பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் திட்டம் இலவச உணவளிப்பதற்கு அப்பால் ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறையாக மாற வேண்டும்: பிரதமர் ஹரிணி அமரசூரிய
பாடசாலை மாணவர்களின் போஷாக்குத் திட்டம் இலவச உணவளிப்பதற்கு அப்பால் ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறையாக மாற வேண்டும்: பிரதமர் ஹரிணி அமரசூரிய
அரசாங்கத்தின் பாடசாலை போஷாக்குத் திட்டம் என்பது வெறும் இலக்கு வைக்கப்பட்ட ஒரு தரப்பினருக்கு இலவச உணவை வழங்குவதோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு விடக்கூடாது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முழுமையான பாடசாலைக் கட்டமைப்பிற்குள்ளும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், முறையான ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பழக்கங்களை உருவாக்குவதே இதன் பிரதான இலக்காக அமைய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தொற்றா நோய்களைக் (NCDs) கட்டுப்படுத்த அறிவியல் ரீதியான தரவுகள் மற்றும் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு போஷாக்கு தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பிலிப் வார்ட், பிரதி பணிப்பாளர் ரொபர்ட் ஒலிவர் மற்றும் பேராசிரியர் ஜெயஸ்ரீ அர்கோட் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
පාසල් දරුවන්ගේ පෝෂණය නොමිලේ ආහාර දීමට එහා ගිය සෞඛ්ය සම්පන්න වැඩසටහනක් විය යුතුයි: අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය
රජයේ පාසල් පෝෂණ වැඩසටහන හුදෙක් ඉලක්කගත පිරිසකට නොමිලේ ආහාර වේලක් ලබාදීමට පමණක් සීමා වූවක් නොවිය යුතු බව අධ්යාපන, උසස් අධ්යාපන සහ වෘත්තීය අධ්යාපන අමාත්ය, අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය. අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය සහ ලෝක ආහාර වැඩසටහනේ (WFP) නියෝජිතයින් අතර අරලියගහ මන්දිරයේදී පැවැති විශේෂ සාකච්ඡාවකදී එතුමිය මේ බව අවධාරණය කළාය. සමස්ත පාසල් පද්ධතිය තුළම සෞඛ්ය සම්පන්න ආහාර රටා, යහපත් පෝෂණ දැනුවත්භාවය සහ නිවැරදි සෞඛ්ය පුරුදු ඇති කිරීම මෙහි ප්රධාන අරමුණ විය යුතු බව පෙන්වා දුන් අග්රාමාත්යතුමිය, ශීඝ්රයෙන් පැතිර යන බෝ නොවන රෝග වළක්වා ගැනීමටත් පෝෂණ ප්රතිපත්ති සකස් කිරීමටත් විද්යාත්මක පර්යේෂණ හා දත්ත පදනම් කරගත යුතු බව සඳහන් කළාය. මෙම අවස්ථාවට ලෝක ආහාර වැඩසටහනේ ශ්රී ලංකා නියෝජිත හා අධ්යක්ෂ පිලිප් වෝඩ්, නියෝජ්ය අධ්යක්ෂ රොබට් ඔලිවර් සහ මහාචාර්ය ජය ශ්රී අර්කොට් ඇතුළු නිලධාරීහු පිරිසක් එක්ව සිටියහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
School Nutrition Must Extend Beyond Free Meals to Build Healthy Habits: Prime Minister Dr. Harini Amarasuriya
The Government’s school nutrition initiative must extend beyond providing free meals to targeted groups and serve as a holistic platform promoting healthy eating habits across the entire school system, stated Prime Minister and Minister of Education, Higher Education and Vocational Education, Dr. Harini Amarasuriya. Speaking during a high-level discussion with World Food Programme (WFP) representatives at Temple Trees, the Prime Minister emphasized the need to address underlying nutritional concerns and non-communicable diseases (NCDs) through research- and evidence-based policymaking. Reaffirming their support to Sri Lanka’s school meal initiatives, the WFP delegation, including WFP Country Director Philip Ward, Deputy Country Director Robert Oliver, and Professor Jayashree Arcot, underscored the importance of multi-stakeholder collaboration among universities, ministries, and UN agencies to maximize nutritional impact.
KR TV Network - Local News




Comments