Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22 இல் வெளியாகும் என கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அறிவிப்பு


 ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22 இல் வெளியாகும் என கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அறிவிப்பு


2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முக்கிய வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. பிரதிவாதிகள் தரப்பு வாய்மொழி வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இருதரப்பினரும் தங்களது இறுதி எழுத்துமூல சமர்ப்பணங்களை செப்டெம்பர் 08 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நவுபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்கள் மற்றும் வெடிபொருட்கள், ஆயுதங்கள், இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட 2,076 சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் சாட்சியங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


පාස්කු ප්‍රහාර නඩුවේ තීන්දුව සැප්තැම්බර් 22 වනදා ප්‍රකාශයට පත්කරන බව කොළඹ ත්‍රිපුද්ගල මහාධිකරණය දැනුම් දෙයි


2019 අප්‍රේල් 21 වන දින එල්ල වූ පාස්කු ඉරිදා ත්‍රස්ත ප්‍රහාර මාලාවට අදාළ නඩුවේ තීන්දුව එළඹෙන සැප්තැම්බර් මස 22 වනදා ප්‍රකාශයට පත්කරන බව කොළඹ විශේෂ ත්‍රිපුද්ගල මහාධිකරණ විනිසුරු මඩුල්ල නිවේදනය කර ඇත. විත්තියේ දේශන අවසන් වීමෙන් අනතුරුව, දෙපාර්ශ්වයේම අවසන් ලිඛිත දේශන සැප්තැම්බර් 08 වනදා අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියෝග කෙරිණි. නවුෆර් මවුලවි ඇතුළු විත්තිකරුවන් 24 දෙනෙකුට එරෙහිව නීතිපතිවරයා විසින් අධිචෝදනා 23,270ක් ගොනු කර තිබේ. මෙම නඩු විභාගයේදී විත්තිකරුවන්ගේ පාපොච්චාරණ 10ක් සහ පුපුරණ ද්‍රව්‍ය, ආයුධ, රසායනික ද්‍රව්‍ය ඇතුළු නඩු භාණ්ඩ 2,076ක් සාක්ෂි වශයෙන් අධිකරණය හමුවේ සටහන් කරගෙන ඇත.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Verdict on Easter Sunday Terror Attacks Case Scheduled for September 22 by Colombo Special Trial-at-Bar


The Colombo Special High Court Trial-at-Bar has announced that the final verdict in the 2019 Easter Sunday terror attacks case will be delivered on September 22. With defense oral arguments concluded, the bench directed both prosecuting and defense counsels to submit their final written submissions by September 08. The Attorney General has filed 23,270 indictments against 24 defendants, including Naufer Moulavi. During court proceedings, 10 confessions from defendants were admitted into evidence alongside 2,076 production items, including explosives, firearms, swords, and chemical precursors used in bomb manufacturing.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - Local News

Comments