BestWeb.LK 2026 விருது வழங்கும் விழாவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்திற்கு வெள்ளி விருது
BestWeb.LK 2026 விருது வழங்கும் விழாவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்திற்கு வெள்ளி விருது
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mfa.gov.lk, அண்மையில் நடைபெற்ற BestWeb.LK 2026 விருது வழங்கும் விழாவில் சிறந்த அரச இணையத்தளப் பிரிவில் வெள்ளி விருதினை வென்றுள்ளது. LK Domain Registry நிறுவனத்தினால் நடாத்தப்படும் இந்த முதன்மைப் போட்டியில், அமைச்சு தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றமை அதன் டிஜிட்டல் உருமாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான, இலகுவாக அணுகக்கூடிய மற்றும் நம்பகமான இணையத்தளத்தை உருவாக்கியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதுடன், அமைச்சின் வழிகாட்டலின் கீழ் Frontwalker (Pvt) Ltd நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் இணையத்தளங்களையும் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
BestWeb.LK 2026 සම්මාන උළෙලේදී විදේශ කටයුතු අමාත්යාංශයේ වෙබ් අඩවියට රිදී සම්මානයක්
විදේශ කටයුතු, විදේශ රැකියා සහ සංචාරක අමාත්යාංශයේ නිල වෙබ් අඩවිය වන www.mfa.gov.lk, BestWeb.LK 2026 සම්මාන උළෙලේදී හොඳම රාජ්ය වෙබ් අඩවිය කාණ්ඩය යටතේ රිදී සම්මානයෙන් පිදුම් ලබා ඇත. LK Domain Registry මගින් සංවිධානය කරනු ලබන මෙම ප්රමුඛතම තරගාවලියේදී අමාත්යාංශය ජාතික මට්ටමේ ඇගයීමකට ලක්වූ ප්රථම අවස්ථාව මෙය වන අතර, එය ඩිජිටල් පරිවර්තනයේ වැදගත් සන්ධිස්ථානයකි. වඩාත් ආරක්ෂිත, විශ්වාසදායක සහ පරිශීලක-හිතකාමී ඩිජිටල් වේදිකාවක් නිර්මාණය කිරීම උදෙසා මෙම ඇගයීම හිමිව ඇති අතර, Frontwalker (Pvt) Ltd සමාගමේ තාක්ෂණික දායකත්වයෙන් මෙය සංවර්ධනය කර ඇත. විදේශයන්හි පිහිටි ශ්රී ලංකා දූත මණ්ඩල වෙබ් අඩවි ද එක් ඩිජිටල් රාමුවක් යටතට ගෙන ඒමේ ව්යාපෘතිය යටතේ මෙම නවීකරණය සිදුකර තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Foreign Ministry Website Secures Silver Award at BestWeb.LK 2026
The official website of the Ministry of Foreign Affairs, Foreign Employment and Tourism, www.mfa.gov.lk, won the Silver Award in the Best Government Website category at the BestWeb.LK 2026 Awards Ceremony. Organized by the LK Domain Registry, this recognition marks the Ministry's first national accolade in the competition, highlighting a major milestone in its digital transformation. The award recognizes advancements in developing a secure, accessible, reliable, and user-friendly platform, developed with technical support from Frontwalker (Pvt) Ltd. The revamped website forms part of a broader project aimed at bringing all Sri Lankan overseas missions under a standardized and unified digital framework.
KR TV Network - Local News






Comments