Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சாய்ந்தமருதில் அதிரடிச் சுகாதாரப் பரிசோதனை: இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிர ஆய்வு!






 சாய்ந்தமருதில் அதிரடிச் சுகாதாரப் பரிசோதனை: இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிர ஆய்வு!


சாய்ந்தமருது பிரதேசத்தில் பொதுமக்களின் நல்வாழ்வையும் சுகாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் முகமாக, அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகள், தெருவோர உணவு விற்பனைக் நிலையங்கள் மற்றும் உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடித் திடீர்ச் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.


உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் சுத்தமான மற்றும் தரமான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்தல்.


சமையலறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும் பகுதிகள் உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதைச் சோதித்தல்.


காலாவதியான பொருட்கள் அல்லது முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்தல்.


 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின்போது, சுகாதார விதிகளையும் தூய்மைப் பராமரிப்பையும் முறையாகப் பின்பற்றாத கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சில விதிமீறல் நிலையங்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இத்தகைய திடீர்ச் சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனச் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.


 கே.ஆர்.டி.வி நெட்வொர்க்

உள்நாட்டுச் செய்தி


 සායින්දමරුදු ප්‍රදේශයේ මස් කඩ, වීදි ආහාර සහ ආපනශාලා ඉලක්ක කරගනිමින් පුළුල් සෞඛ්‍ය පරීක්ෂණ මෙහෙයුමක්!


සායින්දමරුදු ප්‍රදේශයේ මහජන සෞඛ්‍ය ආරක්‍ෂාව තහවුරු කිරීමේ අරමුණින්, ප්‍රදේශයේ මස් කඩ, වීදි ආහාර අළෙවි කරන ස්ථාන සහ ආපනශාලා පරීක්ෂා කිරීමේ දැඩි සෞඛ්‍ය මෙහෙයුමක් ක්‍රියාත්මක කර තිබේ.


ආපනශාලා සහ මස් කඩවල පිරිසිදු හා ප්‍රමිතියෙන් යුත් ආහාර අළෙවි කරන්නේද යන්න සොයා බැලීම.


මුළුතැන්ගෙයි සහ ආහාර සකස් කරන ස්ථානවල සෞඛ්‍ය මාර්ගෝපදේශ නිසි ලෙස අනුගමනය කරන්නේද යන්න පරීක්ෂා කිරීම.


කල් ඉකුත් වූ හෝ නුසුදුසු පරිදි ගබඩා කර ඇති ආහාර ද්‍රව්‍ය හඳුනාගෙන ඒවා ඉවත් කිරීමට කටයුතු කිරීම.


 මහජන සෞඛ්‍ය පරීක්ෂකවරුන් සහ ප්‍රාදේශීය බලධාරීන් විසින් සිදු කරන ලද මෙම වැටලීමේදී සෞඛ්‍ය නීති උල්ලංඝනය කළ වෙළඳසැල් වෙත දැඩි අවවාද කර ඇති අතර, නීති විරෝධී සහ අපිරිසිදු ලෙස පවත්වාගෙන ගිය ස්ථාන කිහිපයකට එරෙහිව නීතිමය පියවර ගැනීමට කටයුතු කර ඇත. ඉදිරියටත් මෙგනුම් පරීක්ෂා අඛණ්ඩව සිදු කරන බව සෞඛ්‍ය අංශ පවසයි.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්

|දේශීය පුවත්


 Comprehensive Public Health Inspection Rummages Meat Stalls, Street Venders, and Restaurants in Sainthamaruthu!


In a concerted effort to safeguard public health and consumer safety, health authorities and local administrators launched a series of rigorous, unannounced health inspection raids across meat shops, street food stalls, and restaurants in Sainthamaruthu.


To monitor whether fresh, hygienic, and high-quality food items are being sold to consumers.


To inspect whether kitchens and food preparation zones strictly adhere to sanitation guidelines.


To identify, confiscate, and dispose of expired or improperly stored food products.


 Led by Public Health Inspectors and local administrative officers, the surprise inspections resulted in stern warnings issued to establishment owners failing to maintain basic hygiene standards, alongside legal actions initiated against severe violations. Health officials noted that such surprise crackdowns will continue in the future to ensure total compliance.


 KRTV Network-Local News

Comments