சவுதி அரேபியாவின் பசுமை முன்னெடுப்பிற்கு ஆதரவாக அசீர் பிராந்தியத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த இலங்கைத் தூதுவர்
சவுதி அரேபியாவின் பசுமை முன்னெடுப்பிற்கு ஆதரவாக அசீர் பிராந்தியத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த இலங்கைத் தூதுவர்
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், அசீர் பிராந்தியத்திலுள்ள தாவரங்கள் அபிவிருத்தி மற்றும் பாலைவனமாதலைத் தடுப்பதற்கான தேசிய மையத்திற்கு விஜயம் செய்து மரக்கன்று ஒன்றை நாட்டியுள்ளார். இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான 50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு, 2024 ஆம் ஆண்டு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பிரதான முன்னெடுப்பான ‘இலங்கை தூதுவரின் மர நடுகைத் திட்டத்தின்’ கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சவுதி பசுமை முன்னெடுப்பின் (Saudi Green Initiative) சுற்றாடல் இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை மீளுறுதிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் காடழிப்பு தடுப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, நில மறுசீரமைப்பு, காலநிலை சகிப்புத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய பொதுவான நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடைமுறை வெளிப்பாடாக இந்த மர நடுகை அமைகிறது எனக் குறிப்பிட்டார்.
ரியாத் நகரிலுள்ள ஐந்து பொதுப் பூங்காக்கள், அல்-காசிம் தேசியப் பூங்கா மற்றும் அல்-அஹ்ஸாவில் உள்ள தாவரங்கள் பாதுகாப்பு மற்றும் பாலைவனமாதலைத் தடுப்பதற்கான தேசிய மையம் (NCVC) ஆகியவற்றில் இலங்கை சமூகத்தினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தொடர் மர நடுகைத் திட்டங்களின் தொடர்ச்சியாகவே அசீர் பிராந்தியத்திலும் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மலைகள், காடுகள் மற்றும் பல்லுயிர் வளம் நிறைந்த அசீர் பிராந்தியம் இவ்வாறான முன்னெடுப்பிற்கு மிகவும் பொருத்தமான சூழலை வழங்கியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.
2026 ஜனவரியில் மத்திய கிழக்கு பசுமை முன்னெடுப்பில் (Middle East Green Initiative - MGI) இலங்கை பிராந்திய உறுப்பினராக இணைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. சுற்றாடல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைக் குழு அண்மையில் நடைபெற்ற 20 ஆவது MGI நிறைவேற்றுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றது. ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம், அந்நாட்டிலுள்ள இலங்கை சமூகத்துடன் இணைந்து சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல் முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், காலநிலை நடவடிக்கை, வனப் பாதுகாப்பு, நிலையான சுற்றுலா மற்றும் பாலைவனமாதலைத் தடுத்தல் போன்றவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வலுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி
සෞදි හරිත මුලපිරීමට සහය දක්වමින් අසීර් කලාපයේදී ශ්රී ලංකා තානාපතිවරයාගෙන් පූර්ණ පැළ රෝපණ වැඩසටහනක්
සෞදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් මහතා අසීර් කලාපයේ පිහිටි වෘක්ෂලතා සංවර්ධනය සහ කාන්තාරකරණය වැළැක්වීමේ ජාතික මධ්යස්ථානයේදී පැළයක් රෝපණය කරමින් විශේෂ පාරිසරික වැඩසටහනක් සනිටුහන් කර ඇත. ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර පවතින වසර 50ක රාජ්යතාන්ත්රික සබඳතාව සමරමින් 2024 වසරේදී රියාද්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය විසින් ආරම්භ කරන ලද ‘ශ්රී ලංකා තානාපතිගේ පැළ රෝපණ වැඩසටහන’ යටතේ මෙම පියවර ගෙන ඇති අතර, සෞදි හරිත මුලපිරීමේ (Saudi Green Initiative - SGI) පාරිසරික අරමුණු වෙනුවෙන් ශ්රී ලංකාවේ කැපවීම යළි තහවුරු කිරීම මෙහි ප්රධාන අරමුණයි.
