Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அம்பிட்டியே சுமனரதன தேரர் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு: மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு!


 அம்பிட்டியே சுமனரதன தேரர் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு: மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு!


புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமனரதன தேரரை எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 நீதிமன்றத்தில் இன்று (07.09.2026 / 08.09.2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, விசாரணை நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


 மட்டக்களப்பில் உள்ள புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று அங்கு அதிகாரிகளின் உத்தியோகபூர்வக் கடமைகளுக்குத் தடையாக நடந்து கொண்டமைக்காகவே தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


செய்தியாளர்: ஃபர்ஹானா பதுர்தீன்


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 අම්පිටියේ සුමනරතන හිමි සැප්තැම්බර් 11 දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කෙරේ - මඩකලපුව මහේස්ත්‍රාත් අධිකරණයෙන් නියෝගයක්!


භූ විද්‍යා සමීක්ෂණ හා පතල් කාර්යාංශයේ නිලධාරීන්ගේ රාජකාරියට බාධා කිරීමේ චෝදනාව මත අත්අඩංගුවට ගන්නා ලද අම්පිටියේ සුමනරතන හිමියන් එළඹෙන සැප්තැම්බර් 11 වන දින දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කරන ලෙස මඩකලපුව දිස්ත්‍රික් මහේස්ත්‍රාත් අධිකරණය නියෝග කර තිබේ.


 උන්වහන්සේ අද දින අධිකරණය වෙත ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව මෙම රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමේ නියෝගය නිකුත් කර ඇත.


 මඩකලපුව භූ විද්‍යා සමීක්ෂණ හා පතල් කාර්යාංශයේ නිලධාරීන්ගේ රාජකාරී කටයුතුවලට බාධා කිරීමේ සිද්ධියක් මුල් කරගනිමින් මෙම අඩස්සියට පත්කිරීම සිදු කර ඇත.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


Ven. Ampitiye Sumanarathana Thero Remanded Until September 11 by Batticaloa Magistrate's Court!


The Batticaloa District Magistrate's Court has ordered that Ven. Ampitiye Sumanarathana Thero be remanded in custody until September 11, following his arrest over charges of obstructing the official duties of Geological Survey and Mines Bureau (GSMB) officials.


The remand order was issued after the monk was formally produced before the magistrate's court today.


 The legal action and subsequent custody stem from the incident where he allegedly interfered with officers carrying out their professional responsibilities at the regional GSMB office.


Reporter: Farhana Baturdeen 


KRTV Network | Local News

Comments