Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சைக்கிளில் பால் விற்ற ஏழைத் தந்தையின் தியாகம்: சர்வதேச குர்ஆன் போட்டியில் சாதித்து உலக அரங்கில் கோடிக்கணக்கான பரிசுகளை வென்ற வங்கதேச இளைஞர்


 சைக்கிளில் பால் விற்ற ஏழைத் தந்தையின் தியாகம்: சர்வதேச குர்ஆன் போட்டியில் சாதித்து உலக அரங்கில் கோடிக்கணக்கான பரிசுகளை வென்ற வங்கதேச இளைஞர்


வறுமையும் கடின உழைப்பும் ஒருபோதும் ஒரு மனிதனின் இலட்சியத்திற்குத் தடையாக அமையாது என்பதை நிரூபிக்கும் வகையில், சர்வதேச அரங்கில் மாபெரும் சாதனை படைத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த காரி ஹாபிழ் நூருத்தீன் ஸகரிய்யா.


சவுதி அரேபியாவின் புனித மக்கா நகரில் உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்ற 46ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச திருக்குர்ஆன் மனனம் மற்றும் ஓதுதல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் உள்ள சுமார் 133 நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த குர்ஆன் மனன வெற்றியாளர்கள் மற்றும் காரிகள் கலந்துகொண்டனர். இந்தப் பிரமாண்டமான சர்வதேசப் போட்டியில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வங்கதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றிய காரி ஹாபிழ் நூருத்தீன் ஸகரிய்யா, தனது அசாத்திய திறமையால் நடுவர்களின் பாராட்டுகளைப் பெற்று சிறப்பிடத்தை வென்றுள்ளார்.


இச்சாதனையின் பின்னணியில் அவரது தந்தையின் அளப்பரிய தியாகமும் உழைப்பும் அடங்கியுள்ளது. அன்றாடம் சைக்கிளில் பால் விற்று மிகவும் வறிய சூழலில் தனது குடும்பத்தை நடத்தி வந்த அவரது தந்தை, தனது மகனை மக்காவில் நடைபெறும் சர்வதேசப் போட்டிக்கு அனுப்பி வைப்பதற்கான பயணச் செலவுகளை ஈடுசெய்ய பணமில்லாமல் தவித்துள்ளார். இறுதியில் தனது குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த வளர்ப்புப் பசுவை விற்று மகனுக்கான விமானப் பயணச் செலவுகளைத் திரட்டியுள்ளார்.


தந்தையின் தூய எண்ணத்திற்கும் மகனின் விடாமுயற்சிக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாக, சவுதி அரேபிய அரசு காரி ஹாபிழ் நூருத்தீன் ஸகரிய்யாவுக்கு ஒரு இலட்சம் சவுதி ரியால்களை ரொக்கப் பரிசாக வழங்கிக் கௌரவித்தது. அத்துடன் தனது நாட்டின் புகழை சர்வதேச அரங்கில் உயர்த்தியமைக்காக வங்கதேச அரசு அவருக்கு இரண்டு கோடி டாக்கா நிதிப் பரிசையும், நாட்டின் உயரிய தேசிய குடிமக்கள் விருதையும் வழங்கவுள்ளதுடன், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் குர்ஆன் ஓதுவதற்கான நிரந்தர அரச பணியையும் வழங்க முன்வந்துள்ளது.


வறுமையின் பிடியில் தவித்த ஒரு குடும்பத்திற்கு இறைவன் சில மணிநேரங்களில் வழங்கிய இந்த அருள்வளமும் அங்கீகாரமும், திருக்குர்ஆனுடன் இணையும் ஒரு வாழ்வு எப்போதும் வீண்போகாது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - ஆன்மீகச் செய்தி


පාපැදියෙන් කිරි විකුණූ දිළිඳු පියෙකුගේ පුතු ජාත්‍යන්තර කුර්ආන් තරගාවලිය ජයගෙන කෝටිපති ත්‍යාග සහ රාජ්‍ය ගෞරව හිමිකර ගනියි


දරිද්‍රතාවය සහ ආර්ථික දුෂ්කරතා හමුවේ නොසැලී උත්සාහය සහ කැපවීම තුළින් ඕනෑම උසස් ඉලක්කයක් ජයගත හැකි බව ලොවටම පසක් කරමින් බංග්ලාදේශයේ කාර්ය් හාෆිල් නුරුදීන් සකරියා ජාත්‍යන්තර තලයේ අතිවිශිෂ්ට ජයග්‍රහණයක් වාර්තා කර තිබේ.


