ஈரானுடனான போரில் அமெரிக்கா தோல்வி: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பகிரங்க அறிவிப்பு!
ஈரானுடனான போரில் அமெரிக்கா தோல்வி: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பகிரங்க அறிவிப்பு!
ஈரான் உடனான போரில் அமெரிக்கா முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஈரான் அரசு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியின் போதே இந்த அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்குப் பணிய மறுத்ததை ஈரான் தனது மிகப்பெரிய வெற்றியாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மோதல்களால் உலக நாடுகளின் மத்தியில் அமெரிக்கா நற்பெயரிழந்து வெறுக்கத்தக்க நாடாக மாறியுள்ளதாகவும், ஈரானுடனான போரில் அமெரிக்கா முழுவதுமாகத் தோல்வி அடைந்து சரணாகதி நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் ஈரானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பொருளாதாரப் போரைத் தொடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேசச் செய்தி
ඉරානය සමඟ යුද්ධයෙන් ඇමරිකාව පරාජය වී ඇත: ඉරාන ජනාධිපති මසූද් පෙෂෙෂ්කියාන්ගෙන් ප්රසිද්ධ ප්රකාශයක්!
ඉරානය සමඟ පවතින යුද්ධයෙන් ඇමරිකාව සම්පූර්ණයෙන්ම පරාජය වී ඇති බව ඉරාන ජනාධිපති මසූද් පෙෂෙෂ්කියාන් ප්රසිද්ධියේ ප්රකාශ කර තිබේ. ඉරාන රජයේ ප්රවෘත්ති ඒජන්සිය වෙත විශේෂ සම්මුඛ සාකච්ඡාවක් ලබා දෙමින් ඔහු මෙම අදහස් පළ කළේය.
හොර්මුස් සමුද්ර සන්ධිය සම්බන්ධයෙන් පාලනය තබා ගැනීම සහ ඇමරිකාවේ ඉල්ලීම්වලට යටත් වීම ප්රතික්ෂේප කිරීම ඉරානය තම ජයග්රහණයක් ලෙස සලකන බව ඔහු සඳහන් කළේය. මෙම ගැටුම් හේතුවෙන් ලෝක රටවල් අතර ඇමරිකාව පිළිකුලට ලක් වූ රටක් බවට පත්ව ඇති බවත්, ඉරානය සමඟ යුද්ධයෙන් ඇමරිකාව පූර්ණ පරාජයක් ලබා යටත් වී ඇති බවත් ඔහු වැඩිදුරටත් කියා සිටියේය.
මේ අතර, ඉරානයේ ඩයනා (පරමාණුක) බලශක්ති වැඩසටහන අවසන් කිරීමට සහ හොර්මුස් සමුද්ර සන්ධිය නැවත විවෘත කිරීමට ඉරානයට එරෙහිව පෙර නොවූ විරූ ආර්ථික යුද්ධයක් දියත් කරන බව ඇමරිකානු ජනාධිපති ට්රම්ප් නිවේදනය කර තිබේ.
කේ ආර් ඩී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
US Defeated in War with Iran: Iranian President Masoud Pezeshkian Makes Open Declaration
Iranian President Masoud Pezeshkian has publicly declared that the United States has completely failed and lost the war against Iran. He made these remarks during an interview with the state-run Iranian news agency.
Pezeshkian stated that Iran considers its control over the Strait of Hormuz and its refusal to bow to US demands as a major victory. He added that these developments have turned the US into a globally disliked nation, emphasizing that Washington has suffered a total defeat and capitulation in the conflict with Iran.
Meanwhile, US President Trump has announced an unprecedented economic war against Iran, aimed at dismantling its nuclear program and forcing the reopening of the strategic Strait of Hormuz.
KR TV Network - International News

Comments