Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் Facebook பக்கத்திற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அனைவரும் முன்வர வேண்டும்


 நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் Facebook பக்கத்திற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அனைவரும் முன்வர வேண்டும்


எமது உயிரினும் மேலான கண்மணி நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்களது மனைவிமார்களையும், குடும்பத்தினரையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் மிகவும் இழிவாகவும் கேவலமாகவும் சித்தரிக்கும் வகையில் ஒரு Facebook பக்கத்தில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமது உயிரினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதர். அவர்களை அவமதிக்கும் வகையிலான எந்தவொரு செயற்பாடும் எமது மத உணர்வுகளுக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.


எனவே, இந்த விடயத்தை வெறுப்பு, வன்முறை அல்லது தனிநபர் பழிவாங்கல் மூலம் எதிர்கொள்ளாமல், சட்டபூர்வமான மற்றும் பொறுப்பான முறையில் எதிர்கொள்வோம்.


குறித்த Facebook பக்கத்திற்கு எதிராக அனைவரும் தங்களால் இயன்ற வகையில் உரிய ஆதாரங்களுடன் சைபர் குற்றப்பிரிவு மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறையான முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அத்துடன், குறித்த Facebook பக்கம் மற்றும் அதில் வெளியிடப்பட்டுள்ள அவமதிப்பான பதிவுகளை Facebook இன் அதிகாரப்பூர்வ Report வசதியின் மூலம் புகாரளிப்பதோடு, தேவையானவர்கள் Facebook-க்கு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அல்லது தொடர்பு வழிமுறைகள் ஊடாகவும் இந்த Facebook பக்கம் தொடர்பான புகாரைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


முறைப்பாடு செய்யும்போது குறித்த Facebook பக்கத்தின் பெயர், அதன் இணைப்பு, சம்பந்தப்பட்ட பதிவுகளின் Screenshot, பதிவுகளின் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட தொடர்புடைய ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.


தொழில்நுட்ப அறிவு கொண்ட சகோதரர்கள் குறித்த பக்கத்தின் பின்னணியில் உள்ளவர்களை சட்டவிரோதமான முறையில் தேடுதல், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல் அல்லது தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு தேவையான தொழில்நுட்பத் தகவல்களை சட்டரீதியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


சட்டத்துறை நிபுணர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட மத உணர்வுகளுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு கிடைப்பதற்காக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.


நாம் அனைவரும் ஒன்றிணைந்து சட்டத்தின் வழியில் குரல் கொடுப்போம்.


அவமதிப்பான உள்ளடக்கத்தை மேலும் பகிர்ந்து பரப்புவதற்குப் பதிலாக Report செய்வோம்.


சைபர் குற்றப்பிரிவிலும் பொலிஸ் நிலையங்களிலும் முறையான முறைப்பாடு செய்வோம்.


Facebook நிர்வாகத்திற்கும் உரிய முறையில் புகார் தெரிவிப்போம்.


சட்டத்தை எமது கைகளில் எடுத்துக்கொள்ளாமல், சட்டத்தின் மூலமே நடவடிக்கை எடுக்கக் கோருவோம்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதான எமது அன்பையும் மரியாதையையும் அமைதியான, பொறுப்பான மற்றும் சட்டபூர்வமான வழியில் வெளிப்படுத்துவோம்.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி, சட்டத்தை மீறிய செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


KR TV NETWORK


නබි මුහම්මද් (සල්ලාල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණන්ට සහ ඉස්ලාම් ආගමට අපහාස කරන Facebook පිටුවට එරෙහිව නීතිමය ක්‍රියාමාර්ග සඳහා සියලු දෙනා ඉදිරිපත් විය යුතුය


අපගේ ජීවිතයටත් වඩා ආදරය කරන නබි මුහම්මද් මුස්තෆා (සල්ලාල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණන්ටත්, එතුමාණන්ගේ බිරින්දෑවරුන්ටත්, පවුලේ සාමාජිකයන්ටත්, ඉස්ලාම් ආගමටත් ඉතා අපහාසාත්මක හා නින්දාසහගත ආකාරයෙන් Facebook පිටුවක් හරහා පළ කිරීම් සිදුකර ඇති බවට අවධානය යොමුව තිබේ.


නබි මුහම්මද් (සල්ලාල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණන් අපගේ ජීවිතයටත් වඩා අප ආදරය කරන අල්ලාහ්ගේ දූතයාණන් වේ. එබැවින් එතුමාණන්ට අපහාස කරන ආකාරයේ ඕනෑම ක්‍රියාවක් අපගේ ආගමික හැඟීම්වලට දැඩි බලපෑමක් ඇති කළ හැකිය.


එබැවින් මෙම කරුණ වෛරයෙන්, ප්‍රචණ්ඩත්වයෙන් හෝ පෞද්ගලික පළිගැනීමකින් නොව, නීත්‍යානුකූල සහ වගකීම් සහගත ආකාරයෙන් විසඳීමට කටයුතු කරමු.


අදාළ Facebook පිටුවට එරෙහිව සියලු දෙනාට හැකි පරිදි අදාළ සාක්ෂි සමඟ Cyber Crime අංශයට සහ ළඟම ඇති පොලිස් ස්ථානයට නිසි පැමිණිල්ලක් ඉදිරිපත් කරන ලෙස ඉල්ලා සිටිමු.


