அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியீடு - உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆக அதிகரிப்பு!
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியீடு - உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆக அதிகரிப்பு!
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவிற்கமைய இன்று (07) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக உயர்த்தப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை அடையும் போது அல்லது 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் போது (எது முந்துகிறதோ அதற்கேற்ப) ஓய்வுபெறுவார் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக உயர்த்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்தியாளர் :பர்ஹானா பதுர்தீன்
KR TV Network & KR TV Lankan Voice | உள்நாட்டுச் செய்தி
22nd Amendment to the Constitution Officially Gazetted – Supreme Court Judges' Retirement Age Raised to 67 -
The 22nd Amendment Bill to the Constitution has been officially published in an extraordinary gazette by the government. The gazette notification was issued today (07) in accordance with the directives of the Minister of Justice and National Integration.
The retirement age for Supreme Court judges is set to be increased to 67, while the retirement age for Court of Appeal judges will be fixed at 65.
The bill specifies that the Chief Justice will retire upon reaching the age of 67 or upon completing a six-year term of office, whichever occurs earlier.
The proposed constitutional amendment also seeks to increase the maximum number of Court of Appeal judges from 19 to 24.
Repoter:Farhana Bathurtheen
KR TV Network & KR TV Lankan Voice | Local News
#ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 22 වන සංශෝධන පනත් කෙටුම්පත ගැසට් කරයි - ශ්රේෂ්ඨාධිකරණ විනිසුරුවරුන්ගේ විශ්රාම වයස අවුරුදු 67 දක්වා ඉහළට
ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 22 වන සංශෝධන පනත් කෙටුම්පත රජය විසින් නිල වශයෙන් අතිවිශේෂ ගැසට් පත්රයක් මඟින් ප්රකාශයට පත් කර තිබේ. අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්යවරයාගේ නියෝගයකට අනුව අද (07) දින මෙම ගැසට් නිවේදනය නිකුත් කර ඇත.
ශ්රේෂ්ඨාධිකරණ විනිසුරුවරුන්ගේ විශ්රාම වැටුප් වයස අවුරුදු 67 දක්වා ඉහළ නංවන අතර, අභියාචනාධිකරණ විනිසුරුවරුන්ගේ විශ්රාම වයස අවුරුදු 67 ලෙස තීරණය කර ඇත. (සටහන: අභියාචනාධිකරණ වයස 65 ලෙස ගැසට් පත්රයේ දක්වා ඇත).
අග්රවිනිශ්චයකාරවරයා වයස අවුරුදු 67 සම්පූර්ණ වන විට හෝ වසර 6ක ධුර කාලයක් සම්පූර්ණ කරන විට (ඉන් කුමන දෙයක් මුලින් සිදුවේද යන්න මත පදනම්ව) විශ්රාම ගනු ඇත.
අභියාචනාධිකරණ විනිසුරු සංඛ්යාව: මෙම යෝජිත ව්යවස්ථා සංශෝධනය හරහා අභියාචනාධිකරණ විනිසුරුවරුන්ගේ උපරිම සංඛ්යාව 19 සිට 24 දක්වා ඉහළ නැංවීමටද අපේක්ෂා කෙරේ.
Reporter :Farhana Bathurtheen
KR TV Network & KR TV Lankan Voice | දේශීය පුවත්

Comments