Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

போலியான SLS தரச்சான்றுடன் சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக இருந்த 8,500 குடிநீர் போத்தல்கள் அவிசாவளையில் அதிகாரசபையினால் மீட்பு


 போலியான SLS தரச்சான்றுடன் சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக இருந்த 8,500 குடிநீர் போத்தல்கள் அவிசாவளையில் அதிகாரசபையினால் மீட்பு


போலியான இலங்கை தரச்சான்று இலச்சினையைப் (SLS Mark) பயன்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அமித்திரிகல, ருவன்வெல்ல பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு, அவிசாவளையிலுள்ள களஞ்சியமொன்றில் வைக்கப்பட்டிருந்த போதே இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 500 மில்லிலீட்டர் முதல் 19 லீட்டர் வரையான போத்தல்களில் போலியான SLS தரச்சான்று இலச்சினை மற்றும் சான்றிதழ் இலக்கம் 894 என்பன பொறிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போத்தல்கள் அனைத்தும் அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டு பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், சந்தேகம் இருப்பின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


ව්‍යාජ SLS ප්‍රමිති ලාංඡනය යෙදූ පානීය ජල බෝතල් 8,500ක තොගයක් පාරිභෝගික අධිකාරිය භාරයට


ව්‍යාජ ලෙස ශ්‍රී ලංකා ප්‍රමිති ලාංඡනය (SLS Mark) යොදා වෙළෙඳපොළට නිකුත් කිරීමට සූදානම් කර තිබූ පානීය ජල බෝතල් 8,500කට ආසන්න තොගයක් පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරියේ නිලධාරීන් විසින් සිය භාරයට ගෙන තිබේ. අමිතිරිගල, රුවන්වැල්ල ප්‍රදේශයේ නිෂ්පාදනය කර අවිස්සාවේල්ල ප්‍රදේශයේ ගබඩාවක තැන්පත් කර තිබියදී මෙම වැටලීම සිදුකර ඇත. මිලිලීටර් 500 සිට ලීටර් 19 දක්වා ප්‍රමාණවලින් යුත් බෝතල්වල ව්‍යාජ SLS ලාංඡනය සහ සහතික අංක 894 සඳහන් කර තිබූ බව අනාවරණය වී තිබේ. මෙම සම්පූර්ණ තොගය මුද්‍රා තබා ඇති අතර වගකිවයුත්තන්ට එරෙහිව නීතිමය පියවර ගැනීමට නියමිතය. වෙළෙඳ ප්‍රජාව සහ පාරිභෝගිකයින් ප්‍රමිති සහතික පිළිබඳ විමසිලිමත් වන ලෙසත්, සැකකටයුතු තොරතුරු වෙතොත් 1977 ක්ෂණික දුරකථන අංකයට දැනුම් දෙන ලෙසත් අධිකාරිය ඉල්ලා සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Nearly 8,500 Bottled Water Units with Fake SLS Mark Seized in Avissawella


A stock of nearly 8,500 bottled drinking water units bearing counterfeit Sri Lanka Standards (SLS) certification marks and certificate number 894 was seized by the Consumer Affairs Authority (CAA) in Avissawella. Initial investigations revealed that the water bottles, ranging from 500ml to 19-liter containers, were manufactured in Amitirigala, Ruwanwella and stored at an Avissawella warehouse prior to market distribution. The entire stock has been sealed and taken into official custody, with legal action pending against responsible parties. The CAA has advised consumers and traders to verify certification authenticity and report suspicious goods via the 1977 consumer hotline.


KR TV Network - Local News

Comments