Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடி கலாச்சார அதிகார சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்



















காத்தான்குடி கலாச்சார அதிகார சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் கலாச்சார அதிகார சபையின் நடப்பாண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று 22ஆம் திகதி காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் நிகாரா மவுஜூத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை கலாச்சார உத்தியோகத்தர் M.I.M. ஜவாஹிர் (பலாஹி), BA அவர்கள் நெறிப்படுத்தினார்.

பிரதேச செயலாளர் நிகாரா மவுஜூத் அவர்கள் விசேட உரையாற்றியதுடன், கடந்த ஆண்டில் கலாச்சார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மற்றும் செயற்பாடுகளைப் பாராட்டினார். கலைஞர்களின் பங்களிப்பையும் பாராட்டிய அவர், எதிர்காலத்தில் கலைஞர்களை மேலும் ஊக்குவிப்பதற்கும், கலாச்சார அதிகார சபையை மேலும் சிறப்பாக இயங்கச் செய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கலாச்சார அதிகார சபையின் கடந்த ஆண்டுக்கான செயற்பாடுகள் தொடர்பில் முன்னாள் செயலாளர் இல்மி அஹமட் லெப்பை அவர்கள் சபையோருக்கு விளக்கமளித்ததுடன், கடந்த கூட்ட அறிக்கையும் வாசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மலர் தொடர்பான கருத்துக்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து M.I.M. ஜவாஹிர் (பலாஹி), BA அவர்களின் தலைமையில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.

இதன்படி, பதவி வழித் தலைவராக பிரதேச செயலாளர் நிகாரா மவுஜூத் அவர்களும், இணைத் தலைவராக ஊடகவியலாளர் டி.எல். ஜாஃபர் கான் அவர்களும், உப தலைவராக ஆசிரியர் அமீர் அலி அவர்களும், செயலாளராக சமுர்த்தி உத்தியோகத்தர் சுல்மி அவர்களும், உப செயலாளராக ஆசிரியை அசீரா அவர்களும், பொருளாளராக இக்பால் அவர்களும் சபையோரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், 18 அங்கத்தவர்களைக் கொண்ட உறுப்பினர் சபையும் தெரிவு செய்யப்பட்டதுடன், அதில் ஐந்து சிரேஷ்ட பிரஜைகள் உள்வாங்கப்பட்டனர்.

சென்ற ஆண்டுக்கான கணக்கறிக்கை பொருளாளரால் கையளிக்கப்பட்டு, கலாச்சார உத்தியோகத்தர் M.I.M. ஜவாஹிர் (பலாஹி), BA அவர்களால் சபையில் வாசிக்கப்பட்டது.

நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஜாரூப் அவர்களும், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பெருமளவான கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

புதிய செயலாளர் மற்றும் தலைவரின் உரைகளுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

புதிய நிர்வாக சபைக்கு KR TV LANKAN VOICE இன் வாழ்த்துக்கள்!

காத்தான்குடி கலாச்சார அதிகார சபையின் புதிய நிர்வாக சபைக்கு KR TV LANKAN VOICE ஊடகக் குழுமத்தின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காத்தான்குடியின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேலும் வளர்ப்பதற்கும், உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் புதிய நிர்வாக சபை சிறப்பான பங்களிப்பை வழங்கும் என நம்புகின்றோம். புதிய நிர்வாக சபையின் அனைத்து செயற்பாடுகளும் வெற்றியடைய எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது ஊடகங்கள்:
KR TV LANKAN VOICE
KR TV NETWORK
KR TV NETWORK – SINHALA
KR TV NETWORK – ENGLISH
www.krtvlankanvoice.lk
KR TV LANKAN VOICE (PVT) LTDකාත්තන්කුඩි සංස්කෘතික බල මණ්ඩලයේ වාර්ෂික මහා සභා රැස්වීම සහ නව නිලධාරී මණ්ඩලය

කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය යටතේ ක්‍රියාත්මක වන සංස්කෘතික බල මණ්ඩලයේ මෙවර වාර්ෂික මහා සභා රැස්වීම සහ නව නිලධාරී මණ්ඩලය තෝරා පත් කර ගැනීම අද 22 වනදා කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල ශාලාවේදී පැවැත්විණි.

කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් නිහාරා මවුජූත් මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම අවස්ථාව සංස්කෘතික නිලධාරී M.I.M. ජවාහීර් (බලාහි), BA මහතා විසින් මෙහෙයවන ලදී.

ප්‍රාදේශීය ලේකම් නිහාරා මවුජූත් මහත්මිය විශේෂ දේශනයක් පවත්වමින් පසුගිය වසරේ සංස්කෘතික බල මණ්ඩලය විසින් සිදු කළ සේවාවන් සහ ක්‍රියාකාරකම් අගය කළාය. කලාකරුවන්ගේ දායකත්වයද අගය කළ ඇය, ඉදිරියේදී කලාකරුවන් තවදුරටත් දිරිමත් කිරීමත්, සංස්කෘතික බල මණ්ඩලය වඩාත් සාර්ථකව ක්‍රියාත්මක කිරීමත් අවශ්‍ය බව පෙන්වා දුන්නාය.

පසුගිය වසරේ ක්‍රියාකාරකම් පිළිබඳව හිටපු ලේකම් ඉල්මි අහමඩ් ලෙබ්බේ මහතා සභාව දැනුවත් කළ අතර, පසුගිය රැස්වීමේ වාර්තාවද කියවන ලදී. පසුගිය වසරේ නිකුත් කළ සංස්කෘතික සඟරාව පිළිබඳ අදහස්ද හුවමාරු කර ගන්නා ලදී.

