ஆகஸ்ட் 3 சிவப்பு மையால் என் இதயத்தில் எழுதப்பட்ட நாள்.
Tamil/English/ Sinhala/Arabic
ஆகஸ்ட் 3
சிவப்பு மையால் என் இதயத்தில் எழுதப்பட்ட நாள்.
எனது வீடு காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாயலில் இடம்பெற்ற படுகொலை நடந்த இடத்திலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் இருந்தது. நான் பிறந்து வளர்ந்ததும் அந்தப் பகுதியில்தான். முதன்முதலாக சுஜூது செய்ததும் அந்தப் பள்ளிவாயலில்தான். நான் குர்ஆன் கற்றதும் அந்தப் பள்ளிவாயலில்தான்.
பள்ளிவாயல் படுகொலை நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு குருக்கள் மடத்தில் படுகொலை நடைபெற்றது. எங்கள் வீடு எல்லைப்பகுதியில் முதல் வீடாக இருந்ததால், யுத்தச் சூழ்நிலையின் அச்சத்தால் நாங்கள் வீட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர வேண்
டிய நிலை ஏற்பட்டது. அந்த இடம்பெயர்வே எங்களையும், எனது குடும்பத்தையும் உயிருடன் காப்பாற்றியது.
பள்ளிவாயல் படுகொலை நடந்த மறுநாள் எங்கள் உறவினர் ஒருவரின் திருமணம் நடைபெறவிருந்தது. மணமகளின் தம்பி எனது நண்பரும் ஆவார். அந்நாட்களில் திருமண வீட்டை அலங்கரிப்பது வழமையாக இருந்ததால், அந்த இரவு நாங்களும் அலங்காரப் பணியில் இருந்தோம்.
அப்போது மணமகளின் தாயார், மணப்பெண்ணின் முகத்தை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் நெட்டை ஐந்தாம் குறிச்சியில் இருந்து வாங்கி வருமாறு கூறினார். அந்த நேரத்தில் இஷா தொழுகைக்கான பாங்கு ஒலித்துக் கொண்டிருந்தது. "தொழுது விட்டு செல்கிறோம்" என்று கூறி, நானும் எனது நண்பரும் எங்கள் பழைய வீட்டின் அருகிலிருந்து ஹுசைனியா பள்ளிவாயலை நோக்கி சென்றோம்.
பள்ளிவாயலுக்கு அருகில், கனிபா ஹாஜியார் அவர்களின் சில்லறைக் கடையின் முன்பாக வெள்ளை நிற வாகனம் ஒன்று நின்றிருந்தது. அந்த வாகனத்தின் அருகில் ஆயுதம் ஏந்திய சிலர் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர், "எங்கடா போறாய்?" என்று கேட்டார்.
"பள்ளிக்குத் தொழப் போகிறேன்" என்று நான் பதிலளித்தேன்.
அப்போது அங்கு நின்றிருந்தவர்களில் எனக்குத் தெரிந்த இரண்டு முகங்களை நான் தெளிவாகக் கண்டேன். எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் வாழ்ந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளராக அறியப்பட்ட ரஞ்சித் என்பவரை சிறுவயதில் "மாமா" என்று அழைப்போம். அவர் எங்கள் வீட்டுப் பகுதிக்கு அடிக்கடி வருபவர். அவருடன் எப்போதும் அஜித் என அழைக்கப்பட்ட அவரது மெய்ப்பாதுகாவலரும் இருப்பார். அந்த இருவரையும் நான் தெளிவாக அடையாளம் கண்டேன். மற்ற முகங்கள் எனக்குப் புதியவை.
அவர் மீண்டும், "நீங்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டாம். வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார். அது எச்சரிக்கை போல இருந்தது.
நாங்கள் திரும்பிச் சென்று திருமணத்திற்குத் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு காத்தான்குடி பிரதான வீதியில் வந்தோம். டாக்டர் கலீல் அவர்களின் வைத்தியசாலைக்கு அருகில் வந்தபோது, கல் ஏற்றிய லொறியிலிருந்து கற்கள் கொட்டப்படுவது போன்ற மிகப் பெரிய சத்தம் கேட்டது.
