Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கல்னேவ பகுதியில் காணாமல் போன இரண்டு வயதுக் குழந்தை கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு


 கல்னேவ பகுதியில் காணாமல் போன இரண்டு வயதுக் குழந்தை கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு


அநுராதபுரம் மாவட்டம் கல்னேவ - கலேவெவ வீதிப் பகுதியிலுள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையைக் காணவில்லை என அதன் தந்தையினால் கல்னேவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டின் அருகிலுள்ள கால்வாய்ப் பாலத்தின் அடியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. உடனடியாக கல்னேவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அக்குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்னேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


ගල්නෑව ප්‍රදේශයේදී අතුරුදහන් වූ දෙහැවිරිදි බිළිඳා ඇළ මාර්ගයක තිබී මළසිරුරක් ලෙස හමුවෙයි


අනුරාධපුරය, ගල්නෑව - ගලේවැව මාර්ගයේ පිහිටි ඇළ මාර්ගයකට වැටීමෙන් දෙහැවිරිදි පිරිමි දරුවෙකු ජීවිතක්ෂයට පත්ව ඇති බව පොලිසිය පවසයි. දරුවා අතුරුදහන් වී ඇති බවට ඔහුගේ පියා විසින් ගල්නෑව පොලිසියට කරන ලද පැමිණිල්ලකට අනුව, ප්‍රදේශවාසීන්ගේ සහාය ඇතිව පොලිසිය සිදුකළ සෝදිසි මෙහෙයුමකදී නිවස අසල ඇළ මාර්ගයේ පාලමක් යට සිරවී සිටියදී දරුවා සොයාගෙන ඇත. අනතුරුව වහාම ගල්නෑව රෝහලට ඇතුළත් කළද, දරුවා ඒ වන විටත් මියගොස් සිටි බව වෛද්‍යවරුන් තහවුරු කර තිබේ. මියගිය බිළිඳාගේ දේහය පශ්චාත් මරණ පරීක්ෂණය සඳහා රෝහල් මෘත ශරීරාගාරයේ තැන්පත් කර ඇති අතර ගල්නෑව පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Missing Two-Year-Old Child Found Dead in Canal in Galnewa


A two-year-old child tragically died after falling into a canal along the Galnewa–Galewewa road in Anuradhapura, police stated. Acting on a missing person complaint lodged by the child’s father at the Galnewa Police Station, police officers launched a search operation with the assistance of local residents, eventually discovering the child trapped under a bridge in a canal located near the family residence. Although rushed immediately to the Galnewa Hospital, medical personnel confirmed that the toddler was deceased upon arrival. The body has been placed in the hospital mortuary for post-mortem examinations, while the Galnewa Police continue further investigations.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - Local News

Comments