கொழும்பு கோட்டையை வரலாற்றுப் பாரம்பரிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம்: உலக வங்கி பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்
உலக வங்கியின் கொழும்பு கோட்டையை வரலாற்றுப் பாரம்பரிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம்: உலக வங்கி பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்
செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டை சுற்றுலா வலய அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலங்கையின் சுற்றுலாத் துறை மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கி முகாமையாளர் கெவோர்க் சர்கிஸ்யான் (Gevorg Sargsyan) தலைமையிலான தூதுக்குழுவிற்கும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் இடையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து சுற்றுலா வலயமாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் முன்னதாக நடைபெற்ற சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. சுற்றுலாத்துறை, விவசாய வர்த்தகம், துறைமுக விநியோக சேவைகள், வலுசக்தி துறை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுற்றுலா அபிவிருத்திக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்க உலக வங்கி பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
කොළඹ කොටුව සංචාරක කලාපයක් ලෙස සංවර්ධනය කිරීමේ ව්යාපෘතිය පිළිබඳව ලෝක බැංකු නියෝජිතයින් සමග විශේෂ සාකච්ඡාවක්
ලෝක බැංකු මූල්ය සහයෝගීතාව යටතේ ක්රියාත්මක කෙරෙන කොළඹ කොටුව සංචාරක කලාපයක් ලෙස සංවර්ධනය කිරීමේ ව්යාපෘතිය සහ මෙරට සංචාරක ක්ෂේත්රය නගාසිටුවීම පිළිබඳ විශේෂ සාකච්ඡාවක් ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. ශ්රී ලංකාව සහ මාලදිවයින සඳහා වන ලෝක බැංකු කළමනාකරු ගෙවෝර්ග් සර්ග්සියන් (Gevorg Sargsyan) මහතා ඇතුළු නියෝජිත පිරිස සහ ජනාධිපති කාර්යමණ්ඩල ප්රධානී ප්රභාත් චන්ද්රකීර්ති මහතා අතර මෙම හමුව සිදුවිය. කොළඹ කොටුවේ ඓතිහාසික උරුමය සුරකිමින් සංචාරක කලාපයක් ස්ථාපිත කිරීම සම්බන්ධයෙන් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්රධානත්වයෙන් මීට පෙර පැවති සාකච්ඡාවේ කරුණු මෙහිදී සමාලෝචනය කෙරිණි. මෙරට සංචාරක ප්රවර්ධනය, කෘෂි ව්යාපාර, වරාය සහ සැපයුම්, බලශක්ති මෙන්ම උතුරු නැගෙනහිර සංචාරක ව්යාපාරය දියුණු කිරීමට අවශ්ය අඛණ්ඩ සහය ලබාදීමට ලෝක බැංකු නියෝජිතයෝ මෙහිදී එකඟතාව පළකළහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Discussion with World Bank Representatives on Colombo Fort Heritage Tourism Zone Development Project
A high-level discussion on developing Colombo Fort into a dedicated tourism zone under World Bank assistance was held at the Presidential Secretariat between Chief of Staff to the President Prabath Chandrakeerthi and a World Bank delegation led by Country Manager for Sri Lanka and Maldives, Gevorg Sargsyan. The session reviewed policy directives previously outlined in a meeting chaired by President Anura Kumara Dissanayake concerning the preservation of Colombo Fort's historic built heritage alongside modern tourism infrastructure. The World Bank reiterated its readiness to support Sri Lanka's tourism expansion, nature-based travel initiatives, regional tourism development in the Northern and Eastern provinces, as well as structural advancements across agribusiness, ports, logistics, and energy sectors.
KR TV Network - Local News


Comments