සෞදි අරාබියේ ශුද්ධ වූ මක්කම නුවරදී අතිඋත්කර්ෂවත් අයුරින් පවත්වන ලද 46 වන අබ්දුල් අසීස් රජු ජාත්‍යන්තර ශුද්ධ වූ කුර්ආන් තරගාවලිය සඳහා ලොව පුරා රටවල් 133ක් නියෝජනය කරමින් විශිෂ්ටතම තරගකරුවෝ රැසක් සහභාගී වූහ. එහිදී සිය අසමසම කුසලතාව ප්‍රදර්ශනය කළ බංග්ලාදේශයේ නුරුදීන් සකරියා තරග විනිසුරුවරුන්ගේ ඉහළ ඇගයීමට ලක්වෙමින් ප්‍රමුඛස්ථානයක් දිනාගැනීමට සමත් විය.


මෙම අසමසම ජයග්‍රහණය පිටුපස පවතින්නේ ඔහුගේ පියාගේ නිහඬ සහ අමිල කැපවීමයි. දෛනිකව පාපැදියකින් ගම්මාන පුරා කිරි විකුණමින් අතිශය දුෂ්කර අයුරින් පවුල නඩත්තු කළ ඔහුගේ පියා, තම පුතුට ජාත්‍යන්තර තරගාවලිය සඳහා සෞදි අරාබියට යාමට අවශ්‍ය ගුවන් ගමන් වියදම් සපයා ගැනීමට නොහැකිව දැඩි අසීරුතාවකට පත්ව සිටියේය. අවසානයේ ඔහු තම පවුලේ එකම ජීවනෝපාය මාර්ගය වූ තමන් සතු එකම එළදෙන පවා විකුණා ඒ සඳහා මුදල් එක්රැස් කර දී තිබිණි.


පියෙකුගේ එම පිවිතුරු බලාපොරොත්තුව සහ පුතුගේ දැඩි කැපවීම වෙනුවෙන් සෞදි අරාබි රජය විසින් සෞදි රියාල් ලක්ෂයක විශේෂ මුදල් ත්‍යාගයක් පිරිනමන ලදී. ඊට අමතරව සිය මව්බිමේ නාමය ලෝකය හමුවේ බබළවමින් කළ සුවිශේෂී මෙහෙවර අගය කරමින් බංග්ලාදේශ රජය විසින් ටාකා කෝටි දෙකක මූල්‍ය ත්‍යාගයක්, එරට ඉහළම ජාතික පුරවැසි සම්මානයක් සහ බංග්ලාදේශ ජාතික රූපවාහිනී නාලිකාවේ ස්ථිර රාජ්‍ය රැකියාවක් ලබාදීමට තීරණය කර ඇත.


ගමන් වියදම් සොයාගැනීමට පවා අපහසුව සිටි අසරණ පවුලක් කෙටි කලක් තුළ මෙලෙස අතිමහත් ආශිර්වාදයකට සහ ගෝලීය පිළිගැනීමකට ලක්වීම, ධාර්මික දිවියක් සහ අවංක කැපවීම කිසිදිනෙක අපතේ නොයන බව තහවුරු කරන්නක් බව ආගමික විද්වත්හු පෙන්වා දෙති.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ආගමික පුවත්


From Poverty to Global Acclaim: Son of a Struggling Milkman Triumphs at King Abdulaziz International Quran Contest in Makkah


Demonstrating that socio-economic hardship is no barrier to profound spiritual and academic excellence, Hafiz Qari Nuruddin Zakariya of Bangladesh has captured global headlines following his outstanding performance at the prestigious 46th King Abdulaziz International Holy Quran Memorization and Recitation Competition held in the holy city of Makkah.


The high-profile international tournament brought together leading Quranic reciters and memorizers representing 133 countries across the globe. Amidst rigorous evaluation by world-renowned scholars, Zakariya distinguished himself with exemplary recitation and flawless memorization, earning top honours and widespread international acclaim.


Behind this remarkable achievement lies a touching story of paternal sacrifice. Zakariya's father, who supported the household under extreme financial constraints by distributing milk on a bicycle, faced severe monetary hurdles in securing international airfare for his son's participation in Saudi Arabia. Determined to see his son compete globally, the father sold his only milk-yielding cow to fund the travel expenses.


Honouring this extraordinary feat and perseverance, the Saudi authorities conferred a prestigious cash award of 100,000 Saudi Riyals upon Zakariya. Concurrently, in recognition of his role in elevating the nation's pride on the world stage, the Government of Bangladesh announced a state reward of 20 million Taka, along with conferring a high-level national civilian honour and offering him a permanent state recitation post on national television.


This profound journey from humble origins to international recognition serves as an enduring testament to the power of parental devotion, steadfast discipline, and the deep blessings associated with spiritual dedication.


KR TV Network - Religious News

Comments