Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த மூவர் பொரெல்லையில் கைது


 போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த மூவர் பொரெல்லையில் கைது


மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் வாகனப் பதிவு தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பணத்திற்காக விற்பனை செய்து வந்த மூவரை பொரெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் கடிதத் தலைப்பிலான வருமான வரி உரிம விண்ணப்பப் படிவங்கள் இரண்டு, அத்திணைக்களத்தின் போலி றப்பர் முத்திரை, போலி சமாதான நீதவான் முத்திரை, வழக்கறிஞர் ஒருவரின் போலி முத்திரை, போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டை நகல்கள் மற்றும் திணைக்களக் கோப்பு உறை ஆகியவை சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் நாராஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்த 39, 52 மற்றும் 56 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


මුදලට කූඨ ලේඛන සකස් කර අලෙවි කළ තිදෙනෙකු බොරැල්ලේදී අත්අඩංගුවට


මෝටර් රථ ප්‍රවාහන දෙපාර්තමේන්තුව අසල රථවාහන ලියාපදිංචියට අදාළව ව්‍යාජ ලේඛන සකස් කර මුදලට අලෙවි කළ පුද්ගලයින් තිදෙනෙකු බොරැල්ල පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ. ලද තොරතුරකට අනුව සිදුකළ වැටලීමේදී මෝටර් රථ ප්‍රවාහන දෙපාර්තමේන්තු ශීර්ෂ පාඨ ඇතුළත් ආදායම් බලපත්‍ර ඉල්ලුම් පත්‍ර 02ක්, එම දෙපාර්තමේන්තුවේ ව්‍යාජ රබර් මුද්‍රාවක්, ව්‍යාජ සාමවිනිසුරු රබර් මුද්‍රාවක්, නීතිඥවරයෙකුගේ ව්‍යාජ රබර් මුද්‍රාවක්, හැඳුනුම්පත් ඡායා පිටපත් සහ ලිපිගොනු කවරයක් සැකකරුවන් සන්තකයේ තිබී සොයාගෙන ඇත. මෙලෙස අත්අඩංගුවට ගෙන ඇත්තේ නාරාහේන්පිට ප්‍රදේශයේ පදිංචි 39, 52 සහ 56 යන වයස්වල පසුවන පුද්ගලයින් තිදෙනෙකි.


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Three Arrested in Borella for Selling Forged Vehicle Documents


Borella Police have arrested three individuals involved in producing and selling counterfeit vehicle registration documents near the Department of Motor Traffic. Following an operation based on a tip-off, officers recovered two revenue license application forms bearing the department's letterhead, a forged rubber stamp of the department, a fake Justice of the Peace (JP) stamp, a counterfeit lawyer's seal, photocopies of identity cards used for producing forged cards, and an official file folder. The suspects were identified as residents of Narahenpita aged 39, 52, and 56.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - Local News

Comments