Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

உயிர் காப்போம் சமூகத்தைப் பாதுகாப்போம்: அம்பாறை மாவட்ட உயிர் காப்பு இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான ஆரம்ப விழா!







உயிர் காப்போம் சமூகத்தைப் பாதுகாப்போம்: அம்பாறை மாவட்ட உயிர் காப்பு இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான ஆரம்ப விழா!


அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவுடன் இணைந்து அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான ஆரம்ப விழா சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. எ.ஆர்.நியாஸ் அஹமட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். "மனித உயிர் காப்போம்... சமூகத்தைப் பாதுகாப்போம்..." என்ற கருப்பொருளுக்கு அமைய, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50 இளைஞர்கள் அவசர கால மீட்புப் பயிற்சிக்காக ஆர்வமுடன் கலந்துகொண்டுள்ளனர்.


உள்நாட்டுச் செய்தி

ஊடகவியலாளர்: ஏ.ஆர்.எம். மஜீத்

கே.ஆர் டிவி நெட்வொர்க்


මිනිස් ජීවිත රකිමු සමාජය ආරක්ෂා කරමු: අම්පාර දිස්ත්‍රික් ජීවිතාරක්ෂක දෙවන අදියරේ පුහුණුවන්නන් සඳහා වූ ආරම්භක උත්සවය!


අම්පාර දිස්ත්‍රික් ජීවිතාරක්ෂක කමිටුව සමඟ එක්ව අම්පාර දිස්ත්‍රික් අපදා කළමනාකරණ මධ්‍යස්ථානය විසින් සංවිධානය කරන ලද දෙවන අදියරේ පුහුණුවන්නන් සඳහා වූ ආරම්භක උත්සවය සන්මතුරේ මූලික රෝහලේ ශ්‍රවණාගාරයේදී අති සාර්ථක අයුරින් පවත්වන ලදී. අම්පාර දිස්ත්‍රික් අපදා කළමනාකරණ නියෝජ්‍ය අධ්‍යක්ෂ එම්.ඒ.සී.එම්. රියාස් මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම අවස්ථාවට සන්මතුරේ ප්‍රදේශීය ලේකම් එස්.එල්. මුහම්මද් හනීෆා සහ සන්මතුරේ මූලික රෝහලේ සැලසුම් වෛද්‍ය නිලධාරී ඩී.ආර්. එර්. නියාස් අහමඩ් යන මහත්වරුන් විශේෂ අතිතීන් ලෙස සහභාගී වූහ. "මිනිස් ජීවිත රකිමු... සමාජය ආරක්ෂා කරමු..." යන තේමාව යටතේ පැවති මෙම වැඩසටහන සඳහා සන්මතුරේ, සාමන්තතුරේ, නಾವිදන්වේලි සහ නින්දවූර් ප්‍රදේශවලින් තරුණයින් 50 දෙනෙකු හදිසි ගැලවුම්කරණ පුහුණුව සඳහා උනන්දුවෙන් සහභාගී වී සිටිති.


දේශීය පුවත්

මාධ්‍යවේදී: ඒ.ආර්.එම්. මජීද්

කේ.ආර්. ටීවී නෙට්වර්ක් 


: Saving Lives, Protecting Society: Inauguration Ceremony for the Second Phase of Ampara District Life-Saving Trainees


Organized by the Ampara District Disaster Management Center in collaboration with the Ampara District Life-Saving Committee, the inauguration ceremony for the second phase of trainees was successfully held at the Sammanthurai Base Hospital auditorium. The event was held under the leadership of Ampara District Deputy Director of Disaster Management M.A.C.M. Riyas, with Sammanthurai Divisional Secretary S.L. Mohamed Haneefa and Sammanthurai Base Hospital Planning Medical Officer Dr. A.R. Niyas Ahmed participating as special guests. Based on the theme "Save Human Lives... Protect Society," 50 youths from Sammanthurai, Sainthamaruthu, Navithanveli, and Nintavur enthusiastically joined the program to undergo emergency rescue training.


Domestic News

Journalist: A.R.M. Majeed

KR TV Network

Comments