ஐரோப்பிய லீமேன்ஸ் கார் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்: அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்!
ஐரோப்பிய லீமேன்ஸ் கார் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்: அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்!
ஐரோப்பாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரபல லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் (Le Mans Championship) கார் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ள முன்னணித் திரைப்பட நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் ஓட்டிய ரேஸ் கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து ஒன்றை எதிர்கொண்டுள்ளது.
பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அஜித்தின் ரேஸ் கார் எதிர்பாராதவிதமாகத் தடம் புரண்டு கட்டுப்பாட்டை இழந்து, களத்தில் இருந்த மற்றொரு காரின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் காரணமாக காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததோடு, தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டன.
எனினும், நவீன ரேசிங் கார்களில் உள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பந்தயத் களத்தில் பல வருட அனுபவம் கொண்ட அஜித்தின் துரிதச் செயல்பாடு காரணமாக, அவர் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாகக் காரிலிருந்து வெளியேறினார். அஜித் விபத்தில் சிக்கிய செய்தி வெளியானதும் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த போதிலும், அவர் பூரண நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்ததை அடுத்து நிம்மதி அடைந்துள்ளனர்.
அபாயங்கள் நிறைந்த இந்த மோட்டார் பந்தயத் துறையில் அஜித் விபத்துக்களை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களின் போது விபத்துக்களைச் சந்தித்து எவ்விதப் பெரிய காயங்களுமின்றி அவர் மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டிவி நெட்வொர்க்
சர்வதேசச் செய்தி
යුරෝපීය ලී මේන්ස් මෝටර් රථ තරඟයේදී අනතුරකට මුහුණ දුන් නළු අජිත් කුමාර්: කිසිදු තුවාලයක් නොමැතිව ආරක්ෂිතව බේරෙයි!
යුරෝපයේ පැවැත්වෙන ප්රසිද්ධ ලී මේන්ස් ශූරතා (Le Mans Championship) මෝටර් රථ තරඟාවලියට සහභාගී වී සිටින ජනප්රිය චිත්රපට නළුවෙකු සහ මෝටර් රථ තරඟකරුවෙකු වන අජිත් කුමාර් පැදවූ රේස් රථය හදිසියේ පාලනයෙන් ගිලිහී බරපතළ අනතුරකට මුහුණ දී තිබේ.
තරඟය ඉතා තියුණු ලෙස ක්රියාත්මක වෙමින් තිබියදී අජිත්ගේ රේස් රථය හදිසියේම පාලනයෙන් ගිලිහී ගොස් ධාවන පථයේ තිබූ තවත් මෝටර් රථයක ගැටී ඇත. මෙම ගැටීම හේතුවෙන් මෝටර් රථයේ ඉදිරිපස දැඩි ලෙස හානි වී ඇති අතර, කාර්මික දෝෂ කිහිපයක් ද හටගෙන තිබේ.
කෙසේ වෙතත්, නවීන රේසිං රථවල අන්තර්ගත අතිනවීන ආරක්ෂක උපකරණ සහ වසර ගණනාවක තරඟ අත්දැකීම් හේතුවෙන් අජිත් කිසිදු තුවාලයක් නොමැතිව ආරක්ෂිතව රථයෙන් පිටතට පැමිණ ඇත. අජිත් අනතුරකට මුහුණ දුන් පුවතත් සමඟ ලොව පුරා සිටින ඔහුගේ රසිකයන් දැඩි කම්පාවට හා කනස්සල්ලට පත් වුවද, ඔහු කිසිදු තුවාලයකින් තොරව නිරුපද්රිතව සිටින බවට තොරතුරු ලැබීමත් සමඟ ඔවුන් දැඩි සැනසුම් සුසුම් හෙළා ඇත.
මෙම අවදානම් සහගත මෝටර් රථ ක්රීඩාව තුළ අජිත් මෙგැනි අනතුරුවලට මුහුණ දුන් පළමු අවස්ථාව මෙය නොවන අතර, මීට පෙර ඉතාලිය සහ ස්පාඤ්ඤය වැනි රටවල පැවති තරඟවලදී ද මෙဲ့ සමාන අනතුරුවලට මුහුණ දී කිසිදු බරපතළ තුවාලයකින් තොරව ඉන් ගැලවී ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් -
ජාත්යන්තර පුවත්
Actor Ajith Kumar Escapes Unhurt After Car Crash During European Le Mans race
Tamil actor and professional racing driver Ajith Kumar narrowly escaped injury after his racing car lost control and met with an accident during the ongoing Le Mans Championship in Europe.
As the race intensified, Ajith's car suddenly veered out of control and heavily collided with another vehicle on the track. The impact caused severe damage to the front of the car alongside technical malfunctions.
Fortunately, thanks to the advanced safety equipment installed in modern racing cars and Ajith's extensive professional experience, he walked away completely unhurt. While news of the crash initially caused widespread shock and anxiety among his global fan base, fans breathed a sigh of relief upon learning that he is safe and sound.
Ajith is no stranger to track incidents in this high-risk sport, having previously survived crashes and walk away safely during events and practice sessions in countries like Italy and Spain.
KR TV Network -International News

Comments