Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமியக் கலாபீடம் ஸ்தாபிக்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவு: வரலாற்றுப் பங்களிப்புகள் நினைவுகூரல்


 பேருவளை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமியக் கலாபீடம் ஸ்தாபிக்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவு: வரலாற்றுப் பங்களிப்புகள் நினைவுகூரல்


இலங்கையின் முதன்மை இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பேருவளை, சீனங்கோட்டை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமியக் கலாபீடம் (The Naleemiyyah Institute of Islamic Studies) ஸ்தாபிக்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு அதன் வரலாற்றுத் தடங்கள் மற்றும் சமூகப் பணிகள் நினைவுகூரப்பட்டுள்ளன.


இலங்கையின் தலைசிறந்த சமூகக் கொடையாளரும் தொழிலதிபருமான அல்-ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் (நளீம் ஹாஜியார்) அவர்களினால் 1973 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி (ஹிஜ்ரி 1393 ரஜப் 19) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சீனங்கோட்டையில் இந்நிறுவனம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.


அப்போதைய கல்வி அமைச்சர் கலாநிதி அல்-ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இந்நிறுவனம் திறந்து வைக்கப்பட்டதுடன், இந்தியாவின் தில்லியைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் ஹஸ்ரத் மௌலானா இனாம்-உல்-ஹஸன் அவர்களினால் கற்கைநெறிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அன்றைய தினம் கலாபீடத்தின் ஸ்தாபகரும் ஆயுட்கால தலைவருமான அல்-ஹாஜ் எம்.ஐ.எம். நளீம் அவர்களால் ஜாமிஆ பள்ளிவாசலும் திறந்து வைக்கப்பட்டது. கௌரவ செயலாளர் சி.எல்.எம். அபுல் ஹஸன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெற்றது.


கடந்த 53 ஆண்டுகளாக நவீன மற்றும் இஸ்லாமியக் கல்வியை ஒன்றிணைத்து ஆயிரக்கணக்கான துறைசார் பட்டதாரிகளையும் சமூகத் தலைவர்களையும் அறிஞர்களையும் உருவாக்கியுள்ள இந்நிறுவனத்தை ஸ்தாபித்தவர்கள், வளர்த்தெடுத்தவர்கள் மற்றும் நிதி, கல்வி, வழிகாட்டல்கள் ஊடாக ஒத்தாசை புரிந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் பிரார்த்தனைகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - ஆன்மீகச் செய்தி


බේරුවල ජාමිආ නලීමියියා ඉස්ලාමීය ආයතනය පිහිටුවා වසර 53ක් සපිරීම නිමිත්තෙන් ඓතිහාසික සේවාව සිහිපත් කෙරේ


ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම ඉස්ලාමීය උසස් අධ්‍යාපන ආයතනයක් වන බේරුවල, චීන කොටුවේ පිහිටි ජාමිආ නලීමියියා (The Naleemiyyah Institute of Islamic Studies) ආයතනය පිහිටුවා වසර 53ක් සපිරීම නිමිත්තෙන් එහි ඓතිහාසික සේවාව සහ සමාජීය දායකත්වය ගෞරවයෙන් සිහිපත් කර තිබේ.


මෙරට ප්‍රකට දානපතියෙකු වූ අල්-හාජ් එම්.අයි.එම්. නලීම් (නලීම් හාජියාර්) මහතාගේ මූලිකත්වයෙන් 1973 අගෝස්තු මස 19 වන ඉරිදා දින (හිජ්රි 1393 රජබ් 19) පස්වරු 2.30ට මෙම ආයතනය විවෘත කරන ලදී.


එවකට අධ්‍යාපන අමාත්‍ය ආචාර්ය අල්-හාජ් බද්යුදීන් මහ්මුද් මහතාගේ ප්‍රධානත්වයෙන් ජාමිආ ආයතනය විවෘත කෙරුණු අතර, ඉන්දියාවේ දිල්ලි නුවර හස්රත් මවුලානා ඉනාම්-උල්-හසන් තුමා විසින් එහි අධ්‍යයන පාඨමාලා ආරම්භ කරන ලදී. ආයතනයේ නිර්මාතෘ සහ ජීවිතාන්තය දක්වා සභාපති ධුරය දැරූ අල්-හාජ් එම්.අයි.එම්. නලීම් මහතා විසින් එදින ජාමිආ පල්ලිය විවෘත කළ අතර, ගරු ලේකම් සී.එල්.එම්. අබුල් හසන් මහතාගේ සංවිධායකත්වයෙන් මෙම ඓතිහාසික සමාරම්භක උළෙල පැවැත්විණි.


පසුගිය වසර 53ක කාලය පුරා දහස් සංඛ්‍යාත උගතුන්, විද්වතුන් සහ වෘත්තිකයන් බිහිකරමින් මෙරට අධ්‍යාපන හා සංස්කෘතික ප්‍රබෝධයට මඟපෑදූ මෙම ආයතනය ගොඩනැගීමට, පවත්වාගෙන යාමට සහ මූල්‍යමය, අධ්‍යාපනික හා උපදේශනාත්මක සහයෝගය ලබාදුන් සියලු දෙනා වෙත ආශිර්වාදය හා කෘතඥතාව පළකර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ආගමික පුවත්


Commemoration of the 53rd Anniversary of the Foundation of Jamiah Naleemiah in China Fort, Beruwala


Jamiah Naleemiah (The Naleemiyyah Institute of Islamic Studies) in China Fort, Beruwala, one of Sri Lanka's premier institutions for Islamic higher learning, marks its 53rd anniversary of academic and community service since its inception on August 19, 1973 (Rajab 19, 1393 A.H.).


Founded by visionary philanthropist Al-Haj M.I.M. Naleem (Naleem Hajiar), the institution was officially declared open during a historic ceremony presided over by the then Minister of Education, Hon. Dr. Al-Haj M. Badi-ud-din Mahmud. The academic curriculum was initiated by Hazrat Maulana Inam-ul-Hassan of Delhi, while the Founder and Life-President Al-Haj M.I.M. Naleem opened the Jamiah Masjid on the premises, coordinated by Honorary Secretary C.L.M. Abul Hassen.


Over the past 53 years, Jamiah Naleemiah has played a transformative role in integrating Islamic scholarship with contemporary higher education, producing numerous scholars, civil servants, and community leaders. On this milestone, prayers, honor, and gratitude are extended to the visionary founder, mentors, teachers, and benefactors who contributed to the institution's enduring legacy.


KR TV Network - Religious News

Comments