ඉන් අනතුරුව M.I.M. ජවාහීර් (බලාහි), BA මහතාගේ ප්‍රධානත්වයෙන් නව නිලධාරී මණ්ඩලය තෝරා පත් කර ගන්නා ලදී.

නිල බලයෙන් සභාපති ලෙස ප්‍රාදේශීය ලේකම් නිහාරා මවුජූත් මහත්මියද, සම සභාපති ලෙස මාධ්‍යවේදී ඩී.එල්. ජාෆර් ඛාන් මහතාද, උප සභාපති ලෙස ගුරු අමීර් අලි මහතාද, ලේකම් ලෙස සමෘද්ධි නිලධාරී සුල්මි මහතාද, උප ලේකම් ලෙස ගුරු අසීරා මහත්මියද, භාණ්ඩාගාරික ලෙස ඉක්බාල් මහතාද ඒකමතිකව තෝරා පත් කර ගන්නා ලදී.

සාමාජිකයන් 18 දෙනෙකුගෙන් සමන්විත නව සාමාජික මණ්ඩලයක්ද තෝරා පත් කර ගත් අතර, ජ්‍යෙෂ්ඨ පුරවැසියන් පස් දෙනෙකුද එයට ඇතුළත් කරන ලදී.

පසුගිය වසරේ ගිණුම් වාර්තාව භාණ්ඩාගාරික විසින් ඉදිරිපත් කළ අතර, එය සංස්කෘතික නිලධාරී M.I.M. ජවාහීර් (බලාහි), BA මහතා විසින් සභාවට කියවන ලදී.

මෙම අවස්ථාවට කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ ග්‍රාම නිලධාරී ජාරූෆ් (Jaroof) මහතා, සංස්කෘතික සංවර්ධන නිලධාරීන්, කලාකරුවන් සහ සංස්කෘතික ක්ෂේත්‍රයට සම්බන්ධ විශාල පිරිසක් සහභාගී වූහ.

නව ලේකම්වරයාගේ සහ සභාපතිවරයාගේ අදහස් දැක්වීම්වලින් අනතුරුව වැඩසටහන අවසන් විය.

නව නිලධාරී මණ්ඩලයට KR TV LANKAN VOICE හි උණුසුම් සුබ පැතුම්!

කාත්තන්කුඩියේ කලාව, සංස්කෘතිය සහ උරුමයන් තවදුරටත් සංවර්ධනය කිරීමටත්, දේශීය කලාකරුවන් දිරිමත් කිරීමටත් නව නිලධාරී මණ්ඩලය සාර්ථක දායකත්වයක් ලබා දෙනු ඇතැයි අපි විශ්වාස කරමු.

නව නිලධාරී මණ්ඩලයේ සියලුම ඉදිරි කටයුතු සාර්ථක වේවායි KR TV LANKAN VOICE මාධ්‍ය ජාලයේ සුභාශිංසන පිරිනමමු.

අපගේ මාධ්‍ය ජාලය:
KR TV LANKAN VOICE
KR TV NETWORK
KR TV NETWORK – SINHALA
KR TV NETWORK – ENGLISH
www.krtvlankanvoice.lk
KR TV LANKAN VOICE (PVT) LTDAnnual General Meeting and New Executive Committee of Kattankudy Cultural Authority

The Annual General Meeting and the election of the new Executive Committee of the Cultural Authority functioning under the Kattankudy Divisional Secretariat were held today, the 22nd, at the Kattankudy Divisional Secretariat Auditorium.

The meeting was chaired by Kattankudy Divisional Secretary Ms. Nihara Mawjood, while the programme was coordinated by Cultural Officer M.I.M. Jawahir (Balahi), BA.

Delivering a special address, Divisional Secretary Ms. Nihara Mawjood commended the services and activities carried out by the Cultural Authority during the past year and appreciated the contributions of local artists. She emphasized the importance of further encouraging artists and strengthening the activities of the Cultural Authority in the coming years.

Former Secretary Ilmi Ahamed Lebbe briefed the members on the activities carried out during the previous year, while the minutes of the previous meeting were also read. Views were also shared regarding the cultural publication issued last year.

The new Executive Committee was subsequently elected under the leadership of M.I.M. Jawahir (Balahi), BA.

The Divisional Secretary, Ms. Nihara Mawjood, was appointed as the ex-officio President, while journalist T.L. Jowfer Khan was elected as Co-President. Teacher Ameer Ali was elected Vice President, Samurdhi Officer Sulmi as Secretary, teacher Aseera as Assistant Secretary, and Iqbal as Treasurer. All appointments were made unanimously.

An 18-member committee was also elected, including five senior citizens.

The previous year's financial statement was handed over by the Treasurer and read before the assembly by Cultural Officer M.I.M. Jawahir (Balahi), BA.

The event was attended by Jaroof, Grama Niladhari of the Kattankudy Divisional Secretariat, Cultural Development Officers, as well as a large number of artists and cultural enthusiasts.

The programme concluded with addresses by the newly appointed Secretary and President.

Congratulations to the New Executive Committee from KR TV LANKAN VOICE!

KR TV LANKAN VOICE extends its warmest congratulations to the newly elected Executive Committee of the Kattankudy Cultural Authority.

We hope the new committee will make a meaningful contribution towards promoting Kattankudy’s arts, culture and heritage while further encouraging and supporting local artists.

We wish the new Executive Committee every success in all its future activities.

Our Media Platforms:
KR TV LANKAN VOICE
KR TV NETWORK
KR TV NETWORK – SINHALA
KR TV NETWORK – ENGLISH
www.krtvlankanvoice.lk
KR TV LANKAN VOICE (PVT) LTD

Comments