100 ரூபாய் குடிநீர் போத்தலை 130 ரூபாவிற்கு விற்ற வாழைச்சேனை 'அமிர்தம்' உணவகத்திற்கு 7.5 இலட்சம் ரூபாய் அதிரடி அபராதம்!
100 ரூபாய் குடிநீர் போத்தலை 130 ரூபாவிற்கு விற்ற வாழைச்சேனை 'அமிர்தம்' உணவகத்திற்கு 7.5 இலட்சம் ரூபாய் அதிரடி அபராதம்!
நுகர்வோர் விவகார அதிகார சபையால் (CAA) நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி, குடிநீர் போத்தல்களைக் கூடுதலான விலைக்கு விற்ற வாழைச்சேனை 'அமிர்தம்' உணவகத்திற்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே இந்த வர்த்தக மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது, அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாய் என அச்சிடப்பட்டிருந்த ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை (செப்டெம்பர் 10) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உணவக நிர்வாகம் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
சட்டவிரோத விலை அதிகரிப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் மீறல் தொடர்பான புகார்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உடனடியாகத் அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | நுகர்வோர் பாதுகாப்புச் செய்தி
රුපියල් 100ක පානීය ජල බෝතලයක් රුපියල් 130කට අලෙවි කළ වාළාචේනෙයි 'අමිර්තම්' ආපන ශාලාවට රුපියල් ලක්ෂ 7.5ක දැඩි දඩයක්!
පාරිභෝගික කටයුතු අධිකාරිය (CAA) විසින් නියම කර ඇති උපරිම සිල්ලර මිලට වඩා වැඩි මිලකට ඇසුරුම් කරන ලද පානීය ජලය අලෙවි කළ වාළාචේනෙයි 'අමිර්තම්' ආපන ශාලාවට වාළාචේනෙයි මහේස්ත්රාත් අධිකරණය විසින් රුපියල් 750,000ක දඩ මුදලක් නියම කර තිබේ.
වැටලීම සහ නඩු පැවරීම: මඩකලපුව දිස්ත්රික් පාරිභෝගික කටයුතු අධිකාරියේ විමර්ශන නිලධාරීන් විසින් පසුගිය ජුනි මස 4 වන දින සිදු කරන ලද හදිසි වැටලීමකදී මෙම නීති විරෝධී අලෙවිය අනාවරණය කරගන්නා ලදී.
එහිදී, උපරිම සිල්ලර මිල රුපියල් 100ක් ලෙස සටහන් කර තිබූ ලීටරයක පානීය ජල බෝතලයක් රුපියල් 130ක මුදලකට අලෙවි කර ඇති බව හෙළි විය. බ්රහස්පතින්දා (සැප්තැම්බර් 10) නඩුව විමර්ශනයට ලක් වූ අවස්ථාවේදී ආපන ශාලා කළමනාකාරීත්වය සිය වරද අධිකරණය හමුවේ පිළිගැනීමෙන් අනතුරුව මෙම දඩය නියම කෙරිණි.
මෙවැනි නීතිවිරෝධී වෙළඳ දැන්වීම් හෝ භාණ්ඩ අලෙවි කිරීම් පිළිබඳ තොරතුරු වේ නම්, කාර්යාල වේලාවන් තුළ 1977 යන ක්ෂණික ඇමතුම් අංකය හරහා පාරිභෝගික කටයුතු අධිකාරියට දැනුම් දෙන ලෙස බලධාරීන් ජනතාවගෙන් ඉල්ලා සිටී.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් | පාරිභෝගික ආරක්ෂණ පුවත්
Valaichenai 'Amirtham' Restaurant Fined Rs. 750,000 for Selling Rs. 100 Bottled Water at Rs. 130!
The Valaichenai Magistrate's Court has imposed a hefty fine of 750,000 rupees on the Valaichenai 'Amirtham' restaurant for selling bottled drinking water above the maximum retail price (MRP) mandated by the Consumer Affairs Authority (CAA).
The violation was uncovered during a sudden raid conducted by the Batticaloa District Consumer Affairs Authority intelligence officers on June 4th.
During the inspection, it was revealed that a 1-litre bottled water packet marked with an MRP of 100 rupees was being retailed at 130 rupees. When the case was taken up for hearing on Thursday (September 10), the restaurant management pleaded guilty to the charges before the court.
Authorities have urged the public to report any unlawful trade practices or consumer rights violations directly to the Consumer Affairs Authority during working hours via the hotline 1977.
KRTV Network | Consumer Protection News

Comments