එමෙන්ම අදාළ Facebook පිටුව සහ එහි පළ කර ඇති අපහාසාත්මක අන්තර්ගතයන් Facebook හි නිල Report පහසුකම හරහා වාර්තා කරන ලෙසත්, අවශ්‍ය නම් Facebook පරිපාලනය වෙත නිල විද්‍යුත් තැපෑලක් හෝ නිල සම්බන්ධතා ක්‍රමයක් හරහා මෙම පිටුව සම්බන්ධයෙන් පැමිණිල්ලක් ඉදිරිපත් කරන ලෙසත් ඉල්ලා සිටිමු.


පැමිණිල්ලක් ඉදිරිපත් කිරීමේදී Facebook පිටුවේ නම, එහි සබැඳිය, අදාළ පළ කිරීම්වල Screenshots, පළ කළ දිනය සහ වේලාව ඇතුළු වැදගත් සාක්ෂි ආරක්ෂිතව තබා ගැනීම ඉතා වැදගත් වේ.


තාක්ෂණික දැනුම ඇති සහෝදරයන් නීති විරෝධී ආකාරයෙන් අදාළ පුද්ගලයන් සොයා ගැනීම, පෞද්ගලික තොරතුරු ප්‍රසිද්ධ කිරීම හෝ තමන්ම නීතිය අතට ගැනීමෙන් වැළකී, අදාළ තාක්ෂණික තොරතුරු නීත්‍යානුකූලව නීතිය ක්‍රියාත්මක කරන බලධාරීන් වෙත ලබාදෙන ලෙස ඉල්ලා සිටිමු.


නීති ක්ෂේත්‍රයේ විශේෂඥයන් ද මෙම කරුණ සම්බන්ධයෙන් අවධානය යොමු කර අවශ්‍ය නීතිමය ක්‍රියාමාර්ග ගැනීමට ඉදිරිපත් විය යුතුය.


අපි සියලු දෙනා එක්ව නීතියේ මාර්ගයෙන් හඬ නගමු.


අපහාසාත්මක අන්තර්ගතයන් තවදුරටත් බෙදා නොහරිමින් ඒවා Report කරමු.


Cyber Crime අංශයට සහ පොලිස් ස්ථාන වෙත නිසි පැමිණිලි ඉදිරිපත් කරමු.


Facebook පරිපාලනය වෙතද නිසි ආකාරයෙන් පැමිණිලි කරමු.


නීතිය අපගේ අතට නොගෙන, නීතිය ක්‍රියාත්මක කරන ලෙස ඉල්ලා සිටිමු.


නබි මුහම්මද් (සල්ලාල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණන් කෙරෙහි අපගේ ආදරය හා ගෞරවය සාමකාමී, වගකීම් සහගත සහ නීත්‍යානුකූල ආකාරයෙන් ප්‍රකාශ කරමු.


අදාළ බලධාරීන් මෙම කරුණ කඩිනමින් විමර්ශනය කර, නීතිය උල්ලංඝනය කර ඇති බව තහවුරු වුවහොත් සුදුසු නීතිමය ක්‍රියාමාර්ග ගන්නා ලෙස ඉල්ලා සිටිමු.


KR TV NETWORK


Legal Action Urged Against Facebook Page Allegedly Insulting Prophet Muhammad (PBUH) and Islam


It has come to our attention that a Facebook page has allegedly published highly offensive and degrading content targeting our beloved Prophet Muhammad Mustafa (peace and blessings be upon him), his wives, his family and the religion of Islam.


Prophet Muhammad (peace and blessings be upon him) is the Messenger of Allah whom Muslims love more than their own lives. Content that insults or degrades the Prophet can deeply hurt the religious sentiments of Muslims and may also affect social harmony.


Therefore, we urge everyone to respond through peaceful, responsible and lawful means, without threats, violence or personal retaliation.


We call upon everyone to submit proper complaints against the relevant Facebook page to the Cyber Crime authorities and the nearest police station, providing relevant evidence where available.


We also urge the public to report the Facebook page and the offensive posts through Facebook’s official reporting system. Where appropriate, complaints may also be submitted to Facebook through its official email or official contact channels regarding the relevant page and its content.


When making a complaint, it is important to preserve relevant evidence such as the Facebook page name, page link, screenshots of the offensive posts, dates and times of publication and other information that may assist the authorities in their investigation.


Those with technical expertise are urged not to engage in illegal attempts to identify, expose or target individuals, publish private information or take the law into their own hands. Instead, any relevant technical information should be provided lawfully to the appropriate law-enforcement authorities.


Members of the legal profession are also respectfully requested to take an interest in this matter and assist in pursuing appropriate legal remedies.


Let us all raise our voices through lawful channels.


Instead of further sharing and amplifying offensive content, report it through the appropriate platforms.


Submit proper complaints to Cyber Crime authorities and the police.


Report the matter through Facebook’s official channels as well.


Let us not take the law into our own hands. Let us demand that the law take its proper course.


Let us express our love and respect for Prophet Muhammad (peace and blessings be upon him) through peaceful, responsible and lawful action.


We respectfully call upon the relevant authorities to investigate this matter promptly and, if any violation of the law is established, take appropriate legal action against those responsible.


KR TV NETWORK

Comments