Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இந்திய சர்வதேச விண்வெளி அரங்கில் கௌரவிக்கப்பட்ட மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை மாணவி முஸ்னா முபாரக் மற்றும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நூரி: சக்திசாட் திட்டத்தில் இலங்கைக்குப் பெருமை




















 இந்திய சர்வதேச விண்வெளி அரங்கில் கௌரவிக்கப்பட்ட மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை மாணவி முஸ்னா முபாரக் மற்றும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நூரி: சக்திசாட் திட்டத்தில் இலங்கைக்குப் பெருமை

உலகளாவிய ரீதியில் விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல் முறையாக பள்ளி மற்றும் கல்லூரிப் பெண் மாணவிகள் மாத்திரம் ஒன்றிணைந்து, சொந்தமாக விண்கலம் மற்றும் சிறிய ரகச் செய்மதியை (Satellite) வடிவமைத்து அதனை விண்வெளிக்கு பரீட்சார்த்தமாக அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடி முயற்சியாக சக்திசாட் இரண்டாம் கட்ட (Mission ShakthiSAT – Phase II - India Programme) சர்வதேச விண்வெளித் திட்டப் பயிற்சிப் பாசறை இந்தியாவில் மிக விமரிசையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM Leadership), அதிநவீன விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செய்மதி வடிவமைப்பு ஆகியவற்றில் பெண்களின் தலைமைத்துவத்தை உருவாக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த உலகளாவிய திட்டத்தில், உலகின் 108 நாடுகளிலிருந்து தீவிர மதிப்பீடுகளுக்குப் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட 14 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 200 திறமைவாய்ந்த இளம் பெண் மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இம்மாணவிகள் இந்திய விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் தங்கியிருந்து செய்மதி கட்டமைப்பு, புவிச்சுற்றுப்பாதை இயக்கவியல் மற்றும் விண்வெளி மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் செய்முறைப் பயிற்சிகளையும் நேரடி ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இக்குழுவினருக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்களால் பிரத்தியேக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்பயிற்சி நெறியின் ஒரு கட்டமாக இம்மாணவிகள் இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர் மற்றும் விண்வெளி ஆய்வுத் துறையின் சர்வதேச முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளைப் பெறவுள்ளனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விண்வெளி ஆய்வுப் பாசறையில் ஒட்டுமொத்த இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை மாணவி முஸ்னா முபாரக் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நூரி ஆகிய இரு முஸ்லிம் மாணவிகள் தெரிவுசெய்யப்பட்டு பெருமையுடன் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பயிற்சிப் பட்டறையின் விசேட அமர்வில் மள்வானை மாணவி முஸ்னா முபாரக்கின் சிறப்பான கல்வி மற்றும் ஆய்வுத் திறமையைப் பாராட்டி அவருக்குத் தனித்துவமான கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்திய சர்வதேச மகளிர் விமானிகள் அமைப்பின் (Indian Women Pilots Association - IWPA) தலைவி கலாநிதி ஹர்ப்ரீத் ஏ டி சிங் (Dr. Harpreet A De Singh, FAeSI) அவர்கள் மாணவி முஸ்னா முபாரக்கிற்குப் பாராட்டு நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார்.

மாணவி முஸ்னா முபாரக் மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் கடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 9A அதிவிசேட சித்திகளைப் பெற்று, தற்போது உயர்தரப் பிரிவில் விஞ்ஞானத் துறையில் கல்வி பயின்று வருகின்றார். சர்வதேச அளவில் நாட்டுக்குப் பெருமை தேடித்தந்துள்ள இவ்விரு மாணவிகளுக்கும் இந்த அரிய விண்வெளி ஆய்வு வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க ஆரம்பம் முதல் முழுமையான வழிகாட்டல்களையும் ஒருங்கிணைப்புகளையும் மேற்கொண்டு, முழுமையான நிதி அனுசரணை வழங்கி மாணவிகளை வழிநடத்தி வரும் சர்வதேச சமூகச் செயற்பாட்டாளர் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பஸூல் ஜிப்ரி அவர்களுக்கு மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை மற்றும் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி சமூகத்தினரும், இரு பிரதேச பொதுமக்களும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி

ඉන්දීය ජාත්‍යන්තර අභ්‍යවකාශ ක්ෂේත්‍රයේදී සම්මානයට පාත්‍ර වූ මල්වාන අල්-මුබාරක් ජාතික පාසලේ මුස්නා මුබාරක් සහ කින්නියා මුස්ලිම් කාන්තා විද්‍යාලයේ නූරි ශිෂ්‍යාවන්: ශක්තිසැට් අභ්‍යවකාශ වැඩසටහනට එක්වූ ශ්‍රී ලාංකික සිසුවියන්ගේ අභිමානවත් දක්ෂතාවය

ලෝක ඉතිහාසයේ ප්‍රථම වතාවට පාසල් ශිෂ්‍යාවන්ගේ පූර්ණ දායකත්වයෙන් පමණක් අභ්‍යවකාශ පර්යේෂණ යානයක් සහ චන්ද්‍රිකාවක් නිර්මාණය කර උඩුගුවනට යැවීමේ ඓතිහාසික 'ශක්තිසැට් දෙවන අදියර' (Mission ShakthiSAT – Phase II - India Programme) ජාත්‍යන්තර විද්‍යා, තාක්ෂණ, ඉංජිනේරු සහ ගණිත (STEM Leadership), අභ්‍යවකාශ තාක්ෂණ හා චන්ද්‍රිකා සංවර්ධන නේවාසික පුහුණු කඳවුර ඉන්දියාවේදී අතිඋත්කර්ෂවත් අයුරින් පැවැත්වේ.

කාන්තා නායකත්වය සහ තාක්ෂණික කුසලතා නංවාලීම අරමුණු කරගත් මෙම සුවිශේෂී ගෝලීය වැඩසටහන සඳහා ලොව පුරා රටවල් 108ක් නියෝජනය කරමින් වයස අවුරුදු 14ත් 18ත් අතර ඉහළ දක්ෂතා දැක්වූ පාසල් ශිෂ්‍යාවන් 200ක් පමණ තරගකාරී පදනමක් මත තෝරාගෙන තිබේ. ඔවුහු ඉන්දීය අභ්‍යවකාශ පර්යේෂණ මධ්‍යස්ථාන පරිශ්‍රයේ රැඳී සිටිමින් චන්ද්‍රිකා තාක්ෂණය, කක්ෂීය ඉංජිනේරු විද්‍යාව සහ නවීන විද්‍යාත්මක පර්යේෂණ කටයුතුවල නිරත වෙති. නවදිල්ලි ඉන්දිරා ගාන්ධි ජාත්‍යන්තර ගුවන් තොටුපළ වෙත පැමිණි මෙම ශිෂ්‍යාවන් උණුසුම් ලෙස පිළිගෙන පුහුණු පරිශ්‍රය වෙත කැඳවාගෙන ගිය අතර, මෙම වැඩසටහන අතරතුරදී ශිෂ්‍යාවන්ට ඉන්දීය ජනාධිපතිවරිය, අග්‍රාමාත්‍යවරයා ඇතුළු ජාත්‍යන්තර ප්‍රමුඛ පෙළේ විද්‍යාඥයින් හා ප්‍රභූවරුන් හමුවීමේ දුර්ලභ අවස්ථාවද හිමි වේ.

මෙම අසමසම ජාත්‍යන්තර අභ්‍යවකාශ වැඩමුළුව සඳහා ශ්‍රී ලංකාව නියෝජනය කරමින් මල්වාන අල්-මුබාරක් ජාතික පාසලේ මුස්නා මුබාරක් සහ ත්‍රිකුණාමලය කින්නියා මුස්ලිම් කාන්තා විද්‍යාලයේ නූරි යන ශිෂ්‍යාවන් දෙදෙනා තේරී පත්වී සාර්ථකව පර්යේෂණවල නිරතව සිටිති.

