அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு செப்டம்பர் 11 அன்று காத்தான்குடியில் ஏற்பாடு: அமைச்சர் சுனில் ஹந்துந்நெத்தி பிரதம அதிதியாகப் பங்கேற்பு
அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு செப்டம்பர் 11 அன்று காத்தான்குடியில் ஏற்பாடு: அமைச்சர் சுனில் ஹந்துந்நெத்தி பிரதம அதிதியாகப் பங்கேற்பு
நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி நாட்டிற்கு மாட்சி என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடிக் கிளையினால் ஒழுங்கமைக்கப்படும் விசேட மக்கள் சிநேகபூர்வ சந்திப்பு எதிர்வரும் 2026 செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள வைற்ஹவுஸ் (Whitehouse) மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துந்நெத்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். அரசாங்கத்தின் கடந்த இரண்டு ஆண்டுகால வேலைத்திட்டங்கள், சாதனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்து மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சந்திப்பில் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தி காத்தான்குடிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் செய்தி
රජයේ දෙවසරක පාලනය සනිටුහන් කරමින් ජාතික ජන බලවේගයේ ජන හමුවක් සැප්තැම්බර් 11 වනදා කාත්තන්කුඩියේදී: අමාත්ය සුනිල් හඳුන්නෙත්ති ප්රධාන ආරාධිතයා ලෙස එක්වෙයි
අපේ රජය: දෙවසරක පාලනය රටට සෙතක් මැයෙන් ජාතික ජන බලවේගයේ කාත්තන්කුඩි ශාඛාව මඟින් සංවිධානය කරනු ලබන විශේෂ මහජන හමුව එළඹෙන 2026 සැප්තැම්බර් මස 11 වන සිකුරාදා රාත්රී 8.00 ට කාත්තන්කුඩි වෙරළබඩ වයිට්හවුස් (Whitehouse) ශ්රවණාගාරයේදී පැවැත්වීමට නියමිතය. මෙම අවස්ථාවට ප්රධාන ආරාධිත අමුත්තා ලෙස කර්මාන්ත හා ව්යවසායකත්ව සංවර්ධන අමාත්ය සුනිල් හඳුන්නෙත්ති මහතා සහභාගී වීමට නියමිතව තිබේ. රජයේ පසුගිය දෙවසරක සංවර්ධන ක්රියාදාමයන්, ජනතා සේවාවන් සහ ඉදිරි ඉලක්කයන් පිළිබඳව මහජනතාව සමඟ සෘජුව සුහදව සාකච්ඡා කිරීම වෙනුවෙන් සංවිධානය කර ඇති මෙම හමුව සඳහා සියලු පාර්ශවයන්ට විවෘත ආරාධනයක් කර ඇති බව ජාතික ජන බලවේගය - කාත්තන්කුඩි සංවිධානය නිවේදනය කරයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන පුවත්
NPP Organizes Public Gathering in Kattankudy Marking Two Years of Governance on September 11: Minister Sunil Handunnetti to Attend as Chief Guest
National People’s Power (NPP) Kattankudy branch has scheduled a public meeting themed Our Government: Two Years of Dedicated Governance for the Nation on Friday, 11 September 2026, commencing at 8:00 PM at the Coastal Whitehouse Hall in Kattankudy. Minister of Industries and Entrepreneurship Development Sunil Handunnetti will participate as the chief guest and deliver the keynote address. Aimed at engaging directly with local residents, business community members, and civic figures to review governance performance over the past two years and deliberate upcoming development priorities, the NPP Kattankudy electorate executive committee extends an open invitation to the broader public to participate.
KR TV Network - Local News / Political News

Comments