Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தெஹிவளை பாத்தியா மாவத்தை பள்ளிவாசல் வழக்கு வாபஸ்: 10 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவு!

 


தெஹிவளை பாத்தியா மாவத்தை பள்ளிவாசல் வழக்கு வாபஸ்: 10 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவு!


தெஹிவளையில் அமைந்துள்ள பாத்தியா மாவத்தை பள்ளிவாசலை மூடுவது மற்றும் இடிப்பது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் (UDA) பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.


 பள்ளிவாசலை இடிப்பதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காகக் கல்கிஸ்ஸை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) தாக்கல் செய்திருந்த வழக்கை, அந்த நிறுவனம் அண்மையில் மீளப் பெற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக நீடித்து வந்த சட்ட நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.


 இந்த விவகாரம் கடந்த 2014ஆம் ஆண்டு, சில தீவிர பௌத்த அமைப்புகள் இப்பள்ளிவாசலின் இருப்புக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளைச் செய்ததன் மூலம் ஆரம்பமானது. எனினும், பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் உரிய பதிவு ஆவணங்கள் முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 දෙහිවල පාලියා මාවත මස්ජිදය සම්බන්ධයෙන් පැවති වසර 10ක නීතිමය මාරුව අවසන්!


දෙහිවල පිහිටි පාතියා මාවත මස්ජිදය වසා දැමීම සම්බන්ධයෙන් නාගරික සංවර්ධන අධිකාරිය (UDA) සමඟ පසුගිය දශකයක කාලයක් තිස්සේ පවත්වාගෙන ගയ නීතිමය අරගලය දැන් අවසන් වී තිබේ.


 මස්ජිදය කඩා ඉවත් කිරීමේ නියෝගයක් ලබා ගැනීම සඳහා ගල්කිස්ස මහේස්ත්‍රාත් අධිකරණයේ UDA ආයතනය විසින් ගොනු කර තිබූ නඩුව එම ආයතනය විසින් මෑතකදී ඉල්ලා අස්කර ගන්නා ලදී. මේ හරහා දීර්ඝ කාලයක් තිස්සේ පැවති නීතිමය ක්‍රියාමාර්ගය නිමාවට පත්ව ඇත.


මෙම ගැටළුව 2014 වසරේදී ආරම්භ වූ බව වාර්තා වේ. එකල පාතියා මාවත මස්ජිදයේ පැවැත්ම සම්බන්ධයෙන් ඇතැම් අන්තවාදී බෞද්ධ සංවිධාන විසින් ප්‍රදේශයේ පොලිසියට පැමිණිලි ඉදිරිපත් කර තිබුණි. කෙසේ වෙතත්, මස්ජිද් පරිපාලනය විසින් නිසි ලියාපදිංචි ලේඛන නිසි පරිදි ඉදිරිපත් කරනු ලැබීය.


කේ.ආර්.ටී.වි.නෙට්වර්ක්| දේශීය පුවත්


Decade-Long Legal Battle Over Dehiwala Mosque Closure Comes to an End!


The decade-long legal struggle involving the Urban Development Authority (UDA) concerning the closure of the Pathiya Mawatha Mosque in Dehiwala has officially concluded.


 The UDA recently withdrew the case it had filed in the Mount Lavinia Magistrate's Court seeking an order to demolish the mosque. This move brings a definitive end to the prolonged legal proceedings.


 The controversy began in 2014 when certain hardline Buddhist organizations lodged complaints with the local police regarding the mosque's existence. However, mosque authorities properly presented all required official registration documents in response.


KRTV Network | Local News

Comments