ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தமிழ், முஸ்லிம் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தமிழ், முஸ்லிம் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பு
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 கட்சிகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள கூட்டணியின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு அவர்களுடன் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தியுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் நிர்வாக மாற்றம்: கூட்டமைப்பின் பிரதிநிதிகளினால் முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மலையகச் சமூகமும் முகங்கொடுத்துவரும் காணிப் பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அரசியலமைப்பைத் திருத்துவதுடன் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். எினும், இச்சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தை விட, புதிய தேசிய மக்கள் இணக்கப்பாடொன்றை (National Consensus) ஏற்படுத்திக் கொள்வதே அவசியமானது என்றும், அது தொடர்பான விரிவான கருத்தாடலைத் தொடங்குவதற்கான தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெவ்வேறு மக்கள் சமூகங்கள் தனித்தனியாகத் தமது தேவைகளுக்காகச் செயற்படுவதற்குப் பதிலாக, இலங்கையர்களாக இணைந்து செயற்படும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கான அடித்தளம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலத்தில் எத்தகைய இனவாத மோதல்களும் நாட்டில் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், பாராளுமன்றத்திற்கு முழுமையாகப் பொறுப்புக்கூறும் ஆட்சி முறையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு எனவும் வலியுறுத்தினார்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்காகத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அக்குழுவுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மலையக மக்களுக்கு உறுதியான காணி உரிமை வழங்குவதும் அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் அரசின் நோக்கமாகும். எதிர்காலத்தில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் எட்டப்படவுள்ள ஒப்பந்தங்களில் மலையக மக்களுக்குச் சட்டரீதியான காணி உரிமை வழங்குவது தொடர்பான சரத்துகள் உள்ளடக்கப்படும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மத்திய மலைநாட்டின் நிலைபேறான அபிவிருத்தி உறுதி செய்யப்பட வேண்டும்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை விட அதிகமான நிதித் தொகையை 2027 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
யுத்தத்தின் காரணமாக வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அந்த மக்களுக்காக இரண்டு கட்டங்களின் கீழ் 13,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறானதொரு கலந்துரையாடலில் இணைந்துகொள்ளக் கிடைத்ததையிட்டுத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜனாதிபதி, நாட்டின் பொதுவான பிரச்சினைகளின்போதும் இதேபோன்று அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்தார்.
KR TV Network & KR TV Lankan Voice | உள்நாட்டுச் செய்தி
President Anura Kumara Dissanayake Holds Key Meeting with Representatives of Tamil and Muslim Political alliyance
President Anura Kumara Dissanayake met with representatives of an alliance formed by six Tamil and Muslim political parties at the Presidential Secretariat this morning (03).
During the meeting, the representatives presented their views and proposals on several critical issues, including the introduction of a comprehensive constitutional amendment, challenges relating to the holding of Provincial Council elections, and land-related concerns faced by communities in the Northern and Eastern Provinces as well as the Malayagam community.
The President reiterated that it is the Government’s firm position that the Constitution should be amended and the Executive Presidency abolished. However, he emphasised that rather than rushing a constitutional amendment at this juncture, the priority must be to establish a new national consensus through a broad public dialogue.
The President noted that the present Government has established the foundation for a country where all communities work together as Sri Lankans rather than separately pursuing individual group interests. He pointed out that no ethnic conflicts have occurred during this period and stressed the commitment to a governance system strictly accountable to Parliament.
Stated that a Parliamentary Select Committee has been appointed to examine matters regarding the conduct of Provincial Council elections and that discussions will be held with them to resolve existing hurdles.
The Government's objective is to grant legal land ownership to the Malayagam community. Future agreements with plantation companies will include provisions ensuring legal land rights, while ensuring the sustainable preservation of the Central Highlands.
The 2027 Budget will allocate increased funding for the Ministry of Plantation and Community Infrastructure compared to this year's allocation.
Provisions will be allocated through the 2027 and 2028 Budgets to construct 13,000 houses in two phases, permanently resolving the long-standing housing needs of people displaced by the conflict.
Expressing appreciation for the constructive dialogue, the President invited all representatives to continue working collaboratively when addressing broader national issues affecting the country.
KR TV Network & KR TV Lankan Voice | Local News
ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහ දෙමළ හා මුස්ලිම් දේශපාලන සන්ධාන නියෝජිතයින් අතර ජනාධිපති කාර්යාලයේදී වැදගත් සාකච්ඡාවක්
දෙමළ සහ මුස්ලිම් දේශපාලන පක්ෂ 06ක් එකවී පිහිටුවා ගත් එකමුතුවේ නියෝජිතයින් සමඟ විශේෂ සාකච්ඡාවක් අද (03) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි.
