சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் சாய்ந்தமருதில் இடம்பெற்றது
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் சாய்ந்தமருதில் இடம்பெற்றது
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய மிஷன் அமைப்பின் முக்கிய கலந்துரையாடல் சாய்ந்தமருதில் நடைபெற்றது. அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஆர்.அமீர்கான் வழிகாட்டலில் பணிப்பாளர் எஸ்.எல்.றசீட் மற்றும் பிரதி பணிப்பாளர்களான எம்.ஐ.அப்ரோஸ், எம்.பி.நூமைசா, எஸ்.எப்.சஹானி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் நோக்கம் மற்றும் எதிர்கால திட்டங்கள் ஆராயப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களின் சமூக நலனை மேம்படுத்துதல், கல்முனையில் இரத்ததான முகாம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணிகள், நல்லிணக்க முன்னெடுப்புகள் மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாகத் தீர்மானிக்கப்பட்டதுடன், அமைப்பின் பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் இணைப்பாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: எம்.என்.எம்.அப்ராஸ்
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
ජාත්යන්තර මානව හිමිකම් ගෝලීය මෙහෙයුම් සංවිධානයේ සාකච්ඡාවක් සායින්දමරුදුහිදී පැවැත්වෙයි
ජාත්යන්තර මානව හිමිකම් ගෝලීය මෙහෙයුම් (IHRGM) සංවිධානයේ විශේෂ සාකච්ඡාවක් සායින්දමරුදු ප්රදේශයේදී පැවැත්විණි. සංවිධානයේ ජාතික සභාපති ඒ.ආර්. අමීර් ඛාන් මහතාගේ මඟපෙන්වීම යටතේ අධ්යක්ෂ එස්.එල්. රෂීඩ් සහ නියෝජ්ය අධ්යක්ෂවරුන්ගේ සම්බන්ධීකරණයෙන් පැවති මෙම හමුවේදී සංවිධානයේ අරමුණු සහ ඉදිරි සැලසුම් පිළිබඳව සාකච්ඡා කෙරිණි. අම්පාර දිස්ත්රික්කයේ ජනතාවගේ සමාජ සුබසාධන කටයුතු නගාසිටුවීම, කල්මුණේ ප්රදේශයේ ලේ දන්දීමේ වැඩසටහනක් සංවිධානය කිරීම, පාරිසරික දැනුවත් කිරීම් හා ශ්රමදාන ව්යාපෘති, සංහිඳියා ක්රියාකාරකම් සහ සිසුන්ගේ අධ්යාපන සංවර්ධන වැඩසටහන් ක්රියාත්මක කිරීමට මෙහිදී තීරණය වූ අතර සංවිධානයේ නියෝජ්ය අධ්යක්ෂවරුන් සහ සම්බන්ධීකාරකවරුන් රැසක් ඊට සහභාගී වූහ.
වාර්තාකරු: එම්.එන්.එම්. අෆ්රාස්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
International Human Rights Global Mission Holds Strategic Discussion in Sainthamaruthu
A strategic meeting of the International Human Rights Global Mission (IHRGM) was held in Sainthamaruthu under the guidance of its National President A.R. Ameer Khan. Coordinated by Director S.L. Rasheed along with Deputy Directors M.I. Afros, M.B. Numaisa, and S.F. Sahani, the session reviewed organizational goals and future initiatives. Key resolutions included rolling out community welfare programs across the Ampara district, organizing a blood donation drive in Kalmunai, conducting environmental awareness and voluntary cleanup campaigns, advancing social harmony initiatives, and implementing educational support programs for students, with participation from deputy directors and district coordinators.
Reporter: M.N.M. Afras
KR TV Network - Local News













Comments