Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பள்ளிவாசலைக் காத்த நேபாள மாற்றுத்திறனாளிக்கு சவுதியில் கௌரவம்: இலவச உம்ரா மற்றும் செயற்கைக்கால் பரிசு!


 பள்ளிவாசலைக் காத்த நேபாள மாற்றுத்திறனாளிக்கு சவுதியில் கௌரவம்: இலவச உம்ரா மற்றும் செயற்கைக்கால் பரிசு!


நேபாளத்தின் ரவுதஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், உள்ளூர் கலவரத்தின் போது தடியின் உதவியுடன் ஒற்றைக் காலில் நின்று பள்ளிவாசலை வன்முறைக் கும்பலிடமிருந்து பாதுகாத்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.


பள்ளிவாசலைப் பாதுகாக்க அவர் வெளிப்படுத்திய துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த கொடையாளர்கள் அவருக்கும் அவரது பெற்றோருக்கும் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய உம்ரா புனிதப் பயணத்தை வழங்கியுள்ளனர்.


இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட அவர், தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவுக்குச் சென்று மெக்காவில் உம்ரா வழிபாட்டை நிறைவு செய்துள்ளார்.


இதனையடுத்து, நேபாளத்திற்குத் திரும்புவதற்கு முன்னதாக, சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் அவருக்கு புதிய செயற்கைக்கால் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனது உடல் குறைபாட்டை பொருட்படுத்தாமல் பள்ளிவாசலைப் பாதுகாக்க முன்வந்த அவரது துணிச்சலுக்கு கிடைத்த கௌரவமாக இந்த மனிதாபிமான நடவடிக்கை பார்க்கப்படுகிறது.


இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருவதுடன், துணிச்சலையும் மனிதநேயத்தையும் பாராட்டும் பல்வேறு கருத்துகளும் வெளியாகி வருகின்றன.


KR TV NETWORK

www.krtvlankanvoice.lk


Nepalese Disabled Man Honoured in Saudi Arabia for Protecting Mosque: Free Umrah and Prosthetic Leg Gift


A disabled man from Nepal’s Rautahat District has drawn widespread attention on social media after a video showed him standing on one leg with the support of a stick while bravely protecting a mosque from a violent mob during local unrest.


In recognition of his courage and determination to protect the mosque despite his physical disability, donors from Saudi Arabia reportedly offered him and his parents an all-expenses-paid Umrah pilgrimage.


He accepted the opportunity and travelled to Saudi Arabia with his family, where he completed the Umrah pilgrimage in Makkah.


Before returning to Nepal, a Saudi charitable organisation is also reportedly arranging for him to receive a new prosthetic leg.


The humanitarian gesture is being seen as a meaningful recognition of a man who stood up to protect a mosque despite his physical challenges.


The emotional story has since been widely shared across social media, with many people expressing appreciation for his courage, determination and humanity.


KR TV NETWORK

www.krtvlankanvoice.lk


මුස්ලිම් පල්ලියක් ආරක්ෂා කළ නේපාල ආබාධිත පුද්ගලයෙකුට සෞදි අරාබියෙන් ගෞරවයක් – නොමිලේ උම්රා සහ කෘත්‍රිම පාදයක් තෑගි


නේපාලයේ රවුතහට් දිස්ත්‍රික්කයේ ආබාධිත පුද්ගලයෙකු ප්‍රදේශයේ ඇති වූ කලබලකාරී තත්ත්වයක් අතරතුර, සැරයටියක ආධාරයෙන් එක් පාදයකින් සිටිමින් ප්‍රචණ්ඩ කණ්ඩායමකින් මුස්ලිම් පල්ලියක් ආරක්ෂා කිරීමට කටයුතු කරන ආකාරය දැක්වෙන වීඩියෝවක් සමාජ මාධ්‍ය ඔස්සේ විශාල අවධානයක් දිනාගෙන තිබේ.


තම ශාරීරික ආබාධය නොසලකා පල්ලිය ආරක්ෂා කිරීම සඳහා ඔහු දැක්වූ ධෛර්යය අගය කරමින් සෞදි අරාබියේ පරිත්‍යාගශීලීන් පිරිසක් ඔහුට සහ ඔහුගේ දෙමාපියන්ට සියලු වියදම් ඇතුළත් උම්රා වන්දනා ගමනක් ලබා දී ඇති බව වාර්තා වේ.


එම අවස්ථාව පිළිගත් ඔහු සිය පවුලේ සාමාජිකයන් සමඟ සෞදි අරාබියට ගොස් මක්කමදී උම්රා වන්දනාව සම්පූර්ණ කර තිබේ.


නේපාලයට ආපසු යාමට පෙර සෞදි අරාබියේ පුණ්‍යායතනයක් මගින් ඔහුට නව කෘත්‍රිම පාදයක් සවි කිරීමටද කටයුතු කරමින් සිටින බව වාර්තා වේ.


තම ශාරීරික දුබලතාව නොසලකා පල්ලියක් ආරක්ෂා කිරීමට ඉදිරිපත් වූ ඔහුගේ ධෛර්යය වෙනුවෙන් ලැබුණු මානුෂීය ගෞරවයක් ලෙස මෙම ක්‍රියාව සැලකෙයි.


මෙම සංවේදී පුවත මේ වන විට සමාජ මාධ්‍ය ඔස්සේ විශාල වශයෙන් හුවමාරු වෙමින් පවතින අතර, ඔහුගේ ධෛර්යය, කැපවීම සහ මානුෂීයත්වය අගය කරමින් බොහෝ දෙනා අදහස් පළ කරමින් සිටිති.


KR TV NETWORK

www.krtvlankanvoice.lk

Comments