4 வங்கிகளின் முகாமையாளர்கள் கைது: பொருட்களை இறக்குமதி செய்யாமல் 1 பில்லியன் டொலர் பரிமாற்றம்!
4 வங்கிகளின் முகாமையாளர்கள் கைது: பொருட்களை இறக்குமதி செய்யாமல் 1 பில்லியன் டொலர் பரிமாற்றம்!
கொழும்பு கோட்டை பகுதியில் இயங்கி வந்த பணப் பரிமாற்ற நிறுவனமொன்றின் ஊடாக, இலங்கைக்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் 1 பில்லியன் டொலர் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளில், 4 தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்ட 4 வங்கி முகாமையாளர்களும், தங்களது பணியிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுபோன்ற தீவிர நிதி மோசட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைகளில், இந்த மோசடியில் பிரதானமாக தொடர்புடையதாகக் கூறப்படும் நபர், கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களுக்கும் வாராந்தம் தொடர்ச்சியாகப் பணம் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு அதிகாரிக்கும் வாராந்தம் ரூ.30,000, ரூ.50,000 மற்றும் ரூ.100,000 வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர்களில் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் ரூ.1 மில்லியன் வரை பெருமளவு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
உள்நாட்டுச் செய்தி
KR TV Network - KR TV Lankan Voice
#බැංකු කළමනාකරුවන් 4 දෙනෙකු අත්අඩංගුවට: භාණ්ඩ ආනයනයකින් තොරව ඇමෙරිකානු ඩොලර් බිලියනයක මුදල් හුවමාරුවක්!
කොළඹ කොටුව ප්රදේශයේ ක්රියාත්මක වූ මූල්ය හුවමාරු ආයතනයක් හරහා, ශ්රී ලංකාවට කිසිදු භාණ්ඩයක් ආනයනය නොකර ඇමෙරිකානු ඩොලර් බිලියනයක මුදල් හුවමාරුවක් සිදු කර ඇතැයි කියන සිද්ධියක් සම්බන්ධයෙන් සිදු කරන ලද පුළුල් පරීක්ෂණවලදී, පෞද්ගලික වාණිජ බැංකු 4 ක කළමනාකරුවන් පිරිසක් අත්අඩංගුවට ගෙන ඇති බව පොලිසිය පවසයි.
පොලිස් මූල්ය අපරාධ කොට්ඨාසය (FCID) විසින් අත්අඩංගුවට ගන්නා ලද බැංකු කළමනාකරුවන් 4 දෙනාම ඔවුන්ගේ සේවා ස්ථානවලදීම අත්අඩංගුවට ගෙන ඇති බව සඳහන් වේ. ශ්රී ලංකාවේ මෙවැනි බැංකු වංචා චෝදනාවක් මත බැංකු කළමනාකරුවන් අත්අඩංගුවට ගත් පළමු අවස්ථාව මෙය බවද පොලිසිය සඳහන් කරයි.
පරීක්ෂණ වලදී අනාවරණය වී ඇත්තේ මෙම වංචාවට ප්රධාන වශයෙන් සම්බන්ධ යැයි කියන පුද්ගලයා විසින් අත්අඩංගුවට ගත් සැකකරුවන් 4 දෙනාට සතිපතා මුදල් ලබා දී ඇති බවයි. ඒ අනුව, විවිධ අවස්ථාවලදී එක් නිලධාරියෙකුට සතිපතා රුපියල් 30,000, 50,000 සහ 100,000 දක්වා මුදල් ලබා දී ඇති බව අනාවරණය වී ඇත. මීට අමතරව, අත්අඩංගුවට ගත් බැංකු කළමනාකරුවෙකුට එක් අවස්ථාවකදී රුපියල් මිලියනයක පමණ මුදලක් ලබා දී ඇති බවද විමර්ශනවලින් හෙළි වී තිබේ.
මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ (CID) මූල්ය අපරාධ කොට්ඨාසය (FCID) වැඩිදුර විමර්ශන පවත්වයි.
වාර්තාකරු ෆර්හානා :බදුරුදීන
දේශීය පුවත්
KR TV Network - KR TV Lankan Voice
4 #Bank Managers Arrested Over $1 Billion Money Transfer Without Imports!
Police have announced that managers of 4 private commercial banks have been arrested in connection with comprehensive investigations into a $1 billion money transfer conducted through a money-exchange firm operating in the Colombo Fort area, without importing any goods into Sri Lanka.
The 4 bank managers were arrested by the Police Financial Crimes Investigation Division (FCID) directly at their respective workplaces. Police stated that this marks the first time bank managers have been arrested in Sri Lanka over such financial crime allegations.
Investigations revealed that the main suspect allegedly involved in this massive scam had been providing consistent weekly payments to the 4 arrested individuals. Accordingly, varying amounts ranging from Rs. 30,000, Rs. 50,000, to Rs. 100,000 were provided weekly to different officers. Furthermore, investigations revealed that one of the arrested bank managers received approximately Rs. 1 million on a single occasion.
Further investigations into the incident are being continuously conducted by the Financial Crimes Investigation Division (FCID) of the Criminal Investigation Department (CID).
Reporter:Farhana Bathurdeen
Local News
KR TV Network - KR TV Lankan Voice

Comments