මෙම හමුවේදී දෙපාර්ශ්වය අතර රටේ වත්මන් දේශපාලන හා සංවර්ධන අංශ පිළිබඳව පුළුල් ලෙස අදහස් හුවමාරු කර ගන්නා ලදී.
පූර්ණ ව්යවස්ථා සංශෝධනයක් ගෙන ඒම, පළාත් සභා මැතිවරණය පැවැත්වීම සම්බන්ධ ගැටලු සහ උතුරු-නැගෙනහිර මෙන්ම මලෛයගම් ප්රජාව මුහුණ දී ඇති ඉඩම් ගැටලු පිළිබඳව නියෝජිතයින් කරුණු ඉදිරිපත් කළහ. ආණ්ඩුක්රම ව්යවස්ථාව සංශෝධනය කිරීම සහ විධායක ජනාධිපති ක්රමය අහෝසි කිරීම රජයේ ස්ථාවරය වන නමුත්, කඩිමුඩියේ ගեն යන සංශෝධනයකට වඩා නව ජනතා සම්මුතියක් (National Consensus) ඇති කර ගැනීම සඳහා පුළුල් කතිකාවක් ආරම්භ කිරීමේ අවශ්යතාව ජනාධිපතිවරයා පෙන්වා දුන්නේය.
විවිධ ජන ප්රජාවන් වෙන් වෙන්ව තමන්ගේ අවශ්යතා වෙනුවෙන් කටයුතු කරනවා වෙනුවට ශ්රී ලාංකිකයින් ලෙස එක්ව කටයුතු කරන රටක් ගොඩනැගීමේ පදනම වත්මන් රජය යටතේ ස්ථාපිත වී ඇති බවත්, පසුගිය කාලය තුළ කිසිදු ජාතිවාදී ගැටුමක් ඇති නොවූ බවත් සඳහන් කළ ජනාධිපතිවරයා, පාර්ලිමේන්තුවට නිශ්චිතව වග කියන පාලන ක්රමයක් ස්ථාපිත කිරීම අපේක්ෂාව බව අවධාරණය කළේය.
පළාත් සභා මැතිවරණ පැවැත්වීම සම්බන්ධයෙන් තේරීම්කාරක සභාවක් පත් කර ඇති අතර, මතු වී ඇති ගැටලු පිළිබඳව එම කමිටුව සමඟ සාකච්ඡා කිරීමට බලාපොරොත්තු වන බව පැවසීය.
මලෛයගම් ප්රජාව සහ යුද්ධයෙන් විපතට පත් වූවන් සඳහා වන සංවර්ධන වැඩපිළිවෙළ:
මලෛයගම් ප්රජාවට ඉඩමක නීත්යානුකූල අයිතිය ලබා දීම සහ ගැටලුවලට විසඳුම් ලබා දීම අරමුණ වන අතර, ඉදිරියේදී වතු සමාගම් සමඟ එළැඹෙන ගිවිසුම්වලදී මලෛයගම් ජනතාවට ඉඩම් අයිතිය ලබා දෙන වගන්ති ඇතුළත් කිරීමට අපේක්ෂා කෙරේ. මධ්ය කඳුකරයේ තිරසාර පැවැත්ම තහවුරු කරමින් මෙයට විසඳුම් සෙවිය යුතුය.
වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම් අමාත්යාංශය වෙනුවෙන් මෙම වසරට වඩා වැඩි ප්රතිපාදන ප්රමාණයක් 2027 අයවැයෙන් වෙන් කිරීමට කටයුතු කෙරේ.
යුද්ධයෙන් නිවාස අහිමි වූ ජනතාවගේ දිගුකාලීන ගැටලුවට විසඳුමක් ලෙස, අදියර දෙකක් යටතේ නිවාස 13,000ක් ඉදි කිරීමට 2027 සහ 2028 අයවැයෙන් ප්රතිපාදන වෙන් කිරීමට නියමිතය.
මෙම සාකච්ඡාවට සම්බන්ධ වීමට ලැබීම පිළිබඳ සතුට පළ කළ ජනාධිපතිවරයා, රටේ පොදු ගැටලුවලදී අනාගතයේදීත් මේ අයුරින් එක්ව කටයුතු කරන ලෙස සියලු දෙනාට ආරාධනා කළේය.
KR TV Network & KR TV Lankan Voice | දේශීය පුවත්










Comments