Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அம்மா....

 


என் 

காயங்களைக் கழுவிக் கொள்ள

     வார்த்தைகளைத் 

            தேடித் தேடித் 

                    தோற்றுப் போனேன்...


இறுதியில்


யாருமற்ற 

       தனிமையின் நிழலில்

             வார்த்தைகளற்ற மீட்டல்களுடன்


           ஊமையாகிப் போகின்றேன்...


                   தாயிழந்த பின்னாளில்...


-மலையருவி பானு-

Comments