ஆசியர் பிராந்திய ஆளுநரும் இலங்கை தூதுவரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை
ஆசியர் பிராந்திய ஆளுநரும் இலங்கை தூதுவரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை
சவுதி அரேபியாவின் ஆசியர் பிராந்திய ஆளுநர் மேன்மைதங்கிய இளவரசர் துர்கி பின் தலால் பின் அப்துல்அஸீஸ் அல் சவுத் மற்றும் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோருக்கிடையில் இலங்கை – ஆசியர் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கடந்த 11 ஆகஸ்ட் 2026 அன்று அப்ஹாவில் அமைந்துள்ள ஆசியர் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது சுற்றுலாத்துறை, முதலீடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் இலங்கை அறிவு மற்றும் திறன் வளங்களை வழங்கக்கூடிய முக்கிய பங்காளியாக திகழும் திறன் கொண்டுள்ளதாக தூதுவர் அமீர் அஜ்வத் சுட்டிக்காட்டினார். சமூக அடிப்படையிலான சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா, பயிற்சி மற்றும் தொழில்முறை பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் முன்வைக்கப்பட்டன.
மேலும், விருந்தோம்பல் மற்றும் கட்டுமானத் துறைகளுக்குத் தேவையான திறன்மிக்க இலங்கைத் தொழிலாளர்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சவுதி அரேபியாவின் Saudi Green Initiative மற்றும் Middle East Green Initiative திட்டங்களின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரநடுகை, தோட்டக்கலை மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்புடைய அபிவிருத்தி நடவடிக்கைகளில் இலங்கை – ஆசியர் பிராந்திய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
தூதுவர் அமீர் அஜ்வத்தை ஆசியர் பிராந்தியத்திற்கு அன்புடன் வரவேற்ற ஆளுநர் இளவரசர் துர்கி பின் தலால், இரு தரப்பினருக்கும் இடையே காணப்படும் பொதுவான நலன்களை வலியுறுத்தியதுடன், குறிப்பிட்ட ஒத்துழைப்புத் துறைகளை அடையாளம் காண தூதுவருக்கும் ஆசியர் பிராந்திய அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுக்க ஏற்பாடு செய்தார்.
சுற்றுலா, முதலீடு, திறன் மேம்பாடு, சமூகப் பங்கேற்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை – ஆசியர் உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் தெரிவித்தனர்.
இந்த ஒத்துழைப்பு சவுதி அரேபியாவின் Vision 2030 இலக்குகளுக்கும் இலங்கையின் பொருளாதார மற்றும் சுற்றுலா அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கும் பங்களிக்கக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியர் பிராந்தியத்தின் அபிவிருத்தி, சவுதி Vision 2030 திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய முன்னணி சுற்றுலா மையமாக பிராந்தியத்தை மாற்றும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா மற்றும் கலாசார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய சுற்றுலா மையமாக ஆசியரை உருவாக்குவதுடன், மரநடுகை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்புடைய திட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
KR TV NETWORK
Governor of Aseer Region and Sri Lankan Ambassador Discuss Bilateral Cooperation
A high-level meeting was held between the Governor of the Aseer Region, His Royal Highness Prince Turki bin Talal bin Abdulaziz Al Saud, and the Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad, to explore opportunities for strengthening cooperation between Sri Lanka and the Aseer Region.
The meeting took place on 11 August 2026 at the Aseer Governorate in Abha.
During the discussions, both sides examined potential areas of cooperation, particularly tourism, investment, foreign employment, skills development and community engagement.
Ambassador Ameer Ajwad highlighted Sri Lanka’s potential to serve as a knowledge and skills partner for the tourism and hospitality sectors. He proposed greater cooperation in professional training, skills exchanges, community-based tourism and wellness tourism, while also highlighting Sri Lanka’s capacity to provide skilled manpower for the hospitality and construction industries.
The Ambassador further proposed cooperation under the Saudi Green Initiative and the wider Middle East Green Initiative, with particular attention to environmental sustainability, tree planting, horticulture and climate-resilient development initiatives.
Welcoming Ambassador Ameer Ajwad to the Aseer Region, Governor Prince Turki bin Talal emphasized the shared interests of both sides and facilitated follow-up discussions between the Ambassador and the Aseer Region Development Authority to identify practical areas for future collaboration.
The meeting reaffirmed the mutual interest in developing stronger Sri Lanka–Aseer partnerships in tourism, investment, skills development, community participation, environmental sustainability and people-to-people engagement.
Such cooperation is expected to contribute to the broader objectives of Saudi Vision 2030 while supporting Sri Lanka’s economic and tourism development priorities.
The development of the Aseer Region is being pursued under the Kingdom’s Vision 2030 agenda, with the aim of transforming Aseer into a leading year-round tourism destination. The region’s development strategy places emphasis on eco-tourism, adventure tourism and cultural experiences, while maintaining a strong focus on sustainability, afforestation, environmental conservation and climate-resilient development.
Both sides expressed their readiness to maintain close communication and explore practical initiatives that could further strengthen cooperation between Sri Lanka and the Aseer Region.
