“கஞ்சிப்பான இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை” – பாதுகாப்பு பிரதி அமைச்சர் விளக்கம்!
“கஞ்சிப்பான இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை” – பாதுகாப்பு பிரதி அமைச்சர் விளக்கம்!
சர்வதேச ரீதியில் தேடப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபருமான “கஞ்சிப்பான இம்ரான்” என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் இதுவரை கைது செய்யப்படவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அந்தத் தகவல் தவறானது எனத் தெளிவுபடுத்தியுள்ள பிரதி அமைச்சர், அவரை விரைவில் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், வெளிநாடுகளில் தங்கியுள்ள ஏனைய தேடப்படும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
KR TV NETWORK | KR TV LANKAN VOICE
“කංජිපානි ඉම්රාන් තවමත් අත්අඩංගුවට ගෙන නැහැ” – ආරක්ෂක නියෝජ්ය අමාත්යවරයාගෙන් පැහැදිලි කිරීමක්!
ජාත්යන්තර වශයෙන් සොයමින් සිටින මත්ද්රව්ය ජාවාරම්කරුවෙකු සහ සංවිධානාත්මක අපරාධ කණ්ඩායම් සමඟ සම්බන්ධ ප්රධාන සැකකරුවෙකු ලෙස සැලකෙන “කංජිපානි ඉම්රාන්” හෙවත් මොහොමඩ් නජීම් මොහොමඩ් ඉම්රාන් මෙතෙක් අත්අඩංගුවට ගෙන නොමැති බව ආරක්ෂක නියෝජ්ය අමාත්ය අරුණ ජයසේකර මහතා ප්රකාශ කර තිබේ.
මීට පෙර කංජිපානි ඉම්රාන් ඉතාලියේදී අත්අඩංගුවට ගෙන ඇති බවට තොරතුරු වාර්තා වූ නමුත්, එම තොරතුරු නිවැරදි නොවන බව නියෝජ්ය අමාත්යවරයා පැහැදිලි කර ඇත.
ඔහු අත්අඩංගුවට ගෙන ශ්රී ලංකාවට රැගෙන ඒම සඳහා අවශ්ය ක්රියාමාර්ග මේ වන විට දැඩිව ක්රියාත්මක කරමින් පවතින බවද ඔහු සඳහන් කර තිබේ.
එමෙන්ම, ඉන්ටර්පෝල් රතු නිවේදනයක් නිකුත් කර ඇති කංජිපානි ඉම්රාන් නීතිය හමුවට පැමිණවීමටත්, විදේශයන්හි රැඳී සිටින අනෙකුත් අවශ්ය අපරාධකරුවන් අත්අඩංගුවට ගැනීමටත් ආරක්ෂක අංශ අඛණ්ඩව කටයුතු කරමින් සිටින බවද ඔහු වැඩිදුරටත් ප්රකාශ කර ඇත.
KR TV NETWORK | KR TV LANKAN VOICE
“Kanjipani Imran Has Not Yet Been Arrested” – Deputy Defence Minister Clarifies!
Deputy Defence Minister Aruna Jayasekara has clarified that Mohamed Najim Mohamed Imran, alias “Kanjipani Imran”, a wanted suspected drug trafficker and alleged key figure linked to organized crime, has not yet been arrested.
Earlier reports claimed that Kanjipani Imran had been arrested in Italy. However, the Deputy Minister has now clarified that those reports were inaccurate and that intensified efforts are currently underway to arrest him and bring him back to Sri Lanka.
He further stated that the authorities are continuing their efforts to bring Kanjipani Imran, who is reportedly the subject of an Interpol Red Notice, before the law, while also pursuing other wanted underworld figures believed to be residing overseas.
KR TV NETWORK | KR TV LANKAN VOICE

Comments