முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அப்பதவியை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால், இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்திருக்க முடியாது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அப்பதவியை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால், இலங்கையின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்திருக்க முடியாது என அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளைச் வெற்றிகரமாக்குவதற்கும், அந்த வேலைத்திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதற்கும் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் தீர்மானமிக்கதாக இருந்ததாக முன்னாள் தூதுவர் சுட்டிக்காட்டினார். மேலும், அன்று தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அமெரிக்க தூதுவர் பதவியை ஏற்ற்றுக்கொண்டமை சரியான தீர்மானம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாகவும், இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு முதன்முதலில் முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் தமது பங்களிப்பே முக்கிய காரணமாக அமைந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதேவேளை, இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் வரிகளுக்கான சலுகைகள் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ஆய்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் அமெரிக்கக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது இலங்கைப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார். அத்துடன், புதிய அரசாங்கத்துடன் தனக்கு எந்தவித பதவிகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளோ அல்லது தொடர்புகளோ இடம்பெறவில்லை என்றும், தான் எவரிடமும் பதவிகளைக் கோரவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
#හිටපු ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා එම ධුරයට පත් නොවන්නට මෙරට කඩා වැටුණු ආර්ථිකය යථා තත්ත්වයට පත් කර ගැනීමට කිසිසේත්ම හැකියාවක් නොලැබෙනු ඇති බව ඇමරිකා එක්සත් ජනපදයේ හිටපු ශ්රී ලංකා තානාපති මහින්ද සමරසිංහ මහතා ප්රකාශ කරයි. හිරු නාලිකාවේ පැවැති විශේෂ සාකච්ඡාවකට එක්වෙමින් ඔහු මෙම අදහස් පළ කළේය.
ජාත්යන්තර මූල්ය අරමුදල (IMF) සමඟ පැවැති සාකච්ඡා සාර්ථක කර ගැනීමටත්, අදාළ වැඩපිළිවෙළ නිසි පරිදි ක්රියාත්මක කිරීමටත් රනිල් වික්රමසිංහ මහතාගේ නායකත්වය තීරණාත්මක වූ බව හිටපු තානාපතිවරයා පෙන්වා දුන්නේය. එමෙන්ම පාර්ලිමේන්තු මන්ත්රී ධුරයෙන් ඉල්ලා අස්වී ඇමරිකානු තානාපති ධුරය භාර ගැනීමට තමා එදා ගත් තීරණය නිවැරදි බව අද වන විට තහවුරු වී ඇති බවත්, ජාත්යන්තර මූල්ය අරමුදල වෙත ශ්රී ලංකාව වෙනුවෙන් මුල්ම යෝජනාව ඉදිරිපත් කිරීමට හැකි වූයේ තානාපතිවරයා ලෙස තමා ලබා දුන් දායකත්වය නිසා බවත් ඔහු වැඩිදුරටත් මතක් කර සිටියේය.
ඇමරිකා එක්සත් ජනපදය විසින් ශ්රී ලංකාවේ ශ්රමිකයන් සහ තීරුබදු සහන සම්බන්ධයෙන් සිදුකරන විමර්ශන පිළිබඳව ද අදහස් දැක්වූ මහින්ද සමරසිංහ මහතා, ඉදිරියේදී ප්රතිපත්තිමය වෙනස්කම් සිදුවහොත් එමගින් මෙරට ආර්ථිකයට යම් අවදානමක් ඇතිවිය හැකි බවට ද අනතුරු ඇඟවීය. වත්මන් රජය සමඟ තමාගේ සම්බන්ධතාව පිළිබඳව අදහස් දක්වමින් ඔහු සඳහන් කළේ තමා කිසිවෙකුගෙන් තනතුරු ඉල්ලා නොමැති අතර, නව රජය සමඟ කිසිදු තනතුරක් සම්බන්ධයෙන් සාකච්ඡාවක් හෝ දුරකථන සංවාදයක් සිදු වී නොමැති බවයි.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
#Former Sri Lankan Ambassador to the United States Mahinda Samarasinghe stated that Sri Lanka's economic recovery would have been virtually impossible without the leadership of former President Ranil Wickremesinghe. He made these remarks during a special interview with Hiru TV.
Highlighting Wickremesinghe’s role, Samarasinghe noted that his leadership was decisive in successfully securing and implementing the International Monetary Fund (IMF) program. He added that his own decision to resign as a Member of Parliament to accept the ambassadorship in Washington was proven right, as it enabled him to facilitate Sri Lanka’s initial proposal to the IMF.
Commenting on US inquiries into Sri Lankan labor practices and tariff concessions, Samarasinghe warned that potential policy shifts by the US could pose risks to Sri Lanka's economic stability. He further clarified that he has not requested any position from the current government, nor has he engaged in any discussions or phone calls regarding posts in the new administration.
KR TV Network
KR TV Lankan Voice
Local News

Comments