එහිදී පැවති විශේෂ උත්සවයකදී මුස්නා මුබාරක් ශිෂ්‍යාවගේ විශිෂ්ට කුසලතාවය අගය කරමින්, ඉන්දීය කාන්තා ගුවන් නියමුවන්ගේ සංගමයේ (IWPA) සභාපතිනී ආචාර්ය හර්ප්‍රීත් ඒ ඩි සිං (Dr. Harpreet A De Singh, FAeSI) මහත්මිය අතින් ඇය වෙත විශේෂ සමරු සම්මානයක් පිරිනමන ලදී.

මුස්නා මුබාරක් ශිෂ්‍යාව පසුගිය අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගයේදී විශිෂ්ට සාමාර්ථ 9ක් (9A) ලබාගෙන දැනට උසස් පෙළ විද්‍යා අංශයෙන් අධ්‍යාපනය හදාරන්නියකි. මෙම දුර්ලභ ජාත්‍යන්තර අවස්ථාව එම ශිෂ්‍යාවන්ට උදාකර දීම සඳහා සියලු සංවිධාන කටයුතු සම්පාදනය කරමින්, පූර්ණ මූල්‍ය අනුග්‍රහය ලබා දී ශිෂ්‍යාවන් දිරිමත් කළ ජාත්‍යන්තර සමාජ ක්‍රියාකාරික ආචාර්ය අල්-හාජ් මොහොමඩ් ෆසුල් ජිෆ්රි මහතා වෙත අදාළ විද්‍යාලයන්හි ආචාර්ය මණ්ඩල, දෙමාපියන් සහ ප්‍රදේශවාසී ජනතාව සිය හෘදයාංගම කෘතඥතාව පළකර සිටිති.

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්

Musna Mubarak of Al-Mubarak National School, Malwana and Noori of Kinniya Muslim Ladies College Honoured at ShakthiSAT International Space Mission in India

Marking a historic milestone in the international aerospace sector, Mission ShakthiSAT – Phase II (India Programme) has brought together the world’s first-ever all-female student consortium to engineer, assemble, and launch an experimental satellite into orbit under the International STEM Leadership, Space Technology and Satellite Development Programme.

Designed to empower young women in advanced aerospace engineering, the global initiative selected approximately 200 high-performing schoolgirls aged 14 to 18 representing 108 countries across the globe. Stationed on-site at India's premier space research installations, the young participants are immersed in comprehensive modules encompassing satellite architecture, telemetry systems, and payload analytics. Upon arrival at New Delhi International Airport, the international student delegation was formally welcomed by mission directors before commencing a high-level schedule that includes strategic interactions with the President of India, the Prime Minister, and leading international space scientists.

Representing Sri Lanka on this prestigious global platform are two scholars: Musna Mubarak from Al-Mubarak National School in Malwana and Noori from Kinniya Muslim Ladies College in the Trincomalee District.

During the ceremonial proceedings of the international summit, Musna Mubarak was formally recognized and honoured for her academic and scientific acumen. The commemorative distinction was conferred upon her by Dr. Harpreet A De Singh, FAeSI, President of the Indian Women Pilots Association (IWPA).

Musna Mubarak previously demonstrated exceptional academic distinction by securing 9 straight A distinctions at the G.C.E. Ordinary Level examination and is currently pursuing her Advanced Level studies in the Physical and Applied Sciences stream. The strategic facilitation, international logistical arrangements, and complete financial sponsorship enabling both Sri Lankan students to participate were provided by renowned global activist Al-Haj Dr. Mohamed Fazul Jifry, drawing wide commendation from the administrations of Al-Mubarak National School, Kinniya Muslim Ladies College, and the public.

KR TV Network - Local News

Comments