Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சர்வதேச அல்குர்ஆன் போட்டியில் சாதனை படைத்த இலங்கை மாணவருக்கு சவூதிக்கான இலங்கை தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வத் வாழ்த்து



சர்வதேச அல்குர்ஆன் போட்டியில் சாதனை படைத்த இலங்கை மாணவருக்கு சவூதிக்கான இலங்கை தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வத் வாழ்த்து


சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெற்ற 46 ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனம், ஓதுதல் மற்றும் விளக்கவுரைக்கான போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த அல்-ஹாபிழ் முஹம்மத் இம்தாத்துக்கு சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகின் 133 நாடுகளிலிருந்து 202 ஆண் மற்றும் 132 பெண் போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 334 போட்டியாளர்கள் கலந்துகொண்ட வரலாற்றிலேயே அதிகளவானோர் பங்கேற்ற இந்தப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த மாணவர் பெற்ற இந்த சாதனை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்போட்டியின் வரலாற்றில் முதன்முறையாகப் பெண் போட்டியாளர்களும் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் உள்ள ஹாபிழ்களுக்கு இத்தகைய பெறுமதிமிக்க வாய்ப்பை வழங்கியமைக்காக சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் சவூதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சர் அப்துல்லத்தீப் பின் அப்துல் அஸீஸ் அல்-ஷேக் ஆகியோருக்கு தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி


ජාත්‍යන්තර අල් කුර්ආන් තරගාවලියේදී ජයග්‍රහණය කළ ශ්‍රී ලාංකික සිසුවාට සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ්ගෙන් සුබපැතුම්


සෞදි අරාබියේ මක්කම ශුද්ධ වූ හරාම් දේවස්ථානයේදී පැවැති 46 වන අබ්දුල් අසීස් රජු ජාත්‍යන්තර අල් කුර්ආන් කටපාඩම් කිරීම, සජ්ඣායනා කිරීම සහ අර්ථකථනය කිරීමේ තරගාවලියෙන් තුන්වන ස්ථානය දිනා මවුබිමට කීර්තියක් අත්කර දුන් අල්-හාෆිස් මුහම්මද් ඉම්දාද් සිසුවා වෙත සෞදි අරාබියේ ශ්‍රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් මහතා සිය උණුසුම් සුබපැතුම් එක් කර තිබේ. ලොව පුරා රටවල් 133 කින් පිරිමි තරගකරුවන් 202 ක් සහ කාන්තා තරගකාරියන් 132 ක් ඇතුළුව තරගකරුවන් 334 දෙනෙකු සහභාගී වූ මෙම තරගාවලිය, ඉතිහාසයේ වැඩිම පිරිසක් සහභාගී වූ තරගය මෙන්ම ප්‍රථම වරට කාන්තා සහභාගීත්වය එක්වූ සුවිශේෂී අවස්ථාවක් ද වේ. මෙවන් ප්‍රමුඛ පෙළේ තරගයකදී ශ්‍රී ලාංකික සිසුවෙකු දැක්වූ මෙම දක්ෂතාව අගය කළ තානාපතිවරයා, ලොව පුරා අල් කුර්ආන් කටපාඩම් කළ උගතුන් උදෙසා මෙවන් අවස්ථාවක් සලසා දීම සම්බන්ධයෙන් සෞදි රජු සල්මාන් බින් අබ්දුල් අසීස්, ඔටුන්න හිමි කුමරු මොහොමඩ් බින් සල්මාන් සහ සෞදි ඉස්ලාමීය කටයුතු පිළිබඳ අමාත්‍යවරයා වෙත සිය කෘතඥතාව ද පළ කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත්


Sri Lankan Ambassador to Saudi Arabia O.L. Ameer Ajwad Congratulates Al-Hafiz Muhammad Imthad on Global Quran Competition Success


The Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, O.L. Ameer Ajwad, has extended heartfelt congratulations to Al-Hafiz Muhammad Imthad for securing third place at the 46th King Abdulaziz International Competition for the Memorization, Recitation, and Interpretation of the Holy Qur'an held at the Holy Haram in Makkah. Bringing honor and pride to Sri Lanka, Imthad competed in an edition that marked the highest participation in the competition’s history, featuring 334 contestants (202 male and 132 female) from 133 countries and introducing female participation for the first time. Ambassador Ameer Ajwad commended his accomplishment, wished him continued success in future international forums, and expressed sincere gratitude to Custodian of the Two Holy Mosques King Salman bin Abdulaziz Al Saud, Crown Prince and Prime Minister HRH Mohammed bin Salman, and Minister of Islamic Affairs H.E. Abdullatif bin Abdulaziz Al-Sheikh for hosting the global event.


KR TV Network - International News

Comments