Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு: கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை



 நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு: கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை 


இலங்கையில் தற்போது தொடர்ச்சியாகப் பெய்துவரும் பலத்த மழை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்தங்கள் காரணமாக நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்


நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ள இந்தத் துயரச் சம்பவங்கள் குறித்த விபரங்கள் 


ஹட்டன் - பொல்பிட்டிய  இப்பகுதியில் வீடு ஒன்றின் மீது திடீரெனப் பாரிய மண்மேடு சரிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதில் 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் அடங்குவர்.


வட்டவளை  மகாவலி கங்கைக்குக் குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.


 நாவலப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மற்றும் வீடு ஒன்றின் மீது தனித்தனியாக மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்களில் 67 வயதுடைய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர உறுதிப்படுத்தியுள்ளார்.


 கினிகத்தேனை - அம்பகமுவ பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இதுவரை காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


தொடரும் கடுமையான சீரற்ற வானிலை மற்றும் மண்சரிவு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (04) ஒரு நாள் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றனர்.


செய்தியாளர்: பர்ஹானா_பதுறுதீன்


KR TV Network & KR TV Lankan Voice | உள்நாட்டுச் செய்தி


#Death Toll Rises to 7 Due to Severe Weather and Disasters Across Sri Lanka: Schools in Kandy and Nuwara Eliya Closed Today - Comprehensive Report


The death toll resulting from continuous adverse weather conditions and related disasters across the country has risen to 7, while one person remains missing and three others have sustained injuries, police reported.


Hatton - Polpitiya  Four individuals—three women aged 47, 83, and 58, and a 22-year-old youth—lost their lives when an earth mound collapsed onto a house.


 A 53-year-old individual crossing a bridge over the Mahaweli River was swept away by gushing waters and died.


Nawalapitiya (Solaganga Janaudana Village & Pasbage Korale): Two separate incidents involving earth slips crashing onto a commercial shop and a residence resulted in the deaths of two 67-year-old men, confirmed by Indika Ranasinghe, the Kandy District Deputy Director of the Disaster Management Centre.


A 45-year-old resident of the Ginigathhena - Ambagamuwa area was reported missing after being swept away by floodwaters.


In view of the hazardous weather and risk of landslides, the Central Province Education Secretary has announced that all government schools in the Kandy and Nuwara Eliya districts will remain closed today (04).


Authorities continue to urge residents in vulnerable zones to exercise extreme caution.


Reporter: Farhana_Bathurudeen


KR TV Network & KR TV Lankan Voice | Local News


#අයහපත් කාලගුණය සහ ආපදා නිසා මියගිය සංඛ්‍යාව 7 දක්වා ඉහළට


 මහනුවර සහ නුවරඑළිය දිස්ත්‍රික්කවල පාසල්වලට අද නිවාඩු


දිවයින පුරා අඛණ්ඩව පවතින අයහපත් කාලගුණ තත්ත්වය සහ ආපදා හේතුවෙන් මියගිය පුද්ගලයින්ගේ සංඛ්‍යාව 7 දක්වා ඉහළ ගොස් ඇති බව පොලිසිය පවසයි. තවත් පුද්ගලයෙක් අතුරුදහන් වී ඇති අතර තිදෙනෙකු තුවාල ලබා ඇත.


 නිවසක් මතට පස් කන්දක් කඩා වැටීමෙන් වයස අවුරුදු 47, 83 සහ 58 යන වයස්වල පසුවන කාන්තාවන් තිදෙනෙකු සහ 22 හැවිරිදි තරුණයෙකු ඇතුළු සිව්දෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව ඇත.


වටවල  මහවැලි ගඟට හරස් කර ඇති පාලම මඟින් ගමන් කළ 53 හැවිරිදි පුද්ගලයෙකු ජලයේ ගසාගෙන යාමෙන් මියගොස් තිබේ.


නුවරඑළිය සහ නාවලපිටිය  වෙළඳසැලක් සහ නිවසක් මතට පස් කඳු කඩා වැටීමෙන් 67 හැවිරිදි පුද්ගලයින් දෙදෙනෙකු මියගොස් ඇති බව ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානයේ මහනුවර දිස්ත්‍රික් නියෝජ්‍ය අධ්‍යක්ෂ ඉන්දික රණවීර තහවුරු කළේය.


ගිනිගත්හේන - අම්බගමුව ප්‍රදේශයේ 45 හැවිරිදි පුද්ගලයෙකු ජලයේ ගසාගෙන ගොස් අතුරුදහන්ව ඇත.


පවතින අවදානම් සහගත කාලගුණ තත්ත්වය සැලකිල්ලට ගනිමින්, මහනුවර සහ නුවරඑළිය දිස්ත්‍රික්කවල සියලුම රජයේ පාසල් සඳහා අද (04) දින නිවාඩු ලබා දී ඇති බව මධ්‍යම පළාත් අධ්‍යාපන ලේකම්වරයා නිවේදනය කර ඇත.


අවදානම් ප්‍රදේශවල ජනතාව දැඩි විමසිලිමත් වන ලෙස ආපදා අංශ විසින් නැවත වරක් දැනුවත් කර ඇත.


වාර්താකරු: පර්හානා_ෆතුර්දීන්


KR TV Network & KR TV Lankan Voice | දේශීය පුවත්

Comments