சில நொடிகளில் நாங்கள் முன்பு கண்ட அதே வெள்ளை வாகனம் பிரதான வீதியில் அதிவேகமாகச் செல்வதைக் கண்டோம்.
அதன் பின்னரே, "பள்ளிவாயலுக்குள் சுட்டுவிட்டார்கள்!" என்ற அலறல் ஊரெங்கும் பரவியது.
நாங்களும் விரைந்து பள்ளிவாயலுக்குச் சென்றோம்.
அங்கே கண்ட காட்சி என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பலர் உயிரிழந்திருந்தனர். இன்னும் சிலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உறவினர்கள், வகுப்புத் தோழர்கள், நெருங்கிய நண்பர்கள் என எனக்குத் தெரிந்த பல முகங்கள் அங்கே உயிரற்ற நிலையில் கிடந்தன.
சில உடல்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு துப்பாக்கிச் சூட்டால் சிதைக்கப்பட்டிருந்தது. காயமடைந்தவர்களை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்றோம். சிலர் எங்கள் கைகளிலேயே உயிர் பிரிந்தார்கள்.
அந்தக் காட்சிகள் இன்றும் என் மனதில் ஆறாத ரணமாக இருக்கின்றன.
இரண்டு பள்ளிவாயல்களிலிருந்தும் ஜனாஸாக்கள் மெத்தைப்பள்ளிவாயலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நல்லடக்கம் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான உறவுகளை மண்ணில் ஒப்படைத்தோம். அந்த நாளில் மனிதர்கள் மட்டுமல்ல, வானமே அழுதது போல மழையும் பெய்தது.
இந்தப் படுகொலையை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில் அங்கு வந்தவர்களில் சிலரை என் கண்களால் கண்டவர்களில் நானும் ஒருவன்.
அந்த இரவு எத்தனையோ பிள்ளைகள் அனாதைகளானார்கள். எத்தனையோ குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து சிதறிப்போயின. ஒரு ஊரே துயரத்தில் மூழ்கியது.
மன்னிப்போம்.
ஆனால் மறக்க மாட்டோம்.
அநியாயமாக உயிரிழந்த அனைவருக்காக நாம் என்றும் பிரார்த்திப்போம். அவர்கள் அனைவரும் இறைவனின் அருளால் சுவனவாசிகளாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
அநியாயத்தைச் செய்தவர்களுக்கான நீதியை இறைவன் வழங்கியுள்ளான்; வழங்கிக் கொண்டும் இருக்கிறான். ஏனெனில் நாம் இறைவனை நம்புகிறவர்கள்.
என் இதயத்தில் ஆறாத காயமாக பதிந்திருக்கும் இந்த வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், இந்தப் பேரவலத்திற்கு பல தசாப்தங்கள் கடந்தும் இன்று வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய அளவில் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. பல குடும்பங்கள் இன்னும் தங்களின் இழப்பின் சுமையோடு வாழ்ந்து வருகின்றன.
அதேபோல், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கவில்லை என்று பலர் தொடர்ந்து உணர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அரசிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டாலும், அவை போதிய கவனத்தைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட குடும்பங்களும் சமூக அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக கண்ணால் கண்ட சாட்சிகளாக நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம். தேவையான எந்தவொரு சட்டரீதியான, சுயாதீனமான விசாரணையிலும் உண்மையைச் சொல்லத் தயாராக இருக்கிறோம்.
காத்தான்குடியில் மட்டுமல்ல, இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற படுகொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அனைத்து சம்பவங்களுக்கும் உண்மையை வெளிக்கொணரும் சுயாதீனமான விசாரணைகளும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும், சட்டத்தின் அடிப்படையில் பொறுப்புக்கூறலும், பொருத்தமான நஷ்டஈடுகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.
அநியாயமாக உயிரிழந்த அனைவரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக.
ஆமீன்.
August 3
The Day Written on My Heart in Blood
My home was located about 50 feet from the Hussainiya Mosque in Kattankudy, where the mosque massacre took place. I was born and raised in that neighborhood. It was in that mosque that I first bowed in prayer (Sujood), and it was there that I learned to recite the Holy Qur'an.
A few days before the mosque massacre, the Kurrukkal Madam massacre had taken place. As our house was the first home in the border area, the worsening security situation forced my family to flee as displaced persons. Looking back today, that decision saved our lives.
