Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவூதி அரேபியாவின் அப்ஹா வர்த்தக சம்மேளனத்துடன் இலங்கைத் தூதுவர் வர்த்தக வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்




சவூதி அரேபியாவின் அப்ஹா வர்த்தக சம்மேளனத்துடன் இலங்கைத் தூதுவர் வர்த்தக வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், அப்ஹா வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் மிஸ்பர் ஏ. அல்-வாடாயை சந்தித்து, இலங்கைக்கும் சவூதி அரேபியாவின் அசீர் பிராந்தியத்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் சவூதி அரேபிய தனியார் துறைகளுக்கு இடையிலான வளர்ந்து வரும் வர்த்தக ஈடுபாடுகள் மற்றும் அண்மையில் நிறுவப்பட்ட சவூதி–இலங்கை வர்த்தக பேரவை தொடர்பில் தூதுவர் விளக்கமளித்தார்.

அசீர் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்துறையை கருத்திற்கொண்டு, சுற்றுலா, விருந்தோம்பல், தொழில்துறை மற்றும் மனிதவளத் துறைகளில் இலங்கை மற்றும் அசீர் பிராந்திய தனியார் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் நிபுணத்துவம், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அசீர் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு பங்களிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

2026 ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள Sri Lanka Investment Forum இல் அசீர் பிராந்திய வர்த்தக சமூகத்தினர் பங்கேற்று, இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறும் தூதுவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், 2027 ஜனவரி 14 முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள Sri Lanka Expo 2027 இல் பங்கேற்குமாறும் அசீர் பிராந்திய வர்த்தக சமூகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சவூதி அரேபியாவின் சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் தொடர்புடைய துறைகளில் திறமையான மற்றும் அரைத் திறமையான இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அப்ஹா வர்த்தக சம்மேளனத்தில் இலங்கை–அசீர் வர்த்தக மாநாடு ஒன்றை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. இத்தகைய மாநாடு இரு தரப்பினருக்கும் இடையிலான B2B தொடர்புகள், வர்த்தக கூட்டாண்மைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் முக்கிய தளமாக அமையும்.

இந்த சந்திப்பு, இலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் இலங்கைத் தூதரகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.

KR TV NETWORK
20 ஆகஸ்ட் 2026


ශ්‍රී ලංකා තානාපතිවරයා අබ්හා වාණිජ මණ්ඩලය සමඟ ව්‍යාපාරික අවස්ථා පිළිබඳ සාකච්ඡා කරයි

සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, අබ්හා වාණිජ මණ්ඩලයේ මහලේකම් ආචාර්ය මිස්ෆර් ඒ. අල්-වදායි මහතා හමුවී, ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබියේ අසීර් කලාපය අතර වාණිජ හා ආර්ථික සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීම පිළිබඳව සාකච්ඡා කළේය.

ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර පෞද්ගලික අංශයේ වර්ධනය වෙමින් පවතින සම්බන්ධතා මෙන්ම මෑතකදී පිහිටුවන ලද සෞදි–ශ්‍රී ලංකා ව්‍යාපාරික කවුන්සිලය පිළිබඳවද තානාපතිවරයා කරුණු පැහැදිලි කළේය.

අසීර් කලාපයේ වේගයෙන් සංවර්ධනය වෙමින් පවතින සංචාරක කර්මාන්තය සැලකිල්ලට ගනිමින්, සංචාරක, ආගන්තුක සත්කාර, කාර්මික සහ මානව සම්පත් ක්ෂේත්‍රවල ශ්‍රී ලංකාව සහ අසීර් කලාපය අතර සහයෝගීතාව තවදුරටත් පුළුල් කිරීමේ වැදගත්කමද ඔහු අවධාරණය කළේය.

ශ්‍රී ලංකාවේ විශේෂඥ දැනුම, නිෂ්පාදන සහ සේවා අසීර් කලාපයේ වර්ධනය වන සංචාරක හා ආගන්තුක සත්කාර ක්ෂේත්‍රයට දායක කරගත හැකි අවස්ථා පිළිබඳවද සාකච්ඡා කෙරිණි.