KR TV NETWORK
ආසීර් කලාප ආණ්ඩුකාරවරයා සහ ශ්රී ලංකා තානාපතිවරයා ද්විපාර්ශ්වික සහයෝගීතාව පිළිබඳ සාකච්ඡා කරති
සෞදි අරාබියේ ආසීර් කලාපයේ ආණ්ඩුකාර අතිගරු කුමරු තුර්කි බින් තලාල් බින් අබ්දුල්අසීස් අල් සවුද් සහ සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා අතර ශ්රී ලංකාව සහ ආසීර් කලාපය අතර සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීම පිළිබඳ විශේෂ සාකච්ඡාවක් පවත්වා තිබේ.
මෙම හමුව 2026 අගෝස්තු 11 වන දින අභා නගරයේ පිහිටි ආසීර් ආණ්ඩුකාර කාර්යාලයේදී පැවැත්විණි.
සංචාරක කර්මාන්තය, ආයෝජන, විදේශ රැකියා, කුසලතා සංවර්ධනය සහ ප්රජා සහභාගීත්වය ඇතුළු ක්ෂේත්ර කිහිපයක සහයෝගීතාව වර්ධනය කිරීමේ හැකියාව පිළිබඳව මෙහිදී සාකච්ඡා කෙරිණි.
ශ්රී ලංකාවට සංචාරක සහ ආගන්තුක සත්කාර ක්ෂේත්ර සඳහා දැනුම හා පුහුණු ශ්රම කුසලතා සපයන හවුල්කරුවෙකු ලෙස කටයුතු කිරීමේ හැකියාව පවතින බව තානාපති අමීර් අජ්වාඩ් මහතා පෙන්වා දුන්නේය.
ප්රජා මූලික සංචාරක කර්මාන්තය, සුවතා සංචාරක කර්මාන්තය, වෘත්තීය පුහුණුව සහ කුසලතා හුවමාරු වැඩසටහන් ඇතුළු ක්ෂේත්රවල සහයෝගීතාව ඇති කිරීමේ හැකියාව ද ඔහු විසින් යෝජනා කරන ලදී.
එමෙන්ම ආගන්තුක සත්කාර සහ ඉදිකිරීම් ක්ෂේත්ර සඳහා ශ්රී ලංකාවෙන් පුහුණු හා දක්ෂ ශ්රමිකයන් ලබාදීමේ හැකියාව පිළිබඳවද අවධානය යොමු විය.
සෞදි හරිත වැඩසටහන සහ මැදපෙරදිග හරිත වැඩසටහන යටතේ පරිසර ආරක්ෂාව, ගස් රෝපණය, උද්යාන වගාව සහ දේශගුණික විපර්යාසවලට ඔරොත්තු දෙන සංවර්ධන වැඩසටහන් සම්බන්ධයෙන් ශ්රී ලංකාව සහ ආසීර් කලාපය අතර සහයෝගීතාව වර්ධනය කිරීමේ අවස්ථාද සාකච්ඡාවට ලක් විය.
තානාපති අමීර් අජ්වාඩ් මහතා ආසීර් කලාපයට සාදරයෙන් පිළිගත් ආණ්ඩුකාර කුමරු තුර්කි බින් තලාල් දෙපාර්ශ්වයටම පොදු වූ අවශ්යතා අවධාරණය කළ අතර, ඉදිරි සහයෝගීතා ක්ෂේත්ර හඳුනා ගැනීම සඳහා තානාපතිවරයා සහ ආසීර් කලාප සංවර්ධන අධිකාරිය අතර වැඩිදුර සාකච්ඡා පැවැත්වීමටද පහසුකම් සලසා දුන්නේය.
සංචාරක කර්මාන්තය, ආයෝජන, කුසලතා සංවර්ධනය, ප්රජා සහභාගීත්වය, පරිසර තිරසාරත්වය සහ ජනතාව අතර සබඳතා ශක්තිමත් කිරීම හරහා ශ්රී ලංකාව සහ ආසීර් කලාපය අතර ශක්තිමත් හවුල්කාරීත්වයක් ගොඩනැගීමට දෙපාර්ශ්වයම කැමැත්ත පළ කළහ.
මෙම සහයෝගීතාව සෞදි අරාබියේ Vision 2030 අරමුණු මෙන්ම ශ්රී ලංකාවේ ආර්ථික හා සංචාරක සංවර්ධන ප්රමුඛතා සඳහාද දායක වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
සෞදි Vision 2030 වැඩසටහන යටතේ ආසීර් කලාපය වසර පුරා සංචාරකයන් ආකර්ෂණය කරගත හැකි ප්රමුඛ සංචාරක ගමනාන්තයක් බවට පත් කිරීමේ සංවර්ධන කටයුතු සිදු කෙරේ. පාරිසරික සංචාරක කර්මාන්තය, වික්රමාන්විත සංචාරක කර්මාන්තය සහ සංස්කෘතික අත්දැකීම් සඳහා ප්රමුඛත්වය ලබාදෙමින්, වනාන්තර වර්ධනය, පරිසර සංරක්ෂණය සහ දේශගුණික විපර්යාසවලට ඔරොත්තු දෙන සංවර්ධන ව්යාපෘතිද ක්රියාත්මක කරනු ලබයි.
KR TV NETWORK

Comments