The day after the mosque massacre, one of our relatives was supposed to get married. The bride's younger brother was also my friend. As was customary in those days, we had gone to help decorate the bride's house on the night before the wedding.
During the preparations, the bride's mother asked us to collect a bridal face veil (net) from Fifth Cross Street. At that very moment, the call to the Isha prayer was being announced. We replied, "We will pray first and then go."
As my friend and I walked toward Hussainiya Mosque from our old house, we noticed a white vehicle parked near Kaniba Hajiar's grocery shop, close to the mosque. Several armed men were standing beside it.
One of them shouted, "Where are you going?"
I replied, "To the mosque for prayer."
Among those men, I clearly recognized two individuals. One was a man known as Ranjith, whom we had known since childhood and addressed as "Uncle" because he frequently visited our neighborhood. He was known in the area as an LTTE leader. Standing beside him was his bodyguard, Ajith. The remaining faces were unfamiliar to me.
He then warned us, "Don't go to the mosque. Go back home."
Taking his warning seriously, we turned back, collected the wedding item we had been sent to fetch, and continued toward the main road in Kattankudy.
When we reached near Dr. Kaleel's clinic, we suddenly heard loud sounds resembling stones being unloaded from a truck.
Within moments, we saw the same white vehicle speeding along the main road.
Then the cries spread through the town:
"They have opened fire inside the mosque!"
We rushed toward the mosque.
What I witnessed there remains impossible to erase from my memory.
Children, young men, and elderly worshippers lay in pools of blood. Many had already lost their lives, while others were desperately fighting for survival. Among them were relatives, classmates, close friends, and familiar faces from our community.
Some bodies had been so severely damaged by gunfire that they were difficult to recognize. We carried the wounded, hoping to save them. Some breathed their last in our own hands.
Those scenes remain an open wound in my heart to this day.
The victims from both mosques were brought to Meera Grand Jummah Mosque before being taken for burial. We laid hundreds of our loved ones to rest. It felt as though not only the people, but even the heavens mourned that day as rain fell during the funerals.
In my mind, there is no doubt about who carried out this massacre, because I was among those who saw some of the perpetrators with my own eyes before the attack.
That night, countless children became orphans. Countless families lost fathers, sons, brothers, and loved ones. An entire community was plunged into grief.
We forgive.
But we will never forget.
We continue to pray for every innocent victim who lost their life. We believe that, by the mercy of Allah, they are among the people of Paradise.
We also believe that ultimate justice belongs to Allah, and that every act of ظلم (oppression) will ultimately be answered before Him.
One of the most painful realities is that, even after all these years, many of the affected families have not received meaningful compensation or adequate support. Many continue to live with the emotional, social, and economic consequences of that tragedy.
Many victims' families and members of the community have also expressed that justice has yet to be fully achieved. Although petitions have been submitted to successive governments over the years, they believe their appeals have not received sufficient attention.
We are among the eyewitnesses who are still alive today. We remain willing to testify before any lawful, independent, and credible investigation to help establish the truth.
This is not only about Kattankudy. Muslims in several parts of Sri Lanka have suffered from massacres and other acts of violence over the years. The families of all innocent victims deserve truth, justice, accountability under the law, and appropriate compensation.
I share this painful chapter of my life with you so that it will never be forgotten.
Thank you for reading with patience.
Please remember all those who were unjustly killed in your prayers.
May Allah grant them the highest place in Jannatul Firdaus.
Ameen.
අගෝස්තු 3
රතු ලේයෙන් මගේ හදවතේ ලියවුණු දිනය
මගේ නිවස තිබුණේ කාත්තාන්කුඩි හුසෙයිනියා මුස්ලිම් පල්ලියේ සිදු වූ සමූහ ඝාතනය සිදුවූ ස්ථානයෙන් අඩි 50ක් පමණ දුරිනි. මම උපත ලැබුවේත් හැදී වැඩුණේත් එම ප්රදේශයේය. මගේ ජීවිතයේ පළමු සුජූද් කළේත්, අල් කුර්ආනය ඉගෙනගත්තේත් එම පල්ලිය තුළය.
