ஐரோப்பாவின் மூத்த மன்னரான நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
ஐரோப்பாவின் மூத்த மன்னரான நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
ஐரோப்பாவின் மிகவும் வயதான மற்றும் நீண்டகாலமாக ஆட்சிபுரிந்துவரும் மன்னரான நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு (King Harald V), ஹீமோலிடிக் அனீமியா (Haemolytic Anaemia - இரத்த சோகை) தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
89 வயதான மன்னர் ஹரால்டுக்கு வழங்கப்பட்ட கார்டிசோன் (Cortisone) சிகிச்சையின் பக்க விளைவால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையில், கடந்த வார இறுதியில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு, இரத்தத்தில் பாக்தீரியா தொற்றிற்கான (Bacterial infection) சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாக அரச மாளிகை தெரிவித்துள்ளது.
அவரது உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சையைக் கருத்திற்கொண்டு அவர் தனது உத்தியோகபூர்வ அரச கடமைகளைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள நிலையில், கிரவுன் பிரின்ஸ் ஹாகோன் (Crown Prince Haakon) தற்காலிக அரசப் பிரதிநிதியாகப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறார்.
கே ஆர் டிவி நெட்வொர்க் சர்வதேசச் செய்தி
යුරෝපයේ ජ්යෙෂ්ඨතම රජතුමා වන නෝර්වේහි පස්වන හැරල්ඩ් රජු රක්තහීනතා ප්රතිකාර සඳහා රෝහල්ගත කෙරේ!
යුරෝපයේ වයස්ගතම සහ දීර්ඝතම කාලයක් රජකම් කරන නෝර්වේහි පස්වන හැරල්ඩ් රජු (King Harald V), රක්තහීනතා (Haemolytic Anaemia) රෝගී තත්ත්වයක් සඳහා ප්රතිකාර ලබා ගැනීම පිණිස රෝහල්ගත කර ඇත.
89 හැවිරිදි හැරල්ඩ් රජුට ලබා දුන් කෝටිසෝන් (Cortisone) ප්රතිකාරයක අතුරු ආබාධයක් හේතුවෙන් සිරුරේ ජලය එක්රැස් වීමක් සිදුව ඇති අතර, ඒ හේතුවෙන් ඔහු ඔස්ලෝ විශ්වවිද්යාල රෝහලට ඇතුළත් කර ප්රතිකාර ලබා දෙමින් පවතී. මෑතකදී ඔහුගේ සෞඛ්ය තත්ත්වයේ තරමක පසුබෑමක්ද පෙන්නුම් කර ඇති අතර, ඒ සඳහා අවශ්ය ප්රතිකාර ලබා දී ඇත.
ඔහුගේ සෞඛ්ය තත්ත්වය සහ වෛද්ය ප්රතිකාර හේතුවෙන් රාජකාරී කටයුතු තාවකාලිකව අත්හිටුවා ඇති අතර, එම කාලය තුළ ඔටුන්න හිමි හැකොන් කුමරු (Crown Prince Haakon) රාජකාරී කටයුතු භාරව කටයුතු කරයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
- ජාත්යන්තර පුවත්
Europe's Oldest Reigning Monarch, King Harald V of Norway, Hospitalized for Haemolytic Anaemia Treatment
King Harald V of Norway, Europe’s oldest and longest-reigning monarch, has been admitted to the hospital to receive treatment for haemolytic anaemia.
The 89-year-old monarch was hospitalized at Oslo University Hospital after experiencing fluid retention, which was a side effect of the cortisone treatment administered for his condition. Palace reports also indicated that his health saw some complications over the weekend, requiring additional medical intervention.
Given his medical treatment and recovery period, King Harald has temporarily stepped back from his royal engagements, during which Crown Prince Haakon has stepped in to handle royal duties as regent.
KR TV Network -International News

Comments