මෙහිදී අදහස් දැක්වූ තානාපති අමීර් අජ්වඩ් මහතා පෙන්වා දුන්නේ, මෙම වැඩසටහන මගින් සෞදි අරාබියේ පාරිසරික පරිවර්තනය සමඟ ශ්රී ලංකාවේ සහයෝගීතාව ප්රායෝගිකව පෙන්නුම් කරන බවත්, නැවත වන වගාව, ජෛව විවිධත්ව සංරක්ෂණය, ඉඩම් ප්රතිසංස්කරණය සහ තිරසාර සංවර්ධනය යන ක්ෂේත්රවල ද්විපාර්ශ්වික සබඳතා ශක්තිමත් කෙරෙන බවත්ය. මීට පෙර රියාද්හි උද්යාන පහක්, අල්-කාසිම් ජාතික උද්යානය සහ අල්-අහ්සා හි පිහිටි ජාතික මධ්යස්ථානයේදී (NCVC) ශ්රී ලාංකික ප්රජාව සමග එක්ව ක්රියාත්මක කළ පැළ රෝපණ ව්යාපෘතිවල අඛණ්ඩ දිගුවක් ලෙස අසීර් කලාපයේ වැඩසටහන පැවැත්විණි. සුන්දර කඳුකර සහ පොහොසත් ජෛව විවිධත්වයකින් යුත් අසීර් කලාපය මෙවැනි පාරිසරික ක්රියාමාර්ග සඳහා අතිශය උචිත පසුබිමක් සපයන බවද තානාපතිවරයා සඳහන් කළේය.
2026 ජනවාරි මාසයේදී ශ්රී ලංකාව මැදපෙරදිග හරිත මුලපිරීමේ (Middle East Green Initiative - MGI) කලාපීය සාමාජිකයෙකු ලෙස එක්වීමත් සමඟ දෙරට අතර පාරිසරික සහයෝගීතාව තවදුරටත් පුළුල් විය. පරිසර නියෝජ්ය අමාත්ය ඇන්ටන් ජයකොඩි මහතාගේ ප්රධානත්වයෙන් යුත් ශ්රී ලංකා නියෝජිත පිරිස පසුගියදා පැවති 20 වැනි MGI විධායක කමිටු රැස්වීමටද සහභාගී වූහ. දෙරටේ වඩාත් හරිත හා තිරසාර අනාගතයක් උදෙසා දේශගුණික විපර්යාස අවම කිරීම, තිරසාර සංචාරක ව්යාපාරය සහ කාන්තාරකරණයට එරෙහි ක්රියාමාර්ග ශක්තිමත් කිරීමට රියාද්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලය ශ්රී ලාංකික ප්රජාව සමඟ එක්ව අඛණ්ඩව කැපවී ක්රියාකරනු ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
Sri Lanka Ambassador Marks Aseer Region Visit by Planting Tree in Support of Saudi Green Initiative (SGI)
The Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, O.L. Ameer Ajwad, planted a tree sapling at the National Center for Vegetation Development and Combating Desertification in the Aseer Region, marking his official visit as part of the 'Sri Lanka Ambassador’s Tree Planting Programme'. Launched by the Embassy of Sri Lanka in Riyadh in 2024 to commemorate the 50th anniversary of bilateral diplomatic ties, the initiative reaffirms Sri Lanka’s commitment to supporting the environmental goals of the Saudi Green Initiative (SGI).
Speaking on the occasion, Ambassador Ameer Ajwad highlighted that the campaign represents a practical expression of Sri Lanka’s solidarity with Saudi Arabia’s environmental transformation and reflects mutual dedication to reforestation, biodiversity conservation, land restoration, climate resilience, and sustainable development. The event builds upon previous tree-planting initiatives undertaken by the Embassy alongside the Sri Lankan expatriate community at five public parks across Riyadh, the National Park of Al-Qassim, and the National Center for Vegetation Cover and Combating Desertification (NCVC) in Al-Ahsa. The Ambassador observed that Aseer’s distinctive mountainous landscape and rich biodiversity provide a highly fitting setting for advancing sustainable practices.
Bilateral environmental cooperation gained significant momentum following Sri Lanka's accession to the Middle East Green Initiative (MGI) as a Regional Member in January 2026, underscored by a Sri Lankan delegation led by Deputy Minister of Environment Anton Jayakody attending the recent 20th MGI Executive Committee Meeting. The Embassy of Sri Lanka in Riyadh, together with the local Sri Lankan community, will continue promoting practical initiatives aligned with Saudi environmental priorities across climate action, afforestation, biodiversity preservation, sustainable eco-tourism, and desertification control.
KR TV Network - International News




Comments