පල්ලි සමූහ ඝාතනයට දින කිහිපයකට පෙර කුරුක්කල් මඩු ප්රදේශයේද සමූහ ඝාතනයක් සිදුවිය. අපගේ නිවස මායිම් ප්රදේශයේ පළමු නිවස වූ බැවින් යුද්ධයේ අවදානම් තත්ත්වය හේතුවෙන් අපට නිවස අතහැර අවතැන්වූවන් ලෙස පිටව යාමට සිදු විය. අද ආපසු හැරී බලන විට එම තීරණය අපගේ ජීවිත බේරාගත් බව තේරේ.
පල්ලි සමූහ ඝාතනය සිදු වූ පසුදින අපගේ ඥාතියෙකුගේ විවාහ උත්සවය පැවැත්වීමට නියමිතව තිබුණි. එදින රාත්රියේ විවාහ නිවස අලංකාර කිරීම සඳහා අපිද සහභාගී වී සිටියෙමු.
එම අවස්ථාවේදී මනාලියගේ මව පස්වැනි හරස් වීදියෙන් මනාලියගේ මුහුණ ආවරණය කරන දැලක් ගෙන එන ලෙස අපෙන් ඉල්ලා සිටියාය. ඒ සමඟම ඉෂා නමස්කාරයට ආරාධනා කරන අසාන් හඬ ඇසුණි. අපි “පළමුව නමස්කාරය ඉටුකරගෙන එන්නම්” යැයි පැවසුවෙමු.
මමත් මගේ මිතුරාත් හුසෙයිනියා පල්ලිය දෙසට ගමන් කරමින් සිටියදී පල්ලිය අසල කනිබා හාජියාර්ගේ කඩය ඉදිරිපිට සුදු පැහැති වාහනයක් නවතා තිබෙනු දුටුවෙමු. එහි සන්නද්ධ පුද්ගලයන් කිහිපදෙනෙකු සිටියහ.
එක් අයෙකු “කොහෙද යන්නේ?” යැයි අපෙන් විමසීය.
මම “පල්ලියට නමස්කාරයට යනවා” යැයි පිළිතුරු දුන්නෙමි.
එහි සිටි දෙදෙනෙකු මට හොඳින් හඳුනාගත හැකි විය. ඔවුන් අතර රංජිත් නම් පුද්ගලයා සහ ඔහුගේ ආරක්ෂක අජිත් සිටියහ. අනෙක් මුහුණු මට හඳුනාගත නොහැකි විය.
රංජිත් නැවතත් අපට “පල්ලියට යන්න එපා. ආපසු ගෙදර යන්න” යැයි පැවසීය.
අපි ආපසු හැරී විවාහයට අවශ්ය භාණ්ඩය රැගෙන කාත්තාන්කුඩි ප්රධාන මාර්ගයට පැමිණියෙමු.
වෛද්ය කලීල් මහතාගේ සායනය අසලට පැමිණි විට ගල් පටවාගත් ලොරියකින් ගල් බාන ශබ්දයක් මෙන් දැඩි ශබ්දයක් ඇසුණි.
ඉන් සුළු මොහොතකට පසු අපි කලින් දුටු එම සුදු වාහනය අධික වේගයෙන් ධාවනය වනු දුටුවෙමු.
ඒ සමඟම “පල්ලිය ඇතුළේ වෙඩි තබලා!” යන හඬ මුළු නගරය පුරා පැතිර ගියේය.
අපි වහාම පල්ලියට දිව ගියෙමු.
එහිදී මා දුටු දර්ශනය අදටත් මගේ මතකයෙන් මැකී නොයයි.
කුඩා දරුවන් සිට වැඩිහිටියන් දක්වා බොහෝ දෙනෙක් ලේ විලක් මැද වැටී සිටියහ. බොහෝ දෙනා මියගොස් තිබුණි. තවත් පිරිසක් ජීවිතය වෙනුවෙන් සටන් කරමින් සිටියහ. මගේ ඥාතීන්, පන්තියේ මිතුරන් සහ සමීප හිතවතුන් අතර බොහෝ දෙනෙක් එහි මියගොස් සිටියහ.
තුවාල ලැබූවන් බේරා ගැනීමට අපි උත්සාහ කළෙමු. සමහරු අපගේ දෑතේම අවසන් හුස්ම හෙළූහ.
