Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நைஜீரிய இளைஞரின் சாதனை: பார்வையற்றோருக்கு உதவும் AI ஸ்மார்ட் கண்ணாடி கண்டுபிடிப்பு


 நைஜீரிய இளைஞரின் சாதனை: பார்வையற்றோருக்கு உதவும் AI ஸ்மார்ட் கண்ணாடி கண்டுபிடிப்பு


நைஜீரியாவின் கானோ நகரைச் சேர்ந்த 20 வயதான கலீஃபா அமினு என்ற இளைஞர், பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வையுடையோர் சுயமாகவும் பாதுகாப்பாகவும் நடமாட உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை உருவாக்கியுள்ளார். AI, சென்சார்கள் மற்றும் GPS தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடி, பயனாளியின் முன்னால் உள்ள தடைகளைக் கண்டறிந்து குரல் மூலம் எச்சரிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. அத்துடன், GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனாளியின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதுடன், அவசர காலங்களில் அந்தத் தகவலை WhatsApp அல்லது மின்னஞ்சல் ஊடாக குடும்பத்தினருக்கு அனுப்பிவைக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்றவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நேரில் கண்ட அமினு, குறைந்த செலவிலான மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்தி இதன் ஆரம்ப மாதிரியை உருவாக்கியுள்ளார். வாய்ஸ் இன்டராக்ஷன் (Voice Interaction) மூலம் சுற்றுப்புறம் பற்றிய தகவல்களை பயனாளிக்கு வழங்கும் வகையில் இந்தக் கண்ணாடி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி


නයිජීරියානු තරුණයෙකුගේ නව නිපැයුමක්: දෘශ්‍යාබාධිතයන් සඳහා AI ස්මාර්ට් කන්නාඩියක්


නයිජීරියාවේ කානෝ නගරයේ පදිංචි 20 හැවිරිදි කලීෆා අමිනු නමැති තරුණයෙකු, දෘශ්‍යාබාධිත සහ අඩු පෙනුමක් ඇති පුද්ගලයින්ට ස්වාධීනව සහ ආරක්ෂිතව ගමන් කිරීමට උපකාරී වන කෘතිම බුද්ධිය (AI) සහිත ස්මාර්ට් කන්නාඩියක් නිපදවා ඇත. AI, සංවේදක සහ GPS තාක්ෂණයන් ඒකාබද්ධ කර නිපදවා ඇති මෙම කන්නාඩිය, පරිශීලකයා ඉදිරියේ ඇති බාධක හඳුනාගෙන හඬ මගින් අනතුරු ඇඟවීමේ පහසුකම ඇත. එසේම, GPS තාක්ෂණය භාවිතයෙන් පරිශීලකයා සිටින ස්ථානය සජීවීව නිරීක්ෂණය කරන අතර, හදිසි අවස්ථාවකදී එම තොරතුරු WhatsApp හෝ විද්‍යුත් තැපෑල හරහා පවුලේ අයට යැවීමට හැකි වන පරිදි ද එය නිර්මාණය කර ඇත. දෘශ්‍යාබාධිතයන් මුහුණ දෙන දුෂ්කරතා ඇසින් දුටු අමිනු, අඩු පිරිවැය ඉලෙක්ට්‍රොනික උපාංග භාවිතයෙන් මෙහි මූලික ආකෘතිය නිපදවා ඇත. හඬ හුවමාරුව (Voice Interaction) මගින් වටපිටාව පිළිබඳ තොරතුරු පරිශීලකයාට ලබා දෙන පරිදි මෙම කන්නාඩිය තවදුරටත් සංවර්ධනය කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත්


Nigerian Youth's Innovation: AI Smart Glasses to Assist the Visually Impaired


Khalifa Aminu, a 20-year-old from Kano, Nigeria, has developed AI-powered smart glasses to help visually impaired and low-vision individuals navigate independently and safely. Integrating AI, sensors, and GPS technologies, these glasses detect obstacles ahead of the user and provide voice warnings. Furthermore, utilizing GPS technology, it monitors the user's location in real-time and is designed to send this information to family members via WhatsApp or email in emergencies. Witnessing the challenges faced by visually impaired individuals, Aminu created the initial prototype using low-cost electronic components. The glasses have been further developed to provide information about the surroundings to the user through Voice Interaction.


KR TV Network - International News

Comments