Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அளுத்கம புகையிரதக் கடவையில் மூன்று சக்கர வண்டி புகையிரதத்துடன் மோதி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம்!

 


அளுத்கம புகையிரதக் கடவையில் மூன்று சக்கர வண்டி புகையிரதத்துடன் மோதி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம்!


அளுத்கம, கணேகாம புராண விகாரைக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.


மறாதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற 'சாகரிகா' புகையிரதத்துடன் மூன்று சக்கர வண்டி மோதியதிலேயே இவவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்ததுடன், காயமடைந்த பயணியொருவர் சிகிச்சைக்காக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த புகையிரதக் கடவையில் பாதுகாப்பு கேட் (Safety gate) இல்லை எனவும், எச்சரிக்கை மணிகள் மற்றும் சமிக்ஞைகள் மட்டுமே உள்ளதால் இது மிகவும் ஆபத்தான பகுதியெனக் கூறி அப்பகுதி மக்கள் கரையோர புகையிரதப் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகக் கரையோர வழித்தடத்திலான புகையிரதச் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன. பின்னர், புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுடன் பொலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியளிக்கப்பட்டதைக் கொண்டு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு புகையிரதச் சேவைகள் வழமைக்குத் திரும்பின.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


 අලුත්ගම දුම්රිය හරස් මාර්ගයේදී ත්‍රීරෝද රථයක් දුම්රියක ගැටීමෙන් එක අයෙක් මිය යයි, තවත් අයෙක් බරපතළ තුවාල ලබයි!


අලුත්ගම, ගනේගම පුරාණ විහාරස්ථානය අසල පිහිටි දුම්රිය හරස් මාර්ගයේදී ත්‍රීරෝද රථයක් 'සාගරිකා' දුම්රිය සමඟ ගැටීමෙන් සිදුවූ අනතුරකින් පුද්ගලයෙකු ජීවිතක්ෂයට පත්ව තවත් අයෙකු බරපතළ තුවාල ලබා ඇත.


මරදාන දුම්රිය ස්ථානය ගමන් ඇරඹූ දුම්රියක මෙම ත්‍රීරෝද රථය ගැටී ඇති අතර, ත්‍රීරෝද රථයේ රියදුරු ජීවිතක්ෂයට පත්ව ඇත. තුවාල ලැබූ මගියා ප්‍රතිකාර සඳහා නාගොඩ රෝහලට ඇතුළත් කර තිබේ.


මෙම අනතුරෙන් පසු, අදාළ දුම්රිය හරස් මාර්ගයේ ආරක්ෂිත ගේට්ටුවක් නොමැති බවත්, අනතුරු ඇඟවීමේ සීනු සහ සංඥා පමණක් පවතින බැවින් මෙය ඉතා අවදානම් සහගත ප්‍රදේශයක් බව පවසමින් ප්‍රදේශවාසීන් වෙරළබඩ දුම්රිය මාර්ගය අවහිර කරමින් විරෝධතාවක නිරත වූහ. මේ හේතුවෙන් දුම්රිය ගමනාගමනයට ද බාධා එල්ල විය. පසුව, බලධාරීන් විසින් මෙම ගැටළුව විසඳීමට පියවර ගන්නා බවට ලබා දුන් සහතිකයෙන් පසු විරෝධතාව අත්හිටුවූ අතර, දුම්රිය සේවාවන් යළි යථා තත්ත්වයට පත් විය.


කේ ආර් ඩී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


One Killed, Another Seriously Injured in Aluthgama Railway Crossing Accident


An individual lost their life and another sustained serious injuries after a three-wheeler collided with the "Sagarika" train at a railway crossing near the Ganegama Purana Temple in Aluthgama.


According to police, the train had departed from the Maradana Railway Station when the collision occurred at the crossing. The driver of the three-wheeler died on the spot, while the injured passenger was admitted to Nagoda Hospital for treatment.


Following the accident, local residents staged a protest by blocking the coastal railway line, pointing out that the crossing lacks a safety gate and relies solely on warning signals and bells, making it hazardous. The demonstration temporarily disrupted train services along the coastal line. Police subsequently intervened, and after authorities assured residents that remedial steps would be taken, the protest was called off, allowing train operations to return to normal.


KR TV Network - Domestic News

Comments