2026 ඔක්තෝබර් 12 සහ 13 යන දිනවල කොළඹදී පැවැත්වීමට නියමිත Sri Lanka Investment Forum සඳහා අසීර් කලාපයේ ව්‍යාපාරික ප්‍රජාවට සහභාගී වී ශ්‍රී ලංකාවේ පවතින ආයෝජන අවස්ථා පිළිබඳව සොයා බලන ලෙසද තානාපතිවරයා ආරාධනා කළේය.

එමෙන්ම, 2027 ජනවාරි 14 සිට 17 දක්වා කොළඹදී පැවැත්වෙන Sri Lanka Expo 2027 සඳහාද අසීර් කලාපයේ ව්‍යාපාරික ප්‍රජාවට ආරාධනා කරන ලදී.

සෞදි අරාබියේ සංචාරක, ආගන්තුක සත්කාර සහ ඒ ආශ්‍රිත ක්ෂේත්‍රවල පුහුණු සහ අර්ධ පුහුණු ශ්‍රී ලාංකික ශ්‍රමිකයන් සඳහා රැකියා අවස්ථා පුළුල් කිරීම පිළිබඳවද සාකච්ඡා කෙරිණි.

තවද, අබ්හා වාණිජ මණ්ඩලයේ ශ්‍රී ලංකා–අසීර් ව්‍යාපාරික සංසදයක් පැවැත්වීමේ හැකියාව පිළිබඳවද සාකච්ඡා කෙරිණි. එවැනි සංසදයක් ව්‍යාපාරිකයන් අතර B2B සබඳතා ශක්තිමත් කිරීමට, නව ව්‍යාපාරික හවුල්කාරිත්වයන් ඇති කිරීමට සහ වෙළඳ හා ආයෝජන අවස්ථා පුළුල් කිරීමට වැදගත් වේදිකාවක් වනු ඇත.

මෙම හමුව ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර වෙළඳාම, ආයෝජන, සංචාරක සහ පෞද්ගලික අංශයේ හවුල්කාරිත්වය තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සිදුකරන අඛණ්ඩ වැඩසටහන්වල කොටසකි.

KR TV NETWORK
20 අගෝස්තු 2026


Sri Lankan Ambassador Explores Business Opportunities with Abha Chamber of Commerce

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad, met with Secretary General of the Abha Chamber of Commerce, Dr. Misfer A. Al-Wadai, to discuss ways of further strengthening commercial and economic cooperation between Sri Lanka and the Aseer Region.

During the meeting, Ambassador Ameer Ajwad briefed the Secretary General on the growing engagement between the private sectors of Sri Lanka and Saudi Arabia, including the recent establishment of the Saudi–Sri Lanka Business Council.

He emphasized the importance of expanding cooperation between Sri Lankan businesses and the private sector in the Aseer Region, particularly in tourism, hospitality, industry and human resources, in view of the rapid development of the tourism sector in Aseer.

The Ambassador also highlighted opportunities for Sri Lankan expertise, products and services to contribute to the region’s expanding tourism and hospitality ecosystem.

Ambassador Ameer Ajwad invited the business community of Aseer to participate in the Sri Lanka Investment Forum, scheduled to be held in Colombo on 12–13 October 2026, and explore investment opportunities available in Sri Lanka.

He also invited the Aseer business community to participate in Sri Lanka Expo 2027, scheduled to take place in Colombo from 14–17 January 2027, providing a platform to showcase Sri Lankan products, services and investment opportunities.

The meeting also focused on expanding employment opportunities for skilled and semi-skilled Sri Lankan workers in the tourism, hospitality and related sectors in Saudi Arabia, making use of Sri Lanka’s strong human resource base.

The possibility of organizing a Sri Lanka–Aseer Business Forum at the Abha Chamber of Commerce was also discussed. Such a forum would provide an effective platform for strengthening business-to-business (B2B) connections, developing partnerships and exploring new opportunities for trade and investment.

The meeting forms part of the Embassy’s ongoing efforts to promote trade, investment, tourism and private-sector partnerships between Sri Lanka and Saudi Arabia, while further strengthening the longstanding economic and people-to-people ties between the two countries.

KR TV NETWORK
20 August 2026

Comments