Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு


 காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு


பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மஹியங்கனை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வியானா கால்வாய்க்கு அருகில் நேற்றிரவு முதல் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் குறித்து கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அது குறித்த வைத்தியருக்குரியது என உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து அருகிலுள்ள வனப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது வைத்தியரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சடலத்திற்கு அருகில் சில மருந்து மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


අතුරුදහන් වූ බව කියන බදුල්ල ශික්ෂණ රෝහලේ විශේෂඥ වෛද්‍යවරයා මළසිරුරක් ලෙස හමුවෙයි


බදුල්ල ශික්ෂණ රෝහලේ සේවය කරමින් සිටියදී අතුරුදහන් වූ බවට වාර්තා වූ විශේෂඥ වෛද්‍යවරයෙකුගේ මළසිරුර මහියංගණය ප්‍රදේශයේදී සොයාගත් බව පොලිසිය පවසයි. මහියංගණය, මාපාකඩ 17 කණුව ප්‍රදේශයේ පිහිටි වියානා ඇළ අසල ඊයේ රාත්‍රියේ සිට අතහැර දමා තිබූ යතුරුපැදියක් සම්බන්ධයෙන් ලද තොරතුරක් මත සිදුකළ විමර්ශනවලදී එය අදාළ වෛද්‍යවරයාට අයත් එකක් බව තහවුරු විය. අනතුරුව පොලිසිය සහ ප්‍රදේශවාසීන් එක්ව අවට කැලෑබද ප්‍රදේශයේ සිදුකළ සෝදිසි මෙහෙයුමකදී වෛද්‍යවරයාගේ සිරුර සොයාගෙන ඇති අතර, සිරුර අසල තිබී ඖෂධ පෙති කිහිපයක්ද හමුවී තිබේ. සිද්ධිය සම්බන්ධයෙන් මහියංගණය පොලිසිය වැඩිදුර විමර්ශන සිදුකරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Missing Badulla Teaching Hospital Consultant Specialist Found Dead in Mahiyanganaya


A consultant specialist attached to the Badulla Teaching Hospital, who had been reported missing, was found dead in Mahiyanganaya, police confirmed. Investigations were initiated after an abandoned motorcycle was discovered near the Viyana Canal at the 17th-mile post in Mapakada, Mahiyanganaya, which was later confirmed to belong to the missing doctor. A joint search operation conducted by the police and local residents led to the recovery of the doctor's body in a nearby forested area, with several medicinal tablets found near the scene. Further investigations are being carried out by the Mahiyanganaya Police.


KR TV Network - Local News

Comments