Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் ஒரு motivational programme-ல், "motivational speaker" என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் பெற்றோர்களையும் கட்டிளமைப் பருவத்தில் இருக்கும் பாடசாலை மாணவர்களையும் உணர்வுரீதியாக பாதிக்கும் வகையில் Emotional threatening செய்யும் ஒரு வீடியோவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது


 பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் ஒரு motivational programme-ல், "motivational speaker" என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர்  பெற்றோர்களையும் கட்டிளமைப் பருவத்தில் இருக்கும்  பாடசாலை மாணவர்களையும்  உணர்வுரீதியாக பாதிக்கும் வகையில் Emotional threatening செய்யும் ஒரு வீடியோவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.


ஒரு குழந்தையை அழ வைப்பது, குற்றவுணர்வை ஏற்படுத்துவது, பெற்றோர்களின் கஷ்டங்களை முன்வைத்து குழந்தையை emotionally pressure செய்வது அல்லது “இதுதான் வாழ்க்கையின் உண்மை” என்று பயத்தையும் பரிதாபத்தையும் தூண்டுவது, இவை அனைத்தும் motivation என்பதன் சரியான வடிவம் அல்ல.


ஒரு குழந்தை மாற வேண்டும் என்பதற்காக, முதலில் அதன் மனதை உடைக்க வேண்டிய அவசியமில்லை.


Fear can make a child obey.

Guilt can make a child comply.

Shame can make a child silent.

But none of these necessarily creates healthy motivation.


உண்மையான motivation என்பது ஒரு குழந்தையின் self-worth-ஐ குறைப்பதல்ல.

அதன் திறமைகளை அடையாளம் காணச் செய்வது. தவறுகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்யக் கற்றுக்கொடுப்பது.

தன்னம்பிக்கையை வளர்ப்பது.


இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பாடசாலை நிர்வாகமும் பெற்றோர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையை உணர்ச்சிவசப்படுத்தி அழ வைப்பது, குற்றவுணர்ச்சியைத் தூண்டுவது இவையெல்லாம் உளரீதியாக பாரிய நிலையான (irreversible) மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.


சில நேரங்களில் அந்தக் குழந்தை மேடையில் அழலாம், உடனடியாக “மாற்றம்” ஏற்பட்டது போலத் தோன்றலாம். ஆனால் அந்த அனுபவம் அதன் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வேறு ஒரு கேள்வி.


குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் தேவை,

அவமானமோ, பயமோ, குற்றவுணர்வோ அல்லது உணர்ச்சி ரீதியான manipulation ஓ அல்ல. அவர்களுக்கு தேவையானது புரிதல், பாதுகாப்பு, மரியாதை, சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆரோக்கியமான motivation.


ஒரு motivational speaker பேசுகிறார் என்பதற்காக, அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு psychological technique-மும் சரியானது என்று அர்த்தமல்ல.

குழந்தைகளின் மனம் ஒரு motivation tool அல்ல. அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. 


பொறுப்புடன் பயணிப்போம்! 


Dr Rifshiya Raheem 

Mental Health Professional (UK)

ASN/SEN Educator (UK)

MSc. Clinical Child Psychology (UK)

PG in Special Educational Needs (UK)

BUMS (SL)

BSc. Psychology & Counselling 


Comments