Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வத்தளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது!


வத்தளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது!


வத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர், இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் இருவரும் விமானம் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த வேளையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் விமான நிலையக் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர்.


வத்தளை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளமை தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் வத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.


KR TV Network

KR TV Lankan Voice

குற்றவியல் செய்தி


#වත්තල වෙඩි තැබීම: ඉන්දියාවට පලායාමට තැත්කළ දෙදෙනෙකු ගුවන්තොටුපළේද අත්අඩංගුවට!


වත්තල ප්‍රදේශයේ සිදුවූ වෙඩි තැබීමේ සිද්ධියට සම්බන්ධ ප්‍රධාන සැකකරුවන් දෙදෙනෙකු ශ්‍රී ලංකාවෙන් ඉන්දියාවට පලායාමට තැත් කිරීමේදී කටුනායක බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපළේදී අත්අඩංගුවට ගෙන ඇත.


සැකකරුවන් දෙදෙනා ගුවන් මගින් ඉන්දියාව බලා පිටත්ව යාම සඳහා කටුනායක ගුවන්තොටුපළ වෙත පැමිණ සිටියදී, පොලිස් විශේෂ කාර්ය බළකාය සහ ආගමන විගමන දෙපාර්තමේන්තු නිලධාරීන් විසින් සිදුකළ මෙහෙයුමකදී මෙසේ අත්අඩංගුවට ගෙන තිබේ.


වත්තල ප්‍රදේශයේදී මෑතකදී සිදුවූ වෙඩි තැබීමේ සිද්ධියට සම්බන්ධ අපරාධකරුවන් අත්අඩංගුවට ගැනීම සඳහා පොලිසිය විමර්ශන පවත්වාගෙන ගිය අතර, සැකකරුවන් විදේශගත වීමට උත්සාහ කරන බවට ලත් තොරතුරක් මත මෙම වැටලීම සිදුකර ඇත.


අත්අඩංගුවට ගත් සැකකරුවන් සම්බන්ධයෙන් බස්නාහිර උතුර අපරාධ කොට්ඨාසය සහ වත්තල පොලිසිය වැඩිදුර විමර්ශන පවත්වන අතර මොවුන් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.


KR TV Network

KR TV Lankan Voice

අපරාධ පුවත්


#Wattala Shooting: Two Suspects Attempting to Flee to India Arrested at Airport


Two key suspects involved in the recent shooting incident in Wattala have been arrested at the Bandaranaike International Airport (BIA) in Katunayake while attempting to flee to India.


The two suspects were apprehended by the Police Special Task Force (STF) in coordination with Department of Immigration and Emigration officials while attempting to board a flight to India from Katunayake Airport.


Following the shooting in the Wattala area, police launched an extensive manhunt to locate the perpetrators. The arrest was executed based on intelligence revealing that the suspects were preparing to leave the country.


The Western Province North Crimes Division alongside Wattala Police are conducting further interrogations, and arrangements are being made to produce the suspects before the Magistrate's Court.


KR TV Network

KR TV Lankan Voice

 Crime News

Comments