Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கின் கருப்புப் பணத்தில் சொத்து வாங்கிய பிரபல டியூஷன் ஆசிரியர்: தம்புள்ளையில் 10 கோடி மாந்தோட்டம், மாவரமண்டியவில் 15 கோடி மாளிகை – மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி வெளிப்படுத்தல்!


 போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கின் கருப்புப் பணத்தில் சொத்து வாங்கிய பிரபல டியூஷன் ஆசிரியர்: தம்புள்ளையில் 10 கோடி மாந்தோட்டம், மாவரமண்டியவில் 15 கோடி மாளிகை – மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி வெளிப்படுத்தல்!


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்


நாட்டின் பிரதான   போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) நடத்திய பெரும் அளவிலான பணமோசடி மற்றும் கருப்புப் பணச் சலவை மோசடியைக் காவல்துறையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCIB) வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது.


ஒரு பிரபல டியூஸன் ஆசிரியரின் பெயரைக் முன்னிலைப்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து கொள்வனவுகள் தொடர்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தம்புள்ளை நகருக்கு அருகில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அதில் தம்புள்ளையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 3 மாந்தோட்ட நிலங்களும், அங்குள்ள ஆடம்பர வீடும் அடங்குகின்றன.


மேலும், மாவரமண்டிய பகுதியில் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர மாளிகையும் குறித்த டியூஸன் ஆசிரியரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதுடன், அங்கு தற்போது அவரது தாயார் வசித்து வருவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை திரும்பியுள்ள ஷிரான் பாசிக் தற்போது காவல்துறையின் தீவிர தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.


அவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் அந்த டியூஸன் ஆசிரியர் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவதற்கான விரிவான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / குற்றவியல் & விசாரணைச் செய்தி


මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරු ශිරාන් බාසික්ගේ කළු සල්ලිවලින් දේපළ මිලදීගත් ජනප්‍රිය ටියුෂන් ගුරුවරයා කොටුවේ: දඹුල්ලේ කෝටි 10ක අඹ වගාවක් සහ මාවරමණ්ඩියේ කෝටි 15ක මන්දිරයක් පොලිස් මධ්‍යම අපරාධ අංශය විසින් අනාවරණය කර ගනියි!


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


මෙරට ප්‍රධාන පෙළේ මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවෙකු වන ශිරාන් බාසික් විසින් මෙහෙයවන ලද මහා පරිමාණ කළු සල්ලි සුදු කිරීමේ ජාවාරමක් පොලිස් මධ්‍යම අපරාධ විමර්ශන කාර්යාංශය (CCIB) විසින් පාලනය කරමින් විමර්ශන පුළුල් කර තිබේ.


ජනප්‍රිය අමතර පන්ති (Tuition) ගුරුවරයෙකුගේ නම ඉදිරියට දමාගනිමින් සිදුකර ඇති මෙම කෝටි ගණනක දේපළ ජාවාරම පිළිබඳ තොරතුරු මේ වන විට හෙළිදරව් වී ඇත.


මධ්‍යම අපරාධ විමර්ශන කාර්යාංශය විසින් සිදුකළ විශේෂ පරීක්ෂණයකදී දඹුල්ල නගරයට ආසන්නව රුපියල් කෝටි 25කට අධික වටිනාකමකින් යුත් දේපළ රැසක් සොයාගෙන ඇති අතර, ඊට අමතරව කෝටි 10ක් වටිනා අඹ වගා කළ ඉඩම් 3ක් සහ සුපිරි නිවසක් ද හඳුනාගෙන තිබේ.


මාවරමණ්ඩිය ප්‍රදේශයෙන් සොයාගත් රුපියල් කෝටි 15කට අධික වටිනාකමකින් යුත් සුපිරි මන්දිරය අදාළ උපකාරක පන්ති ගුරුවරයාගේ නමින් මිලදී ගෙන ඇති අතර, එහි දැනට පදිංචිව සිටින්නේ ඔහුගේ මව බවද අනාවරණය වී ඇත.


ප්‍රධාන ජාවාරම්කරු වන ශිරාන් බාසික් සමඟ සමීප සබඳතා පැවැත්වූ මෙම ටියුෂන් ගුරුවරයා මේ වන විට විදේශගතව සිටින අතර, ඔහු දිවයිනට පැමිණි වහාම අත්අඩංගුවට ගෙන ප්‍රශ්න කිරීමට නීතිමය පියවර ගනිමින් පවතී.


ඩුබායි රාජ්‍යයෙන් පිටුවහල් කිරීමෙන් පසු ලංකාවට පැමිණි ශිරාන් බාසික් දැනට පොලිස් රඳවාගැනීම් නියෝග මත දැඩි ප්‍රශ්න කිරීම්වලට ලක්ව සිටී.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / අපරාධ සහ විමර්ශන පුවත්


Popular Tuition Teacher Linked to Drug Kingpin Shiran Basik’s Money Laundering Scheme: Rs. 10M Mango Orchard in Dambulla and Rs. 15M Mansion in Mawarawandiya Uncovered by CCIB!


Reporter: Farhana bathurdeen


The Central Crime Investigation Bureau (CCIB) of the police has uncovered a massive money laundering ring operated by notorious drug trafficker Shiran Basik, utilizing the name and front of a well-known tuition instructor.


Investigations reveal that multi-million-rupee properties were acquired under the guise and name of the prominent tuition teacher using illicit funds generated through narcotics syndicates.


Authorities have identified properties worth over Rs. 25 million near Dambulla, which include three mango-cultivated plots of land and a luxury house valued at around Rs. 10 million.


Furthermore, a luxury mansion in Mawarawandiya valued at over Rs. 15 million was purchased under the teacher's name, where his mother is currently residing.


Shiran Basik, who was recently deported from Dubai, is currently undergoing intense interrogation under police detention orders.


The tuition teacher, believed to have maintained close ties with Basik, has fled abroad; police have confirmed that strict legal procedures are underway to arrest him upon his return to Sri Lanka.


KRTV Network | National / Crime & Investigation News

Comments