එම දර්ශන අදටත් මගේ හදවතේ නොසුවන තුවාලයක් ලෙස පවතී.
පල්ලි දෙකෙන්ම මළ සිරුරු මීරා ජුම්මා පල්ලිය වෙත ගෙන ගොස්, ඉන් අනතුරුව භූමදානය කරන ලදී. සිය ගණනක් වූ අපගේ ආදරණීයයන්ට අවසන් ගෞරව දැක්වූ එදින, මිනිසුන් පමණක් නොව අහසද හඬා වැළපුණා සේ වැසි ඇද හැළුණි.
මෙම සමූහ ඝාතනය සිදුකළ අය පිළිබඳව මගේ මතය වෙනස් නොවේ. ප්රහාරයට පෙර ඔවුන් අතර සිටි කිහිපදෙනෙකු මාගේම ඇස්වලින් දුටු සාක්ෂිකරුවෙකු මම වෙමි.
එම රාත්රියේ දරුවන් රැසක් අනාථ වූහ. පවුල් රැසකට තම ආදරණීයයන් අහිමි විය. මුළු ප්රජාවම ශෝකයෙන් වැසී ගියේය.
අපි සමාව දෙමු.
නමුත් කිසිදා අමතක නොකරමු.
අහිංසකව ජීවිතය අහිමි වූ සියලු දෙනා වෙනුවෙන් අපි අදත් ප්රාර්ථනා කරමු. අල්ලාහ්ගේ කරුණාවෙන් ඔවුන් ස්වර්ගයේ උතුම් ස්ථානය හිමි කරගනු ඇතැයි අපි විශ්වාස කරමු.
අදටත් බොහෝ පීඩිත පවුල්වලට ප්රමාණවත් වන්දි හෝ සාධාරණයක් ලැබී නොමැති බව ඔවුන් පවසති. වසර ගණනාවක් පුරා රජයට ඉදිරිපත් කළ පෙත්සම්වලට ප්රමාණවත් අවධානයක් ලැබී නොමැති බවද ඔවුන්ගේ වේදනාවයි.
අප අතර අදටත් ජීවතුන් අතර සිටින ඇසින් දුටු සාක්ෂිකරුවන් සිටිති. නීත්යානුකූල, ස්වාධීන හා විශ්වාසනීය ඕනෑම විමර්ශනයක් ඉදිරියේ සත්යය ප්රකාශ කිරීමට අපි සූදානම්ව සිටිමු.
කාත්තාන්කුඩිය පමණක් නොව ශ්රී ලංකාවේ විවිධ ප්රදේශවලදී මුස්ලිම් ජනතාවට එරෙහිව සිදු වූ සමූහ ඝාතන හා ප්රචණ්ඩ ක්රියා පිළිබඳවද සත්යය හෙළිදරව් විය යුතුය. සියලු පීඩිතයන්ට යුක්තිය, වගවීම සහ සුදුසු වන්දි ලබාදිය යුතුය.
මෙය මගේ හදවතේ සදා නොමැකෙන වේදනාකාරී මතකයකි.
ඉවසීමෙන් මෙය කියවූ ඔබ සැමට ස්තුතියි.
අහිංසකව ජීවිතය අහිමි වූ සියලු දෙනා වෙනුවෙන් ප්රාර්ථනා කරන්න.
අල්ලාහ් ඔවුන්ට ජන්නතුල් ෆිර්දෞස්හි උතුම් ස්ථානය පිරිනමත්වා.
ආමීන්.
٣ أغسطس
اليوم الذي كُتب بالدم في قلبي
كان منزلي يقع على بُعد نحو خمسين قدمًا فقط من مسجد الحسينية في كاتانكودي، حيث وقعت المجزرة. هناك وُلدت ونشأت، وفي ذلك المسجد سجدت أول سجدة في حياتي، وتعلمت تلاوة القرآن الكريم.
قبل أيام قليلة من مجزرة المسجد، وقعت مجزرة كوروكال مادام. وبسبب الظروف الأمنية الخطيرة، اضطرت أسرتنا إلى مغادرة منزلنا والنزوح. واليوم أدرك أن ذلك النزوح كان سببًا في نجاتنا من الموت.
