Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

4 வயதுச் சிறுமி கொடூரமாகத் தாக்கப்பட்டு பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட கொடூரம்: தாயும் கள்ளக் காதலனும் ஹாலிஎலவில் கைது!



 4 வயதுச் சிறுமி கொடூரமாகத் தாக்கப்பட்டு பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட கொடூரம்: தாயும் கள்ளக் காதலனும் ஹாலிஎலவில் கைது!


கண்டி, வத்தேகம - யட்டிராவன பகுதியில் 4 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சிறுமியின் தாயாரும் அவரது கள்ளக் காதலனும் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று (ஆகஸ்ட் 14) முற்பகல் பதுளை - ஹாலிஎல பகுதியில் வைத்து வத்தேகம பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவினரால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த நாட்களில் வத்தேகம, யட்டிராவன வீதியில் முச்சக்கர வண்டியொன்றில் அழைத்து வரப்பட்ட 4 வயதுச் சிறுமி, பலத்த காயங்களுடன் பாழடைந்த பகுதியொன்றில் இறக்கிவிடப்பட்டுக் கைவிடப்பட்டிருந்தார். இதனைக் கண்ட பிரதேசவாசிகள் சிறுமியை மீட்டு வத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததைத் தொடர்ந்து, சிறுமி மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


சம்பவம் இடம்பெற்றதிலிருந்து தலைமறைவாக இருந்த சிறுமியின் தாயாரையும் அவரது கள்ளக் காதலனையும் கைது செய்ய வத்தேகம பொலிஸார் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்தனர். இந்த நிலையில், ஹாலிஎல பகுதியில் மறைந்திருந்தபோது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் வத்தேகம பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: பர்ஹானா பதுறுதீன் 


KR TV Network

KR TV Lankan Voice

  குற்றவியல் செய்தி


#අවුරුදු 4ක කුඩා දැරියට දරුණු ලෙස පහරදී අතහැර දැමීමේ සිද්ධිය: පලාගිය මව සහ අනියම් පෙම්වතා හාලිඇලදී අත්අඩංගුවට!


මහනුවර, වත්තේගම - යටිරාවන ප්‍රදේශයේදී අවුරුදු 4ක කුඩා දැරියකට දරුණු ලෙස පහරදී, පාළු ප්‍රදේශයක අතහැර දමා ගොස් සිටියදී සොයාගැනීමේ සිද්ධියට සම්බන්ධයෙන් පලාගොස් සිටි ඇගේ මව සහ අනියම් පෙම්වතා පොලිසිය මගින් අත්අඩංගුවට ගෙන තිබේ.


අත්අඩංගුවට ගැනීම

අද (අගෝස්තු 14) පෙළවරු කාලයේදී බදුල්ල - හාලිඇල ප්‍රදේශයේදී වත්තේගම පොලිස් ස්ථානයේ විශේෂ පොලිස් කණ්ඩායමක් විසින් මොවුන් දෙදෙනා අත්අඩංගුවට ගෙන ඇත.


 සිදුවීමේ පසුබිම

පසුගිය දිනෙක වත්තේගම, යටිරාවන ප්‍රදේශයේ මාර්ගයකදී ත්‍රිරෝද රථයකින් ගෙනවිත් දැඩි ලෙස තුවාල ලබා සිටි මෙම 4 හැවිරිදි දැරිය පාළු ස්ථානයක දමාගොස් තිබුණි. ප්‍රදේශවාසීන් විසින් දැරිය බේරාගෙන වත්තේගම රෝහලට ඇතුළත් කිරීමෙන් පසු වැඩිදුර ප්‍රතිකාර සඳහා මහනුවර ශික්ෂණ රෝහලට මාරු කර යවන ලදී.


ඉදිරි පොලිස් විමර්ශන

සිද්ධියෙන් පසු ප්‍රදේශයෙන් පලාගොස් සැඟවී සිටි මව සහ ඇගේ අනියම් පෙම්වතා සෙවීම සඳහා වත්තේගම පොලිසිය විමර්ශන ආරම්භ කර තිබූ අතර, හාලිඇල ප්‍රදේශයේදී මොවුන් දෙදෙනා මෙසේ අත්අඩංගුවට පත්විය.


සැකකරුවන්ගෙන් වැඩිදුර ප්‍රශ්න කිරීම් සිදුකරන වත්තේගම පොලිසිය, මොවුන් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.


වාර්තාව: ෆර්හානා බදුරුදීන්

KR TV Network

KR TV Lankan Voice

විශේෂ පුවත් / අපරාධ පුවත්


#Brutal Assault and Abandonment of 4-Year-Old Girl: Fleeing Mother and Paramour Arrested in Hali-Ela


The mother and her paramour, who were fleeing following the brutal assault and abandonment of a 4-year-old girl in the Yatirawana area of Wattegama, Kandy, have been arrested by the police.


Arrest Details

Both suspects were taken into custody this morning (August 14) in the Hali-Ela area in Badulla by a special police team from the Wattegama Police Station.


 Incident Background

The 4-year-old child was brought in a three-wheeler and dumped in a deserted area along the Yatirawana road with severe physical injuries. Local residents rescued the child and initially admitted her to the Wattegama Hospital, after which she was transferred to the Kandy Teaching Hospital for further intensive treatment.


Ongoing Investigation

Following the incident, the mother and her paramour went into hiding. Wattegama Police launched an extensive manhunt and tracked them down to Hali-Ela, where they were arrested today.


Wattegama Police are conducting further interrogations and preparing to produce both suspects before the Magistrate's Court.


Reported : Farhana Badurdeen

KR TV Network

KR TV Lankan Voice

  Crime News

Comments