුව ඇති බව වාර්තා වේ.


ඉදිරියෙන් ගමන් කළ ට්‍රැක්ටරයක් පසුකර යාමට යතුරුපැදි රියදුරු උත්සාහ කිරීමේදී යතුරුපැදිය පාලනයෙන් ගිලිහී අනතුර සිදුව ඇති බව සඳහන් වේ. පිටුපස සිටි සානී ට්‍රැක්ටරය යටට වැටී ඇති අතර, ට්‍රැක්ටරයේ පසුපස රෝදය ඇය මතින් ගමන් කර ඇති බව පැවසේ.


අනතුරින් සානීගේ ඉළ ඇට 9ක් කැඩී ඇති අතර, උරහිස් අස්ථියට සහ කොඳු ඇට පෙළට බරපතළ තුවාල සිදුව ඇති බව සඳහන් වේ. පෙනහළු සහ ප්ලීහාවටද තුවාල සිදුව ඇති අතර, මුහුණට සිදුවූ තුවාල හේතුවෙන් ඉදිරිපස දත් හතරකටද හානි වී ඇති බව පවුලේ සාමාජිකයෝ පවසති.


දින 4ක් වෙන්ටිලේටර් ආධාරයෙන්ද, දින 9ක් දැඩි සත්කාර ඒකකයේද ප්‍රතිකාර ලබා ඇති සානී පසුව වැඩිදුර ප්‍රතිකාර සඳහා කොഴിക്കෝඩ්හි රෝහලකට මාරු කර යවා තිබේ.


මේ වනවිට ප්‍රතිකාර සඳහා පමණක් රුපියල් ලක්ෂ 21කට අධික මුදලක් වැය වී ඇති බව පවුලේ සාමාජිකයෝ පවසති.


මේ අතර, අනතුර Rapido බයිසිකල් ටැක්සියක ගමන් කරමින් සිටියදී සිදුව තිබුණද, ආයතනයෙන් තමන්ට සෘජු මූල්‍ය සහායක් නොලැබුණු බව සානී චෝදනා කරයි.


Micro Insurance යෙදුමක් හරහා රක්ෂණ හිමිකම ඉදිරිපත් කරන ලෙස පමණක් දැනුම් දුන් බවද ඇය පවසයි.


මෙම සිදුවීම මගින් යෙදුම් මත පදනම් වූ බයිසිකල් ටැක්සි සේවාවල මගී ආරක්ෂාව, රියදුරන්ගේ පුහුණුව සහ අනතුරුවලින් පසු ආයතනවල වගකීම පිළිබඳවද ප්‍රශ්න මතු වී තිබේ.


කලින් ඉතා ක්‍රියාශීලී ජීවිතයක් ගත කරමින් රටවල් 14කට පමණ සංචාරය කර තිබූ සානී, අද වනවිට වෙනත් පුද්ගලයෙකුගේ සහාය නොමැතිව නැගී සිටීමට පවා අපහසු තත්ත්වයක සිටින බව සඳහන් වේ.


අනතුරෙන් පසු දැඩි මානසික පීඩනයකටද මුහුණ දෙමින් සිටින බවත්, ඇස් වසා ගත් විට අනතුරේ දර්ශන නැවත මතකයට පැමිණෙන බැවින් ඖෂධ ආධාරයෙන් පමණක් නිදා ගැනීමට හැකි බවත් ඇය පවසයි.


පසුගිය මාස දෙකක කාලයක් රැකියාවට යාමට නොහැකි වී ඇති සානීට තවත් මාස හතරක පමණ සම්පූර්ණ විවේකයක් අවශ්‍ය විය හැකි බවද වාර්තා වේ.


මෙම අනතුර හේතුවෙන් තම ජීවිතයේ සිදුවූ දැවැන්ත වෙනසත්, තමන් මුහුණ දෙන දුෂ්කරතාවත් පිළිබඳව සානී මේ වනවිට මහජනතාව දැනුවත් කරමින් අවශ්‍ය සාධාරණය සහ සහාය අපේක්ෂා කරයි.


මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් Rapido ආයතනයේ නිල ප්‍රතිචාරයක් හෝ පැහැදිලි කිරීමක් ලැබුණහොත් එයද ඉදිරියේදී වාර්තා කිරීමට හැකි වනු ඇත.


KR TV LANKAN VOICE

www.krtvlankanvoice.lk


Accident Leaves Sani Krishna’s Life Completely Changed – Over Rs. 2.17 Million Spent on Treatment; Claims of No Direct Assistance from Rapido


Bengaluru:


A serious road accident in Bengaluru on June 17, 2026, has completely changed the life of Sani Krishna, an interior designer from the Kunnamangalam area, according to her family.


Sani, who normally travelled to work in her own car, was travelling by a Rapido bike taxi at around 9.00 a.m. on the day of the accident.


The destination, Bagmane Tech Park, was reportedly only around 300 metres away when the accident occurred.


According to the information provided by Sani, the bike rider attempted to overtake a tractor travelling ahead, causing the motorcycle to lose balance and crash. Sani, who was seated behind the rider, reportedly became trapped underneath the tractor, with the rear wheel passing over her.


She was rescued by people at the scene and taken to a nearby hospital in an auto-rickshaw before later being transferred to another hospital for further treatment.


Sani reportedly suffered nine fractured ribs, a fractured shoulder bone and three spinal fractures. She also sustained a damaged disc and displacement of two other discs. Injuries to the lungs and spleen were also reported, while facial injuries resulted in damage to four front teeth.


She spent four days on ventilator support and nine days in the intensive care unit before being transferred to a hospital in Kozhikode for further treatment.


Her family says that more than Rs. 2.17 million has already been spent on her medical treatment. Her own savings, as well as the savings of her father, brother and other family members, have reportedly been used to meet the medical expenses.


Meanwhile, Sani claims that despite the accident occurring while she was travelling in a Rapido bike taxi, she has not received direct financial assistance from the company.


She also says that she was advised only to submit an insurance claim through a micro-insurance application.


The incident has raised questions about passenger safety, rider training and the responsibilities of app-based bike taxi companies following serious accidents.


Sani, who was previously active and had travelled to around 14 countries, is now reportedly unable to stand without assistance.


In addition to her physical injuries, she says she is experiencing severe emotional distress following the accident. She reportedly struggles to sleep because images of the accident return when she closes her eyes, making it difficult for her to sleep without medication.


She has been unable to return to work for the past two months and has reportedly been advised to undergo another four months of complete rest.


Once living an active and independent life, Sani is now speaking publicly about her condition and seeking justice and support following the accident.


If Rapido provides an official response or clarification regarding the allegations, it can also be reported.


KR TV LANKAN VOICE

www.krtvlankanvoice.lk

Comments