இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு
இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு
இந்தோனேசியாவில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று (17) மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த 15ஆம் திகதி இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் நிலவின. பேரழிவை ஏற்படுத்திய அந்த நிலநடுக்கத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பலருக்கு வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் 9,200க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
நிலநடுக்கப் பாதிப்புகளைத் தொடர்ந்து அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஏற்பட்ட மின்தடையைச் சீரமைத்து, மீண்டும் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரத் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேசச் செய்தி
KR TV Network | KR TV Lankan Voice
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
#Indonesia Struck by Another Moderate Earthquake Measuring 5.9 on the Richter Scale
Following a series of devastating earthquakes in Indonesia, another quake struck the island nation early today (17).
According to the German Research Centre for Geosciences (GFZ), the latest earthquake measured 5.9 on the Richter scale and was centered in the Flores region. Information regarding casualties or damage from this latest tremors has not yet been reported.
This comes shortly after a powerful magnitude 7.7 earthquake devastated parts of Indonesia on the 15th, followed by numerous aftershocks. The catastrophic quake has claimed at least 53 lives and left scores injured, who are currently receiving medical care in local hospitals. Furthermore, more than 9,200 displaced individuals are currently sheltered in temporary relief camps.
In the aftermath of the disasters, authorities have imposed restrictions on tourist zones across the affected regions, while the Indonesian Port Authority suspended maritime transport services. Meanwhile, emergency restoration efforts are underway to fully normalize power supplies following widespread blackouts in the affected provinces.
International News
KR TV Network | KR TV Lankan Voice
Reporter:Farhana Badurdeen
#ඉන්දුනීසියාවේ නැවතත් ප්රබල භූමිකම්පාවක්! රික්ටර් මාපකයේ 5.9 ක අගයක් සටහන් වෙයි
ඉන්දුනීසියාවේ අඛණ්ඩව සිදුවන භූමිකම්පා මාලාවට එකතු වෙමින් අද (17) අලුයම නැවතත් ප්රබල භූමිකම්පාවක් වාර්තා වී ඇත.
ජර්මානු භූ විද්යා පර්යේෂණ මධ්යස්ථානය සඳහන් කළේ ඉන්දුනීසියාවේ ෆ්ලෝරස් (Flores) ප්රදේශයේ ඇති වූ මෙම භූමිකම්පාව රික්ටර් මාපකයේ 5.9 ක අගයකින් සටහන් වී ඇති බවයි. කෙසේ වෙතත්, මෙමගින් සිදුවූ හානි පිළිබඳ තොරතුරු මෙතෙක් අනාවරණය වී නොමැත.
පසුගිය 15 වන දින ඉන්දුනීසියාවේ රික්ටර් මාපකයේ 7.7 ක අගයක් ගත් ඉතා ප්රබල භූමිකම්පාවක් සිදුවූ අතර, ඉන් පසුවද පසු அதிපනයන් (aftershocks) කිහිපයක් වාර්තා විය. එම විනාශකාරී භූමිකම්පාව හේතුවෙන් පුද්ගලයින් 53 දෙනෙකු ජීවිතක්ෂයට පත්වූ අතර තුවාල ලැබූ විශාල පිරිසක් රෝහල්ගත කර ඇත. තවද, අවතැන් වූ 9,200 කට අධික පිරිසක් සුබසාධන කඳවුරුවල රැඳී සිටිති.
මෙම තත්ත්වය හමුවේ ඉන්දුනීසියානු සංචාරක කලාප සඳහා සීමාවන් පනවා ඇති අතර වරාය අධිකාරිය විසින් සාගර ප්රවාහන සේවා තාවකාලිකව අත්හිටුවීමට පියවර ගෙන තිබේ. මේ අතර, භූමිකම්පාව හේතුවෙන් අදාළ පළාත්වල අඩාල වූ විදුලි සැපයුම යථා තත්ත්වයට පත්කිරීමේ කටයුතුද දැනට වේගවත්ව ක්රියාත්මක වේ.
ජාත්යන්තර පුවත්
KR TV Network | KR TV Lankan Voice
වාර්තාකරු :ෆර්හානා බදුරුදීන්

Comments