في اليوم التالي للمجزرة كان من المقرر إقامة زفاف أحد أقاربنا، وكنا في تلك الليلة نساعد في تجهيز منزل العروس. وعندما طلبت منا والدة العروس إحضار غطاء الوجه الخاص بالعروس، كان أذان صلاة العشاء قد رُفع، فقلنا: "سنؤدي الصلاة أولًا ثم نذهب."
وفي طريقنا إلى مسجد الحسينية، شاهدنا سيارة بيضاء متوقفة بالقرب من متجر كانيبا حاجيار، وبجانبها عدد من الرجال المسلحين.
سألنا أحدهم: "إلى أين أنتما ذاهبان؟"
فأجبته: "إلى المسجد لأداء الصلاة."
وكان بين أولئك الرجال شخصان عرفتهما بوضوح، بينما كانت بقية الوجوه غير مألوفة بالنسبة لي.
ثم قال لنا أحدهما: "لا تذهبا إلى المسجد، عودا إلى المنزل."
عدنا وأخذنا ما كنا قد أُرسلنا لإحضاره، ثم واصلنا السير في الطريق الرئيسي.
وبالقرب من عيادة الدكتور خليل، سمعنا صوتًا قويًا يشبه صوت إفراغ الحجارة من شاحنة.
وبعد لحظات رأينا السيارة البيضاء نفسها تنطلق بسرعة كبيرة.
ثم سمعنا الصرخة التي غيّرت كل شيء:
"لقد أطلقوا النار داخل المسجد!"
هرعنا إلى المسجد.
وما رأيته هناك لا يمكن أن يُمحى من ذاكرتي.
كان الأطفال والشباب وكبار السن ملقين في برك من الدماء. كان كثير منهم قد فارق الحياة، بينما كان آخرون يصارعون الموت. ومن بينهم أقارب وأصدقاء وزملاء دراسة أعرفهم جيدًا.
حاولنا إنقاذ الجرحى، لكن بعضهم فارق الحياة بين أيدينا.
ولا تزال تلك المشاهد جرحًا مفتوحًا في قلبي حتى اليوم.
نُقلت جثامين الضحايا من المسجدين إلى مسجد ميرا الجامع الكبير، ثم شُيعت إلى مثواها الأخير. وفي ذلك اليوم لم يبكِ الناس وحدهم، بل بدا وكأن السماء نفسها تبكي.
إنني من الشهود الذين رأوا بعض الأشخاص الموجودين قبل وقوع الهجوم، ولذلك فإن تلك الذكريات ما زالت راسخة في ذهني.
في تلك الليلة، أصبح كثير من الأطفال أيتامًا، وفقدت أسرٌ كثيرة آباءها وأبناءها وأحبتها، وغرقت البلدة بأكملها في الحزن.
نسامح... لكننا لن ننسى.
ونواصل الدعاء لجميع الأبرياء الذين قُتلوا ظلمًا، ونؤمن أن الله تعالى قد أكرمهم بأعلى درجات الجنة.
ومن أكثر ما يؤلم أن كثيرًا من الأسر المتضررة، وبعد مرور كل هذه السنوات، لم تحصل على تعويضات عادلة أو إنصافٍ كافٍ. كما يرى كثيرون أن العدالة لم تتحقق كاملة حتى اليوم، رغم تقديم العرائض والمطالبات الرسمية على مدى سنوات طويلة.
ولا يزال بيننا شهود عيان على قيد الحياة، ونحن مستعدون للإدلاء بشهاداتنا أمام أي تحقيق قانوني مستقل ونزيه يسعى إلى كشف الحقيقة.
وليس الأمر مقتصرًا على كاتانكودي وحدها، فقد شهدت مناطق أخرى في سريلانكا أعمال قتل وعنف استهدفت المسلمين. وتستحق جميع الأسر المتضررة معرفة الحقيقة، وتحقيق العدالة، ومحاسبة المسؤولين وفق القانون، والحصول على التعويض المناسب.
أشارككم هذه الصفحة المؤلمة من حياتي حتى لا تُنسى.
شكرًا لكل من قرأ هذه الكلمات بصبر.
نسأل الله أن يتغمد جميع الضحايا الأبرياء بواسع رحمته، وأن يسكنهم الفردوس الأعلى.
آمين.

Comments