இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு விசேட சட்ட மற்றும் நிர்வாக பயிற்சி – நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பங்கேற்பு!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட சட்ட மற்றும் நிர்வாகப் பயிற்சிப் பட்டறை இன்று (24) மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கும் உறுப்பினர்களுக்கு வழிகாட்டலும் பயிற்சியும் அளிப்பதே இந்தப் பயிற்சிப் பட்டறையின் முக்கிய நோக்கமாக இருந்தது.
கே.ஆர்.டி.வி நெட்வொர்க்
உள்நாட்டுச் செய்தி |
ඉලංගෙයි තමිල් අරසු පක්ෂයේ පළාත් පාලන මන්ත්රීවරුන් සඳහා විශේෂ නීතිමය සහ පරිපාලන පුහුණුවක් – පාර්ලිමේන්තු මන්ත්රී ශානක්යන් සහභාගී වෙයි!
ඉලංගෙයි තමිල් අරසු පක්ෂයේ පළාත් පාලන ආයතන මන්ත්රීවරුන් සඳහා වූ විශේෂ නීතිමය සහ පරිපාලන පුහුණු වැඩමුළුවක් අද (24) මඩකලපුව ප්රදේශයේදී පැවැත්විණි.
මෙම අවස්ථාවට ඉලංගෙයි තමිල් අරසු පක්ෂයේ පාර්ලිමේන්තු මන්ත්රී ශානක්යන් රාසමානික්කම් මහතා සහභාගී විය. ඊට අමතරව පක්ෂයේ ජ්යෙෂ්ඨ සාමාජිකයන්, නීතිඥවරුන් සහ පළාත් පාලන මන්ත්රීවරුන් විශාල පිරිසක් ද එක්ව සිටියහ.
පළාත් පාලන ආයතනවල පරිපාලන කටයුතු කාර්යක්ෂමව පවත්වාගෙන යාම සහ නීතිමය අභියෝග ජයගැනීම සඳහා මන්ත්රීවරුන් දැනුවත් කිරීම සහ පුහුණු කිරීම මෙම වැඩමුළුවේ අරමුණ විය.
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්- දේශීය පුවත
Special Legal and Administrative Training for ITAK Local Government Members – MP Shanakiyan Participates!
A special legal and administrative training workshop for the local government members of the Ilankai Tamil Arasu Katchi (ITAK) was held in Batticaloa today (24).
ITAK Parliament Member Shanakiyan Rasamanickam graced the occasion. Senior party members, legal experts, and a large number of local government representatives also participated.
The main objective of this workshop was to guide and train the members to effectively carry out the administrative functions of local government bodies and to successfully face legal challenges.
KRTV Network -Local News






Comments